Monday 29 July 2013

அகமுடையார் - தகவலும் பட்டங்களும்!

அகம் + உடையார் = அகமுடையார்

அகமுடையார் என்றால் அகத்திற்கு தேவையான அறிவும் - வீரமும் இயல்பாக உடையவர் என்று பொருள். மேலும் அகம்படியர் என்பதற்கு எதிரிகளை படிய வைக்கும் திறனை அகத்தில் கொண்டவர் என்றும் பொருளும் உண்டு. பொதுவாக அகமுடையார் என்பதன் பொருள் நில உடைமையாளர், நம்பிக்கைக்குரியவர், பரந்த சிந்தனையாளர் என்று பலவாறாக பொருளில் இலக்கியங்கள் ஊடாக அறிந்துகொள்ள முடிகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் முக்குலத்தோர் சமுதாயத்தில் ஒன்றாகவே அகமுடையார் குலம் இனம்காணப்படுகிறது. அகமுடையார் குலத்தில் சேர்வை , தேவர், பிள்ளை, முதலியார் உள்ளிட்ட இந்த நான்கு பட்டங்களே பெரும்பான்மையான காணமுடிகிறது.

அகமுடையார்களில் "சேர்வை" என்றால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட குழுவினர் எனப்படும். பொதுவாக மன்னராட்சி காலங்களில் ஒவ்வொரு படைப்பிரிவின் தளபதிகளும் சேர்வை என்றே அழைக்கப்பட்டனர். அதுவே, காலப்போக்கில் சேர்வை என்று பட்டமாக மருவி இன்று அடையாளப்படுகிறது. மேலும், சேர்வை என்றால் அக்குழுவின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் என்று பொருள் படும். அரசுக்கு அமைச்சரவை சார்ந்த அனைத்துவிதமான சேவை செய்தவர்களை சேர்வைக்காரர் என்றும் அழைத்தனர். மாமன்னர் மருது பாண்டியர்களின் வழிவந்த அகமுடையார் குலத்தினர், ”ராஜகுல அகமுடையார்” என்று இன்று அடையாளப்படுகின்றனர்.

அகமுடையார்களில் "தேவர்" பட்டம் என்பது தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் நாகப்பட்டினம் - திருவாரூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாழும் அகமுடையார்களுக்கு தேவர் பட்டமே. தஞ்சை டெல்டா பகுதிகளில் தேவர் பட்டம் கொண்டுள்ள அகமுடையார் இனத்தினர், ”பதினெட்டு கோட்டை பற்று அகமுடையார்” என்ற குலபிரிவை சார்ந்த்துள்ளனர். தமிழக வரலாற்று ஆவணங்களின் வாயிலாக முற்கால சோழர்கள் அனைவருமே அகமுடையார் குலத்தை சார்ந்தவர்களாகவே இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. கல்லணையை கட்டிய கரிகால சோழனும் ”இரும்புத்தலை அகமுடையார்” குல பிரிவை சார்ந்தவரே. இதை தவிர்த்து, ”சித்தர் மரபு அகமுடையார்” மற்றும் ”தஞ்சை ராஜ வம்சத்து அகமுடையார்” என்ற பிரிவும் இன்றளவும் வேதாரண்யம் - முத்துப்பேட்டை போன்ற தஞ்சை கடலோர பகுதிகளில் வாழும் அகமுடையார் இன மக்களுக்கு உண்டு.

அகமுடையார்களில் பொதுவாக "பிள்ளை" பட்டம் என்பது நிலக்கிழார்களையே குறிக்கிறது. ”கள்ளர் மறவர் கணத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆகினாரே” என்ற பாடல் வாயிலாக, போர்த்தொழிற்கு அடுத்த கட்ட நகர்வான வேளாண்மை தொழிலில் ஈடுபட ஆரம்பித்து, அதிலேயே நில நீட்சிகளோடு வாழ்ந்தவர்களின் வழித்தோன்றல்கள் ”பிள்ளை” என்ற பட்டத்தோடு அறியப்பட்டனர்.

