இப்போது இராமநாதபுரம் மாவட்டமாக உள்ள பகுதி மற்றும் சிவகங்கை மாவட்டம், விருதுநகர் மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்கள் அடங்கிய பகுதி பாண்டிய நாட்டின் கீழ்த்திசைப் பகுதியாக இருந்தது. இந்த நிலப்பரப்பு மறவர் நாடு என்றும் அழைக்கப்பட்டது. மறவர் நாடு பாண்டிய பேரரசின் ஆட்சிக்குள் அடங்கிய பகுதியாகவே எப்போதும் விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மறவர் நாட்டைச் சேர்ந்தவர்கள் அன்றும் சரி, இன்றும் சரி பாண்டியகள் என்றே சாதாரணமாக அழைக்கப்படுகின்றார்கள். சாதாரணப் பொது மக்களும் பெருமையோடு தாங்களுக்குப் 'பாண்டியர்” என்று பெயர் வைத்துக் கொள்கின்றார்கள். மறவர் நாடு பிற்காலத்தில் 'சேதுநாடு” என்றழைக்கப்பட்டது.
'சேது” என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு புராண காலச் செய்தி ஒன்று உள்ளது. 'சேதுநாடு” என்று அழைக்கப்படும் இன்றைய இராமநாதபுரம் இராமாவதாரத்தோடு பெரிதும் இணைத்துப் பேசப்படுகிறது. இராவணனின் நாடாக இருந்த இலங்கைத் தீவுச் சீதாதேவி சிறை அடைக்கப்பட்டிருப்பதை அனுமார் வழியாக தெரிந்து கொண்ட இராமபிரான் அங்கு செல்ல வேண்டிச் சுக்கீரவனின் வானரப் படைகளைக் கொண்டு பாலம் அமைத்தார். அந்தப் பாலத்திற்குத் திருவணை என்றும் 'சேது” என்றும் பொருள் உள்ளது. அந்தப் புனிதமான பாலத்திற்கு சேதுவிற்கு பொருத்தமான காவலர்களை நியமிக்க நினைத்தாராம் இராமபிரான். அச்சமயம் அந்த பகுதியில் வீரத்தோடு விளங்கிய மறவர்குலத் தலைவர் ஒருவரை நியமித்தார். அவருக்கு சேதுபதி என்று பெயராகி வந்ததாம். அப்படிப்பட்ட புனிதமான வழியில் வந்தவர்கள் சேதுபதிகள் என்று புராண கால வழி வந்த செய்திகள் கூறுகின்றன. இந்த சேதுபதி மரபினருக்கு 'திருவணை”க் காவலன் என்ற பெருமைக்குரிய பெயரும் உண்டு.
இராமபிரானுக்கு பாலம் கட்ட உதவி செய்து வானரர்கள் கட்டிய பாலத்திற்குக் காவல் உதவி சேது என்ற பாலத்தைக் காத்து, சேதுபதி திருவணைக் காவலன் என்ற சிறப்புப் பெயர்களைப் பெற்றது என்பது எல்லாம் புராண காலச் செய்திகள் என்று சொல்பவர்களும் உண்டு. மதுரையை ஆட்சி செய்த முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் வரலாற்று ஆவணங்கள் இராமநாதபுரம் சீமையை ஆண்ட அரசர்களை சேதுபதி என்றே அழைக்கின்றனர்.
சேதுபதி அவர்களால் தேசத்தில் ஆளப்பட்ட பூமி இராமநாதபுரம் சீமை, சிவகங்கை சீமை, புதுக்கோட்டை பகுதி தஞ்சாவூர் சில பகுதிகளைக் கொண்டதாக இருந்தது. அதற்கு மறவர் நாடு என்று பெயர்.
இந்த மறவர் நாட்டை ஆளும் பொறுப்பு எப்படி சடையக்கத் தேவர் என்றழைக்கப்படும் உடையன் சேதுபதிக்கு வந்தது?
மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு கிருஷ்ணப்ப நாயக்கர் சிறந்ததொரு வலிமையான ஆட்சியை நடத்தி வந்தார். அச்சமயம் மறவர் நாடு என்றழைக்கப்படும் இராமநாதபுரம் பகுதி முழுவதற்கும் அவர் அரசராக இருந்தார். மறவர் நாட்டில் காடுகள் நிறைந்திருந்தன. காடுகளென்றால் சாதாரணமான காடுகள் அல்ல. மிக அடர்ந்த காடுகளாக இருந்தன. காடுகளில்
மன்னர் சொல்லைக் கேட்டு மகிழ்ந்த சடையக்கத் தேவர் தனது வீரத்திற்குக் கிடைத்த பரிசை எண்ணி மகிழ்ச்சி அடைந்தார். புதிதாக ஒரு மறவர் நாட்டைச் சடையக்கத் தேவர் மூலமாக உருவாக்கிய பெருமை முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரையே சேரும்.
