Tuesday, 10 May 2011

சின்ன மருது மகன் துரைச்சாமி

துரைச்சாமி சிவகங்கைச் சீமையில் ஆங்கிலக் கிழக்கந்தியக் கம்பெனியர்க்கு எதிராக 1785 முதல் 1801 முடியப் போராடி தம் இன்னுயிர் ஈந்த சின்ன மருதுவின் மகன்.

பொருளடக்கம்

[மறை]

[தொகு] வாழ்க்கைச் சுருக்கம்

சின்ன மருது மகன் துரைச்சாமியின் இயற்பெயர் முத்து வடுக நாத துரை என்றும் பின்னர் அப்பெயர் துரைச்சாமி என மருவியது என்றும் சிவகங்கை அம்மானை எனும் நூல் மூலம் அறியமுடிகிறது. துரைச்சாமி உட்பட 11 விடுதலைப் போராளிகளைப் பிடித்துக்கொடுத்தால் 1000 கூலிச்சக்கரங்கள் ( 18ம் நூற்றாண்டு நாணயம்) பரிசாக வழங்க்கப்படும் என்று ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனித் தளபதி கர்னல் அக்னியூ 1801, அக்டோபர் 1 இல் சிவகங்கை குடிமக்களுக்கு ஒரு பொது அறிவிப்பை பிரகடனப்பத்தினார். மருது சகோதரர்கள் 1801, அக்டோபர் 24 இல் தூக்கிலிடப்பட்ட பின்னர் 15 வயதே ஆன துரைச்சாமி உட்பட 73 விடுதலைப் போராளிகளை மலேயாவின் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவிற்கு (இன்றைய பினாங்கு) 1802, பெப்ரவரி 11 இல் தளபதி வெல்ஸ் நாடுகடத்தி அனுப்பிவைத்தார்[1].

[தொகு] பினாங்கில் துரைச்சாமி

1818 ஆம் ஆண்டு தளபதி வெல்ஸ் (Colonel Welsh) பினாங்குக்குச் சென்றபோது உடல் நலம் குன்றிய தோற்றத்துடன் காணப்பட்ட துரைச்சாமியைக் காண நேரிட்டது. துரைச்சாமியின் இத்தோற்றம் வெல்ஸ் தம் இதயத்தில் கத்தி பாய்ந்தது போன்று இருந்தது என குறிப்பிடுகின்றார்[2].

[தொகு] துரைச்சாமியின் இறுதி நாட்கள்

1891, மே 18 ஆம் நாள் போராளி துரைச்சாமியின் மகன் மருது சேர்வைகாரன் என்பான் மதுரைக் கலக்டரிடம் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த மனுவில் துரைச்சாமியின் இறுதி நாட்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். துரைச்சாமி பினாங்கிலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டார். அவர் ஆங்கில அரசிடம் பாதுகாப்புக் கோரி மதுரையில் தங்கியிருக்க அனுமதி கேட்டிருந்தார். ஆனால் திடிரென துரைச்சாமி நோய்வாய்ப்பட்டு சிவகங்கைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு காலமானார் என்று அவரது மகன் குறிப்பிடுகின்றார்

No comments:

Post a Comment