அகமுடையார்களில் "முதலியார்" என்ற பட்டம் உடையவர்கள் வட தமிழகத்தில் பெரும்பான்மையாக செருமி வாழ்கின்றனர். முதலியார் என்பதும் போர்ப்படை தளபதிகளையே குறிக்கின்றது. முதலி என்பது ஒரு படையை தலைமைத்தாங்குகின்ற முதன்மையான தளபதி என்று  பொருள் தருகிறது. செங்குந்தர் சாதியினருக்கும் முதலியார் பட்டமிருப்பதால் ஒருசிலருக்கு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.  வடதமிழகத்தில் வாழும் அகமுடையார்கள் அனைவருக்கும் பட்டம் என்பது முதலியார் என்று இருந்த போதிலும், அவர்கள் தங்களை அகமுடையார் களாகவே அடையாளப்படுத்தி கொள்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.


அகமுடையார் குல பிரிவுகள்

ராஜகுலம்
கோட்டைப்பற்று (பதினெட்டு கோட்டைப்பற்று)
இரும்புத்தலை
ஐவளிநாடு
நாட்டுமங்களம்
ராஜபோஜ
ராஜவாசல்
கலியன்
சனி
மலைநாடு
துளுவன் ( துளுவேளாளர் )

அகமுடையார் குல பட்டங்கள்

அகமுடைய தேவர்
அகமுடைய சேர்வை
அகமுடைய பிள்ளை
அகமுடைய தேசிகர்
அகமுடைய முதலியார்
அகமுடைய வேளாளர் (துளுவ வேளாளர்)
அகமுடைய உடையார்
அகமுடைய அதிகாரி
அகமுடைய மணியக்காரர்
அகமுடைய பல்லவராயர்



தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கோயம்புத்தூர்,திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தேவர் என்ற பட்ட பெயருடனும், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சேர்வை என்ற பட்டத்தோடும், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம்,கடலூர், சென்னை, பெரம்பலூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் முதலியார், துளுவ வேளாளர், உடையார் என்ற பட்டங்களோடும் அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திர,கேரளா உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பலவேறு பட்டப்பெயர்களுடன் வசித்து வருகின்றனர். இதைதவிர்த்து, இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும்பாலான அகமுடையார் குலத்தினர் பல தலைமுறைகளாக பூர்வீகமாக வசித்து வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து பகுதியிகளிலும் அகமுடையார் இனத்தினர் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர்.தென் தமிழகத்தில் அகமுடையார்களை முக்குலத்தோர் பிரிவுகளில் ஒன்றாகவும் கருதி வருகின்றனர்.

வட தமிழகத்தை பொருத்தவரையிலும் அகமுடையார் இனத்தினர் தனித்தே அடையாளப்பட்டு வருகின்றனர்.பெரும்பாலும் அகமுடையார் இனத்தினரின் பட்டங்களையும், பட்ட பெயர்களையும் வைத்து பலவாறு தமிழகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றனர்.தென் தமிழகத்தில் அகமுடையார்களை சேர்வை என்றும் மேலும் முதலியார்,பிள்ளை என்ற பட்டங்களுடன் வட தமிழகத்திலும், தேவர்,பிள்ளை,அதிகாரி,நாயக்கர், தேசிகர் போன்ற பல பட்ட பெயர்களுடன் மத்திய தமிழகத்திலும் அறியபடுகின்றனர்.