'சேது” என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு புராண காலச் செய்தி ஒன்று உள்ளது. 'சேதுநாடு” என்று அழைக்கப்படும் இன்றைய இராமநாதபுரம் இராமாவதாரத்தோடு பெரிதும் இணைத்துப் பேசப்படுகிறது. இராவணனின் நாடாக இருந்த இலங்கைத் தீவுச் சீதாதேவி சிறை அடைக்கப்பட்டிருப்பதை அனுமார் வழியாக தெரிந்து கொண்ட இராமபிரான் அங்கு செல்ல வேண்டிச் சுக்கீரவனின் வானரப் படைகளைக் கொண்டு பாலம் அமைத்தார். அந்தப் பாலத்திற்குத் திருவணை என்றும் 'சேது” என்றும் பொருள் உள்ளது. அந்தப் புனிதமான பாலத்திற்கு சேதுவிற்கு பொருத்தமான காவலர்களை நியமிக்க நினைத்தாராம் இராமபிரான். அச்சமயம் அந்த பகுதியில் வீரத்தோடு விளங்கிய மறவர்குலத் தலைவர் ஒருவரை நியமித்தார். அவருக்கு சேதுபதி என்று பெயராகி வந்ததாம். அப்படிப்பட்ட புனிதமான வழியில் வந்தவர்கள் சேதுபதிகள் என்று புராண கால வழி வந்த செய்திகள் கூறுகின்றன. இந்த சேதுபதி மரபினருக்கு 'திருவணை”க் காவலன் என்ற பெருமைக்குரிய பெயரும் உண்டு.
இராமபிரானுக்கு பாலம் கட்ட உதவி செய்து வானரர்கள் கட்டிய பாலத்திற்குக் காவல் உதவி சேது என்ற பாலத்தைக் காத்து, சேதுபதி திருவணைக் காவலன் என்ற சிறப்புப் பெயர்களைப் பெற்றது என்பது எல்லாம் புராண காலச் செய்திகள் என்று சொல்பவர்களும் உண்டு. மதுரையை ஆட்சி செய்த முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் வரலாற்று ஆவணங்கள் இராமநாதபுரம் சீமையை ஆண்ட அரசர்களை சேதுபதி என்றே அழைக்கின்றனர்.
சேதுபதி அவர்களால் தேசத்தில் ஆளப்பட்ட பூமி இராமநாதபுரம் சீமை, சிவகங்கை சீமை, புதுக்கோட்டை பகுதி தஞ்சாவூர் சில பகுதிகளைக் கொண்டதாக இருந்தது. அதற்கு மறவர் நாடு என்று பெயர்.
இந்த மறவர் நாட்டை ஆளும் பொறுப்பு எப்படி சடையக்கத் தேவர் என்றழைக்கப்படும் உடையன் சேதுபதிக்கு வந்தது?
மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு கிருஷ்ணப்ப நாயக்கர் சிறந்ததொரு வலிமையான ஆட்சியை நடத்தி வந்தார். அச்சமயம் மறவர் நாடு என்றழைக்கப்படும் இராமநாதபுரம் பகுதி முழுவதற்கும் அவர் அரசராக இருந்தார். மறவர் நாட்டில் காடுகள் நிறைந்திருந்தன. காடுகளென்றால் சாதாரணமான காடுகள் அல்ல. மிக அடர்ந்த காடுகளாக இருந்தன. காடுகளில்
பாம்புகளும், துஷ்ட மிருகங்களும் தாக்கி வழிப் பயணிகளுகக்குத் துன்பம் தந்ததைவிட பல மடங்கு துயரத்தைக் கள்வர்கள் கொடுத்தார்கள். மறவர் நாட்டில், இந்தியாவின் தென்முனைக் கிழக்காக அமையப் பெற்றிருந்த இராமேஸ்வரம் பாரத தேசம் முழுவதும் புகழ்பெற்ற புண்ணியத்தலமாக விளங்கியது. அத்தோடு தனுஷ்கோடி என்ற உலகப்புகழ் வாய்ந்த புண்ணியத் தீர்த்தமும் இங்குதான் அமைந்துள்ளது. பாரத தேசத்தில் காசியில் இருந்தும் பக்தர்கள் தங்களின் பாவங்களைத் தொலைக்கக் காடுகளையும், கள்வர்களையும் கடந்து உயிரை வெறுத்து புண்ணியத்திற்காக இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி காலத் தரிசித்த வண்ணம் இருந்தார்கள். இந்த நிலையில் மதுரையை மாட்சிமை பொருந்தி ஆண்ட முத்து கிருஷ்ணப்பருக்குக் குருவானவர் ஒருவர் இராமேஸ்வரம் சென்று இராமனாத சுவாமிகளைத் தரிசித்துவிட்டுத் தனுஷ்கோடியில் தீர்த்தமாடப் பெரிதும் விரும்பினார்.
