மதுரையில் நிறுவப்பட்டுள்ள மருது சகோதரர்களின் சிலை அடுத்த மாதம் முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்படவுள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் இதுகுறித்து மதுரையில் கூறுகையில், நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து முதன்முதலில் போர் துவங்கியது மருது சகோதரர்கள்தான்.இதற்காக அவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிட்டு கொல்லப்பட்டனர். இதன் நினைவாக மருது பாண்டியர்களுக்கு மதுரையில் சிலை நிறுவப்படுகிறது. குதிரையில் வாள் ஏந்தி போருக்கு செல்லும் தோற்றத்துடன் 10 அடி உயரத்தில் வெண்கல சிலை உருவாக்கப்பட்டுள்ளது. ராதாகிருஷ்ணன் என்ற ஸ்தபதி இதனை உருவாக்கியுள்ளார். மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் 10 அடி உயர பீடத்தில் சிலை அமைக்கப்படுகிறது. ரூ. 25 லட்சம் செலவில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. மருதுபாண்டியர்கள் நினைவு தினமான அக்டோபர் 27ம் தேதி முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார். திருப்பத்தூரில் மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடத்தில் நினைவு பூங்கா அமைக்கவும் தீர்மானித்துள்ளோம். மருது பாண்டியர் குறித்த ஆராய்ச்சிக்கு உதவும் வகையில் அவர்களது பெயரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளை தொடங்கி ரூ.20 லட்சம் டெபாசிட் செய்யப்படும். மருதுபாண்டியர்களுடன் போரில் ஈடுபட்ட 72 தளபதிகள் பினாங்கு தீவுக்கு கடத்தப்பட்டனர். அனைத்து ஜாதிகளையும் சேர்ந்த அவர்களின் வாரிசுகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்கின்றனர். அவர்களுக்கு அரசு உதவ வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றார் பொன்.
No comments:
Post a Comment