மயிலப்பன் { சேர்வை }


மறவர் சீமை ஒரு பகுதியான முதுகுளத்தூர் நகருக்குத் தென்மேற்கே இருப்பது சித்திரங்குடி என்ற கிராமம். இந்த ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்தான் மயிலப்பன் என்பவர். இவர் முகவை சேதுபதி மன்னரின் தளபதியாக இருந்தார். இவர் ‘மயிலப்பன் சேர்வை” என அழைக்கப்பட்டார். கி.பி. 1795ஆம் ஆண்டின் துவக்கத்தில் கம்பெனியார் திடீரென இராமநாதபுரம் அரண்மனையை வளைத்து சேதுபதி மன்னரை கைது செய்தனர். திருச்சிக் கோட்டையில் இருந்து முத்துராமலிங்க சேதுபதியை காவலர்களுக்கு தெரியாமல் தப்பிக்கவைக்க மயிலப்பன் சேர்வை முயன்றார்.
அத்திட்டம் நிறைவேறவில்லை. இராமநாதபுரம் சீமைக்கு திரும்பி வந்து நாட்டுத் தலைவர்களை சந்தித்து, மன்னர் விடுதலை பெறுவதற்கான முயற்சிகளைக் குறித்து ஆலோசித்தார். அப்பொழுது நடைபெற்ற முதுகுளத்தூர் வட்டாரத்தில் கிளர்ந்து எழுந்த மக்கள் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கி நடத்திய வீரபுருசர் இவர்தான் .அப்பொழுது உள்ள காலகட்டத்தில் மருது பாண்டியர்களுக்கு முகவை மன்னர் முத்துராமலிங்க சேதுபதிக்கும் வைகை ஆற்று நீரின் சம்பந்தமாகவும் பல எல்லைப் பிரச்சனைகள் சம்பந்தமாக அவ்வப்பொழுது பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்ற அச்சமயத்தில் மயிலப்பர் சேதுபதியின் அன்புக் கட்டுப்பாட்டிருந்ததினால் மருதுபாண்டியருக்கும் அவருக்கும் பகை உணர்வு இருந்தது.
காலப்போக்கில் மருதுபாண்டியரின் விடுதலை போராட்டத்தை ஆரம்பித்த பொழுது அவரின் உண்மையான குணத்தைப் புரிந்து அவரின் நோக்கத்தை திருச்சிக் கோட்டையில் கைதாகிய முத்துராமலிங்க சேதுபதியிடம் விபரம் சொல்லி மருதுபாண்டியரின் பால் உள்ள கசப்பான நிலையை மறையச் செய்தார். மயிலப்பர், சேதுபதி, மருதுபாண்டியர் இணைந்து செயல்பட்டனர்.
அதற்கு ஆதாரமாக சொல்ல வேண்டுமாயின் கமுதி கோட்டையைத் தகர்த்து அங்குள்ள போராளிகளை விடுதலை செய்ய மருதுபாண்டியர் கொடுத்துதவிய வீரர்கள் மற்றும் போர் ஆயுதங்கள், அந்நாளில் ஆங்கிலேயர்களுக்கு பல வழிகளில் கடுக்காய் கொடுத்த பெரிய போராளி வீரர்கள் இந்த ‘மயிலப்ப சேர்வை”, ‘நைனப்பன் சேர்வையும் பெரியமருதுவும்” நைனப்பன் சேர்வை என்ற வீரமிக்க தளபதி ஒருவர் மருதுபாண்டியர்களின் படையில் இருந்தார். அவரது வீரத்தையும், உடல் வலிமையையும் பற்றிக் கேள்வியுற்ற பெரிய மருது அவர்கள் அதைச் சோதிக்க விரும்பினார்.