ஏன் இப்படி குருஜிக்காக முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் பதறுகின்றார்? அதற்குரிய காரணம் இருந்தது. அரசருக்கு மத விஷயத்தில் மட்டும் குருவாக குருஜி விளங்கவில்லை. அரசியல் ஆட்சி விவகாரத்திலும் தன்னிகரற்ற தகுந்த ஆலோசனைகளை குருஜி மதி யூகத்தோடு காத்து கொண்டிருந்தார். அரசருக்கு
'தளபதி எங்கே - உடனே வரச் சொல்” மன்னர் வீரன் ஒருவனுக்கு கட்டளையிட்டார். தளபதி வந்து பணிந்து நின்றார்.
'தளபதி” அவர்களே! நமது குருஜி இராமேஸ்வரம் தீர்த்தயாத்திரை செல்ல ஆசைப்படுகிறார். அதற்குப் பொருத்தமான படை வீரர்களைத் தேர்ந்தெடுத்து என் முன்னால் கொண்டு வாருங்கள். அத்தோடு மறவர் நாட்டில் இருந்து ஒரு மாவீரனையும் குருஜிக்கு துணையாக அனுப்பினால் நல்லது அல்லவா?
'ஆமாம் அரசே! மறவர் நாட்டிலிருந்தே ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்தால் நல்லது அரசே!” ஒரு வாரம் கழிந்தது. போகலூர் என்ற ஊரின் தலைவராக இருந்த சடையக்கத் தேவர் எனப்படும் மாவீரர் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கரின் முன்னால் பெருமையோடு கொண்டுவரப் பெற்றார்.
மன்னர் சடையக்கத் தேவரைப் பார்த்தவுடன் அவரது உருவம், பேச்சில் வீசிய அறிவொளி முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கரைப் பெரிதும் கவர்ந்து தன் வயப்படுத்தியது. சடையக்கத் தேவரும் மன்னருக்கு ஏற்ற மாதிரி நடந்து கொண்டார். உன்னை நம்பி என் குருநாதரை உங்களுடன் தீர்த்த யாத்திரைக்கு அனுப்பி வைக்கின்றேன் என்றார். உங்கள் ஆணை மன்னவா! என்றார் பதில் முழக்கமாக சடையக்கத் தேவர்.
மறவர் நாட்டில் காடுகளைக் களைந்து கள்வர்களை ஓட.. ஓட விரட்டி குருஜியை இராமேஸ்வரம் - தனுஷ்கோடி தீர்த்த யாத்திரைக்கு சடையக்கத் தேவர் அழைத்துச் சென்றார். குருஜியின் மனம் முழுவதிலும் இடம் பிடித்தார் சடையக்கத் தேவர்.
குருஜி மதுரைக்குத் திரும்பியதும் தன் மன்னனும் மாணவனுமான முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கரைச் சந்தித்தார். மன்னவா... என் மனம் குளிர்ந்தது! உன் நண்பன் சடையக்கத்தேவன் மூலம் இறைவனின் பரிபூரணமான அருளை நான் பெற்றேன். உன் ஆட்சி நிலைக்க நீ நீடித்த ஆயுளைப் பெற அந்த இராமநாதஸ்வாமி உனக்கு அருள்பாலிப்பார்” என்று மனம் மகிழ்ந்து ஆசீர்வதித்தார் குருஜி.
சடையக்கத் தேவருக்கு ஏதாவது செய்தே தீருவது என்ற உறுதிப்பாட்டுடன் அன்றிரவு நிம்மதியாகத் தூங்கச் சென்றார்.மறுநாள் அரசரின் ஆலோசனைக் குழு மறவர் நாடு பற்றியும், சடையக்கத் தேவரைப் பற்றியும் நிறைய ஆலோசனை செய்தது. சடையக்கத் தேவரிடம் சீர்கெட்டுக் கிடக்கும் மறவர் திருநாட்டை முறைப்படுத்திட ஒரு காவலன் தேவை, அதற்கு சரியான ஆள் இந்த சடையக்கத் தேவர் தான் என முடிவு செய்யப்பட்டது.

No comments:
Post a Comment