நைனப்பன் தேவர் {சேர்வை}


‘நைனப்பன் சேர்வை” நான் உங்களுக்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன், ஏற்றுக்கொள்ளச் சம்மதமா? எனக் கேட்டார் பெரிய மருது பாண்டியர். ‘சரி அரசே எதுவென்றாலும் நான் ஏற்றுக் கொள்கின்றேன். உங்கள் சித்தத்தை என் கடமையாக ஏற்றுக் கொள்கிறேன்” என்றார் நைனப்பர். போட்டி இதுதான். சிவகங்கைக்கும் கடியாவயல் என்னுமிடத்திற்கும் உள்ள தூரம் சுமார் 25 கிலோமீட்டர் ஆகும். இந்த 25 கி.மீட்டர் தூரத்திற்கும் பெரிய மருதுபாண்டியர் குதிரையில் இருந்தபடி போய் வருவார். ஆக மொத்தம் 50 கி.மீட்டர். இந்த தூரத்தை நைனப்ன் சேர்வை குதிரைக்குச் சமமாக ஓடிக்கடக்க வேண்டும். இதுதான் போட்டி. போட்டி தொடங்கியது. ‘நைனப்பன் சேர்வை அவர்களே! நீங்கள் என் குதிரைக்கு முன்னதாக இரண்டு பல்லாங்கு தூரம் ஓடுங்கள். அதன் பிறகு நான் புறப்படுகின்றேன் என்றாராம். ஓடினார்…. பின்னாலேயே குதிரையும் பாய்ந்து வந்தது. அருகில் குதிரை வந்ததும் நைனப்பன் சேர்வை பெரிய மருது அவர்கள் அமர்ந்திருந்த குதிரையின் பின்னாலேயே நெருக்கமாக ஓடினார். குதிரை தன் இயல்பான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. நைனப்பரும் ஓடினார். வழியில் பார்த்தவர்களெலலாம் படபடப்பாகப் பேசிக் கொண்டார்கள.
சிலர் என்ன இது கொடுமை! மனிதனையும் குதிரையையும் ஒன்றாக பாவிப்பார்? என பேசிக்கொண்டனர் . பலர் ‘சரி அரசர் செய்தால் எதிலும் ஒரு நல்ல உள்நோக்கம் மறைந்திருக்கும.; நாட்டை நல்ல முறையில் ஆள்பவரும் மக்களைக் கண்ணாக மதித்து ஆள்பவரும் ஆனா மாமன்னர்கள் கொடுமையாக எதையும் செய்யமாட்டார்” என்று பேசிக் கொண்டனர்.ஓடிக் கொண்டிருந்த நைனப்பரின் காலில் ஒரு கருவேல முள் குத்திவிடுகிறது. போட்டி அவ்வளவுதான் என்றுதானே நினைப்பீர்கள், அதுதான் இல்லை. அந்த முள்ளை எடுப்பதற்காக உட்கார்ந்து நேரத்தைச் செலவிட்டால் குதிரை மறைந்துவிடுமே! என்று யோசிக்கும் நேரத்தில் நைனப்பர் தனது இடுப்பில் இருந்த ‘வளரி” என்ற ஆயுதத்தால் முள் தைத்த காலை தூக்கி முள்ளை உள் நோக்கி அழுத்தினார். முள் கால் பாதத்திற்குள் நுழைந்துவிடுகிறது. வலியை பொறுத்துக் கொண்டு குதிரையோடு சேர்ந்து ஓடி கடியாவயலை அடைந்துவிடுகிறார். மறுபடியும் திரும்பிச் சிவகங்கை நோக்கி ஓட முயற்சித்த நைனப்பன் சேர்வையைத் தடுத்து அணைத்துக் கொண்டார் மாமன்னர் பெரியமருது பாண்டியர்.
அவரது கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
‘நைனப்பன் சேர்வை உங்களின் வீரத்தை நமது சிவகங்கை சீமை மட்டுமல்ல இந்த உலகமே தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் இந்தக் கடுமையான போட்டியை நான் வைத்தேன். நானும் காட்டில் பல சமயம் பல கிலோமீட்டர் தூரத்தைக் குதிரையைவிட வேகமாக ஓடியெல்லாம் கடந்திருக்கின்றேன். உங்களது வீரம் வாழ்க! வைத்தியரைக் கூப்பிடுங்கள் நைனப்பரின் காலில் இருக்கும் முள்ளை உடனே அகற்றுங்கள்” என்று கட்டளையிட்ட மன்னர் ஊரும் – உலகமும் அறியும் வண்ணம் நைனப்பன் சேர்வையைப் பாராட்டி மாலையும் மரியாதையும் பொன், பொருளும் வழங்கினார் மாமன்னர் பெரிய மருதுபாண்டியர். நைனப்பன் சேர்வை அவர்களிடம் இருந்த வளரி இன்று சிவகங்கை அருங்காட்சியில் உள்ளது. அதை அவரின் வாரிசுத்தாரர் கொடுத்துள்ளனர். இன்று அதன் வடிவம் மாறாமல் புதியதாக செய்யப்பட்டது போல் உள்ளது. ஒரு சமயம் மருதுபாண்டியருடன் சென்ற நைனப்பன் சேர்வைக்கு வேட்டைக்கு காட்டிற்குச் செல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. இருவரும் காட்டு வழியாக சென்று கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக புலிவொன்று புதரிலிருந்து வெளிப்பட்டு நைனப்பன் சேர்வையை நோக்கிப் பாயந்தது. புலியோடு போராடி அதனைக் கொன்றார். பிறகு அப்புலியின் பற்களைப் பிடுங்கிப் பெரிய மருதுபாண்டியர் அவர்களின் காலடியில் ‘அரசே இது என் காணிக்கை” என்று கூறிப் புலிப் பற்களை வைத்தார். ஆனால் இப்படிப்பட்ட மாவீரனைப் புலியின் பல்பட்ட, நகம்பட்ட காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரைக் கொன்று வைத்தியர்களைத் தோல்வி அடையச் செய்தன. நைனப்பன் சேர்வை மறைந்த போது வைர நெஞ்சத்தை உடையவராக இருந்த மாமன்னர்கள் மருதுபாண்டியர் வாய்விட்டுக் கதறி அழுதார்கள்.
நைனப்பன் சேர்வையின் குடும்பத்திற்குத் தனது குடும்பத்தை போல் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார் பெரிய மருதுபாண்டியர். அவர் மனமுவந்து கொடுத்த சொத்துக்களை இன்றைய தினமும் நைனப்பன் சேர்வையின் சந்ததியார் அனுபவித்து வருகிறார்கள். சிவகங்கைக்கு அருகில் 12 கி.மீ. தூரத்தில் சாத்தரசன் கோட்டையில் வடபுறத்தில் ஒரு பெரிய ஊரணியை வெட்டி அந்த ஊரணிக்கு நைனப்பர் ஊரணி என்று அவர் பெயரில் இன்றும் அழைக்கப்படுகிறது. இப்படிப் பல நூறு வீர நிகழ்ச்சிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு மக்களை வீரமிக்கவர்களாக ஆக்கி வைத்திருந்தார் மாமன்னர்கள் நம் மருதுபாண்டியர்கள்

இராஜராஜனின் தாயார் அகமுடையார்(மலையமான்) இனத்தை சார்ந்தவர்

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அகமுடையார் இனத்தினர் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். தென்தமிழகத்தில் அகமுடையார்களை முக்குலத்தோர் பிரிவுகளில் ஒன்றாகவும் கருதி வருகின்றனர். வட தமிழகத்தை பொறுத்தவரையிலும் அகமுடையார் இனத்தினர் தனித்தே அடையாளப்பட்டு வருகின்றனர். பெரும்பாலும் அகமுடையார் இனத்தினரின் பட்டங்களையும், பட்டப் பெயர்களையும் வைத்து பலவாறு தமிழகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றனர்.
தென் தமிழகத்தில் அகமுடையார்களை சேர்வை என்றும் மேலும் முதலியார், பிள்ளை என்ற பட்டங்களுடன் வட தமிழகத்திலும், தேவர், பிள்ளை, அதிகாரி, நாயக்கர், தேசிகர் போன்ற பல பட்ட பெயர்களுடன் மத்திய தமிழகத்திலும் அறியபடுகின்றனர். அகமுடையருக்கு என்னிறைந்த விருது பெயர்கள் உண்டு:

உடையார், முதலி, மலையான் ,வானவன் ,வானவராயன், வல்லவராயன், பனந்த்தாரன், பொறையான், மலையமான் ,தலைவன், படையாட்சி ,மனியக்காரான், பூமியன், கோளன், வர்மா, நாகன், பாண்டியன், கொங்கன், அம்பலம், சேர்வை, நாட்டான்மை, தொண்டைமான், தேவர் ,என்பது போல பல பட்டங்கள கான படுகின்றனர். அகமுடையாரது பின்னனி பெரும்பாலும் சேர மன்னரையே பின்பற்றியது. இதை பதிற்றுபத்து போன்ற சேரர் புகழ்பாடும் இலக்கியங்ககளும் மெய்பிக்கின்றன.
கல்வெட்டுகளில் அகமுடையாரை பற்றிய கல்வெட்டு சின்னமனூர் கல்வெட்டில்,
“பிள்ளை குலசேகர மாவலி வானாதிராய அகம்படிய முதலி சிங்க தேவன் ” என்று குலசேகர மாவலி வானதிராயரை பற்றி குறிப்பிடுகிறது.

யார் இந்த வானாதிராயர்?

வானர் என்ற மன்னர்குலத்தோர் புகழ பெற்ற சேர மரபினர் ஆவார். மூவேந்தருடனும் மன உறவு பூண்டவர்.கரிகால சோழனின் மனைவியும் வானர் குல பென்மனி, ராஜ ராஜனின் அக்காவின் கனவருமான் வந்திய தேவர் இந்த வானதிராயர் குலத்தாவர்.
சேரனுக்கு வானவன்,மலையன்,வானவரம்பன் என்ற பெயர்கள் உண்டு. வானவன் (அ) வானவரம்பன் என்ற சொல்லுக்கு வானை முட்டும் மலையினை உடையவன் என்று பொருள்.
சேரன்- மலை நாட்டிற்க்கு சிகரத்தை போன்றவன். சிகரன் எனற வார்த்தை மலை நாட்டின் தலைவன் என்று பொருள். இதிலிருந்து அகமுடையார் பிறப்பால் சேரர்கள் என்று புரியும்.
வானர்கள் மகாபலி சக்கரவர்த்தியின் இனத்தை சார்ந்தவர்கள் என்று கல்வெட்டுக்கள் கூறுகிறது. மகாபலி பிற்பிறவியில் இந்திரன் ஆவார். இந்தியப் புராணங்களில் முக்கியமான ஓர் வேந்தன் மகாபலி ஆவான். சேர நாட்டில் இருந்து மகாபலி மன்னன் துளு மொழி வழங்கிய கர்நாடகக் கடற்கரைப் பகுதி வரை ஆண்டதாகவும்க கூறப்ப்டுகறது.
இவர் சேர வம்சத்தை சார்ந்ததாகவும் அதனால் தான் இன்றும் மலையாள தேசத்தில் கொண்டாடுகின்றனர்.
இவரை அசுர மன்னனாக திரித்து கூறியது சேரர்கள் மேல் படை எடுத்த திபேத்திய பிராமனர்களால்(நம்பூதிரிகள்) புனையபட்ட பொய் கட்டு கதையே ஆகும்.

வாமன அவதாரம் எடுத்து, விஷ்ணு இம்மன்னனை பாதாள உலகிற்கு அனுப்பியதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. மகாபலி பாதாள உலகத்துக்கு அனுப்பப்பட்ட நாளாகிய ஆவணி மாத திருவோண நட்சத்திர நாளை விழாவாகக் கொண்டாடுகின்றனர். அன்றைக்கு ஒருநாள் மட்டும் மகாபலி தமது நாட்டைப் பார்வையிட்டுவிட்டு மீண்டும் பாதாள உலகம் சென்றுவிடுவதாக கருதப்படுகிறது. இந்த ஓண நாளை ‘வாமன ஜெயந்தி’ என்று இந்து மதப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.
சிவகங்கை சீமையில் உள்ள மானாமதுரை(வானாதிராய மதுரை),இராசகம்பீரம்(வானராய கம்பீர கோட்டை) முதலிய இடத்தில் வானாதிராய இனமாக ராஜ குல அகமுடையரே அதிகமாக வாழ்கிறனர். சின்னமனூர் அகமுடைய பனந்தாரன்(வானாதிராயன்),பந்தளம்(அகமுடைய பனந்தார ராம வர்மா)[சுவாமி ஐய்யப்பன் வழி வந்த மன்னர் போன்றவர்கள் பனந்தார வம்சத்து அகமுடையரே.இருவருக்கும் இன்னும் திருமன உறவு உண்டு.கொங்கு நாட்டில் உள்ள சமத்தூர் ஜமீந்தார் வானவராயர்,வல்லவராயர்(எஜமான் திரைபடத்தில் வரும் கதாபாத்திரங்கள்) யாவரும் அகமுடைய குல கவுண்டர்கள் ஆகும். வானாதிராய சேர அரச வம்சமானதால் தான் அகமுடையார் தம்மை ”ராஜகுல அகமுடையார்’ என்று குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.
இவர்களுக்குஆதியிலிருந்துசேரன்,மலையன்,வானவராயன்,மலையமான்,மலைராயன்,வானகோவரயன்,மலைராயன்,குறு வழுதி, மகதை நாடாழ்வான்,செம்பை நாயகன்,பொன் தின்னன் முதலிய பல பெயர்களால் அழைக்கபட்டனர்.

மலையமான்:

மலையமான் திருமுடிக்காரி,தெய்வீகன் என்ற தேர்வீகன்,சோழியவேனாதி திருக்கண்ணன்,மலையமன்னர் நரசிங்க முனையரையர்,நத்தமன்னர் மெய்ப்பொருள் நாயனார்,சுருதிமன்னர் குலசேகரன்,மலையன்,தேர்வண் மலையன்,வேள் பாரி, கிளியூர் மலையமான் பெரியுடையானான இராஜராஜச் சேதிராயன்,கிளியூர் மலையமான் ஆகாரசூரனான இராஜகம்பீரச் சேதிராயன்,பாண்டியராய திரணி சுருதிமான்,குட்டன் வனராயன் திரணி சுருதிமான்,நுணாங்குறிச்சி சுருதிமான் அணஞ்சா ஆனைவிடப்பாடி,ஊற்றத்தூருடைய சுருதிமான் சனனாதர் அரைய தேவனான வாண விச்சாதிர நாடாழ்வான்.
போன்ற எண்ணற்ற வேளிர்களையும்,அரசர்களையும் கொண்ட அரச குடும்பமே பார்க்கவகுலம். வல்வில் ஓரியை போரில் கொன்றவர் மலையமான் திருமுடிக்காரி. ஓரி அதியமான் குலமாக கூறப்பட்டாலும் அதியமான்களும் மலையமான் பட்டத்துடனேயே ஆண்டுள்ளனர். அரசர்களாகவும்,வேளிர்களாகவும் இருந்த காலத்தில் முனையரையர்,மலையமான்,கொங்கராயர்,சேதிராயன், மிலாடுடையார்,மலாடுடையார்,நத்தமான்,சுருதிமான்,உடையான், மலையமான்,சேதிய ராயன்,வன்னிய நாயகன்,பாண்டியராயர், கோவலராயர்,வாணகோவரையன்,சற்றுக்குடாதான்,காடவராயன்,(காடவர்களை ஆண்டவன்)பல்லவராயர்,அரைய தேவன்,நாடாழ்வான் போன்ற பட்டங்களுடன் ஆண்டு வந்தவர்கள்.
மலையமான்,நத்தமான்,சுருதிமான்,இம்மூவரும் அரசன் என்று பொருள் படும் உடையார் என்ற பொதுப்பட்டம் கொண்டவர்கள்.(சுருதிமான்)மூப்பனார் என்ற பட்டம் குல முதல்வர் (HEAD MAN)கத்திரியர்,கத்திக்காரர் என்ற படை பயிற்றுனர் என்ற அர்த்தத்தையும்,நயினார்,என்றபட்டம் சமண மதத்தைத்தழுவியவர்கள் அல்லது நாயன்மார் (மெய்ப்பொருள் மன்னர்)என்ற அர்த்தத்தையும் கொண்டது.உடையார் என்பதின் உட்பிரிவு பட்டங்களே மேற்காண்பவர்கள்.
(கன்னட,தெலுங்கு பேசும் உடையார்கள் என  உடையார் பட்டம் கொண்டு பலர் இருப்பினும்,பார்க்கவ குலத்தாருக்கு ஆதியிலிருந்தே  உடையார் பட்டம் மலைநாட்டு  அரசன் என்ற பொருளில் மலாடுடையார் என்ற பொருளில் வந்துள்ளது.மேற்கண்டோருக்கும் பார்கவ குலத்தாரோடு எத்தொடர்பும் கிடையாது. அதே போல பிருகு வம்ச பார்க்கவராகிய சுக்கிராச்சார்யரை குல குருவாக கொண்ட(மாபலி)சேர மன்னரின் வழிவந்த மலையமான் குலத்தவரான இவர்களும் சத்திரிய மரபுப்படி பார்க்கவ கோத்திரமாக கூறிக்கொள்கின்றனர்.

அகமுடையாரும் மலையமானும் ஒரே சேர வம்ச வழியினர்:

அகமுடையார் தம்மை ராஜ குல அகமுடையர் என்றும் தம்மை மகாபலி வம்ச வழியினர் எனவும் கூறுகன்றனர். மலையமான் இனத்தவர்கள் தம்மை மாபலி வம்சத்தவர் என்றும் மகாபலியின் குருவான சுக்ராச்சார்யரின்(பார்க்கவன்) பெயரால் பார்க்கவ குலத்தவர்கள் என்று கூறுகன்றனர்.
இதற்க்கு அவர்கள் கூறும் காரனம்,
அதே போல பிருகு வம்ச பார்க்கவராகிய சுக்கிராச்சார்யரை குல குருவாக கொண்ட(மகாபலி)சேர மன்னரின் வழிவந்த மலையமான் குலத்தவரான இவர்களும் சத்திரிய மரபுப்படி பார்க்கவ கோத்திரமாக கூறிக்கொள்கின்றனர்.
இதை மெய்பிக்கும் வித்மாக பார்க்கவகுலத்தவர்கள் அகமுடையாராக வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது, பார்கவ குலத்தார் வானவன்,சேரன்,மலையன் என்றும் குடிப்பெயருடைய மலையமான்களின் நேரடி வம்சத்தாராகவும் பாரி மற்றும் மூவேந்தரின் பெண்ணடி வாரிசாகவும் உள்ள குடும்பத்தினர்கள். காளியை குலதெய்வமாக கொண்ட போர் மறவர் குலமான இவர்கள் சோழர்களுக்கு அநேக வெற்றிகளைப்பெற்றுத்தந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
சோழனது படை பலமாக விளங்கிய போர்க்குடிகளில்  மலையமான் இனம் முதன்மையானது மன்னர்காலத்திற்கு பின்னர் போர்க்குடியினர் அனைவரும் விவசாயத்தில் ஈடுபட்டனர் என்னும் காலமாற்றத்திற்கு ஏற்ப இவர்களும் விவசாய குடிகளானார்கள்.குறுநில மன்னர்கள், வேளிர்கள்,போர் மறவர்கள் ஆகிய இவ்வினத்தார் ஜமீன்களாகவும்,பண்ணையார்களாகவும் மாறினர். வட தமிழகத்தில் மன்னர் ஆட்சி முடிவுற்ற வேளையில் ஊர்க்காவலையும்,போரையும்தவிர வேறு தொழில் அறியாத காரணத்தால்,அப்போது மன்னராட்சி நடை பெற்ற திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு  பார்கவ குல சுருதிமான்களான உடையார் குல மூப்பனார்கள் கத்திக்கார படைவீரர்களாக(கத்திரியர்கள்) அகமுடையாராக பணி புரிய சென்றனர்.அவ்வாறு சென்ற பார்கவ குல சுருதிமான்களின் வாரிசுகள் இன்றைக்கும் திருநெல்வேலி,கன்னியாகுமரி,ராம்நாடு,மதுரை போன்ற பகுதிகளில் வாழ்கின்றனர்.
அவர்களை இன்றைக்கும் அவ்விடங்களில் கத்திக்கார மூப்பனார்கள் என்று பட்டமிட்டு அழைக்கப்படுவதைக்காணலாம்.மூப்பனார்கள் பதினாறாம் நூற்றாண்டு வரை சோழ நாட்டின் அகமுடைய மறவர்களாக,தளபதிகளாக,குறுநில மன்னர்களாக இருந்துள்ளார்கள் என்பதை சுருதிமான்களைப்பற்றிய கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.

ராஜராஜ சோழனின் தாயார் அகமுடையார்(மலையமான்) இனத்தவரே

: பாண்டியபுரம் என்ற ஊரில் ஆண்டிமலை என்ற இடத்தில் உள்ள பாறையில் கி.பி.953 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டில் உள்ள செய்தி, “பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு குரிசில் சித்தவடவன்”என்பதாக அமைகிறது,பாரி மகளிரை மணம் செய்தவர்களின் வழி வந்த அரசன் சித்தவடவன் என்கிறது செய்தி.இவரது மகளான வானவன் மாதேவி என்பவர் தான் தஞ்சையை ஆண்ட சுந்தர சோழனின் மனைவி,ராஜராஜ சோழனின் தாயார். பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு அகமுடையார்(மலையமான்) மட்டுமே.
“முத்தமிழ்க் கபிலன் மூரி வெண் தடக்கைப் பாரிதன் அடைக்கலப் பெண்ணை மலையர்க்கு உதவி” –எனத்தொடங்கும் இராசராச சோழன் கல்வெட்டும் கூறும் பாரி வம்சமாக அறியப்படுபவர்கள் பார்கவ குல சத்திரியர்கள் மட்டுமே..
சுந்தர சோழன் இறந்தவுடன் அவரோடு சேர்ந்து உடன்கட்டை ஏறியவர் பார்கவ குல மலையமானின் மகளான வானவன் மாதேவி.க்ஷத்ரியப்பெண்கள் மட்டுமே உடன் கட்டை ஏறுதல் வழக்கம்.இன்றைக்கும் நத்தமான்,சுருதிமான்,மலையமான் பரம்பரையினர் பார்க்கவ குல க்ஷத்ரியர் என்று அழைக்கப்படுகின்றனர்.சோழர்களில் சுந்தர சோழனுக்கும் இரண்டாம் ராஜராஜனுக்கும்மலையமான் மகள் அவனிமுழுதுடையாள்)பெண் கொடுத்த இவர்கள் மூவேந்தரோடும்,வேளிர்களோடு மண உறவு கொண்டுள்ளனர்.
பார்க்கவ குல க்ஷத்ரியர்(மலையமான்) என்பரும் அகமுடையாரும் ஒன்றே. எனவே ராஜராஜ சோழனின் தாயார் அகமுடையார்(மலையமான்) இனத்தவரே
நன்றி : செம்பியன் மறவன்