Tuesday 31 May 2011

அகமுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் - 2011

வேதாரண்யம் - என்.வி.காமராஜ் - அதிமுக
கலசபாக்கம் - அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி - அதிமுக
வேலூர் - Dr.வி.எஸ்.விஜய் - அதிமுக
மன்னார்குடி - டி.ஆர்.பி.ராஜா - திமுக
பட்டுக்கோட்டை - என்.ஆர்.ரெங்கராஜன் - காங்கிரஸ்
புதுக்கோட்டை - முத்துகுமரன் - இந்திய கம்யூ
சிவகங்கை - எஸ்.குணசேகரன் - இந்திய கம்யூ
போளூர் - ஜெ.சுதா லட்சுமிகாந்தன் - அதிமுக
சங்கராபுரம் - பா.மோகன் - அதிமுக
உளுந்தூர்பேட்டை - இரா.குமரகுரு - அதிமுக
சேப்பாக்கம் - ஜெ.அன்பழகன் - திமுக


அனைத்து அகமுடைய உறவுகளுக்கும்,  அகமுடையார்  அமைப்பு சார்பாக பெருமிதத்தோடு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்...!

மயிலப்பன் சேர்வைகாரர்

மாவீரன் மயிலப்பன் சேர்வைகாரர் (இறப்பு: 1802, ஆகஸ்ட் 6) இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கில ஆக்கிரமிப்பாளர்களது ஏகாதிபத்திய கொள்ளைக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடிய முதல் தளபதி.

வரலாறு :


தமிழக வரலாற்றில் இராமநாதபுர சேதுபதி மன்னர்களுக்குத் தனியாக பல சிறப்புக்கள் உள்ளன. நாட்டு விடுதலைப் போரில் ரெபல் முத்துராமலிங்க சேதுபதி மன்னரது (1762 - 1809) பங்கு மிக சிறப்பான இடத்தைப் பெற்றது. அவரது நல்லாட்சி மேலும் தொடர முடியாதபடி மன்னரை 1795, பெப்ரவரி 8 இல் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி பதவி நீக்கம் செய்தது. தங்களது சூழ்ச்சியினால் மன்னரைக் கைது செய்து திருச்சிக் கோட்டையில் அடைத்துவிட்டு சேதுபதியின் நாட்டை கும்பெனியார் ஏற்றனர்.

கும்பெனியார் குடிமக்களிடம் கெடுபிடி வசூல் செய்தும் சுரண்டியும் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டனர். மன்னரில்லாது மயங்கிய குடிகளுக்கு வழிகாட்ட முன் வந்தார் ஓர் இளைஞர். இவர் சேதுபதி சீமையின் தென்பகுதியான ஆப்பனூர் நாட்டைச் சேர்ந்த சித்திரங்குடி என்ற கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சேதுபதி மன்னரது சேவையில் சிறப்பாக விளங்கியதால் மன்னர் இவருக்கு ஒரு படைப் பிரிவின் தலைவராக்கினார். இதனால் இவரை மக்கள் அன்புடன் "சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைகாரர்" அழைத்தனர்.

1795 முதல் 1802 வரை பல இடங்களில் ஆங்கிலேயர்க்கு எதிராகக் கிளர்ச்சிகளில் சேர்வைகாரர் ஈடுபட்டார். [[[1799]], ஏப்ரல் 24 ஆம் நாள் முதுகளத்தூரில் உள்ள கும்பெனியாரின் கச்சேரியைத் (court) தாக்கியது, அபிராமத்தில் உள்ள கச்சேரியைத் தாக்கியும் கைத்தறிக் கிட்டங்கியைத் தாக்கி துணிகளை சூறையிட்டதும் கமுதியில் உள்ள கச்சேரியை நிர்மூலமாக்கியும் பெரிய நெற்களஞ்சியங்களைக் கொள்ளையிட்டதும் ஆகிய போராளி செயல்கள் மயிலப்பன் சேர்வைகாரரின் தலைமையில் தான். இப்போராளிச் செயல்களால் முதுகளத்தூர், கமுதி சீமை மக்கள் புதிய தென்புடன் குபெனியாரைத் துரத்திவிட்டு மீண்டும் ரெபெல் முத்துராமலிங்க சேதுபதி மன்னரது ஆட்சியை ஏற்படுத்திவிடலாம் என நம்பினர்.

தொடர்ந்து 42 நாட்கள் இத்தகையப் போராட்டங்களால் முதுகளத்தூர், கமுதிச் சீமைகள் கும்பெனி நிர்வாகத்திலிருந்து தனித்து நின்றன. இப்போராட்டத்தில் தீவிர பங்கு கொண்ட சிங்கன் செட்டி, ஷேக் இப்ராகிம் சாகிபு போன்ற சேர்வைகாரரின் தோழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது ஆங்கிலப் படைகளை வழி நடத்தியவர்கள் கலக்டர் லூஷிங்க்டன் மற்றும் கர்னல் மார்டின்ஸ் ஆவர்.

போராட்டத்தை அடக்கிய கும்பெனியார் மயிலப்பன் சேர்வைகாரரைத் தவிர மற்றப் போராளிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கினர். வேறு வழியின்றி சேர்வைகாரர் மாறுவேடத்தில் சோழ நாடு சென்றார். எட்டு மாதங்கள் கழித்து சேது நாட்டிற்குத் திரும்பினார். அதன் பின் சிவகங்கை சீமையின் மருதிருவரின் வேண்டுகோளின்படி மருதிருவர் அணியில் சேர்ந்து பாடுபட்டதுடன் பாஞ்சாலம் குறிச்சிப் பாளையக்காரர், காடல்குடி, நாகலாபுரம், குளத்தூர் ஆகிய பாளையக்காரர்களது ஆங்கிலேயர் எதிர்ப்புப் போராட்டங்க்ளுக்கு ஆதரவாக சேர்வைகாரர் செயல் பட்டது வரலாற்றுச் சிறப்பாகும்.

மயிலப்பன் சேர்வைகாரின் நடவடிக்கைகளையும், அவர் மருதிருவர் அணியில் தீவிரமாக ஈடுபட்டதையும் நன்கு அறிந்திருந்த கலக்டர் லூஷிங்க்டன் சேர்வைகாரரை தம்மிடம் ஒப்படைக்கும்படி மருதிருவர்க்குத் தாக்கீது அனுப்பினார். மருதிருவர் கலக்டரின் உத்திரவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை

தூக்கிலிடப்படல் :


ஆங்கிலக் கும்பெனியர்க்கு எதிரான மருதிருவரின் இறுதிப் போராட்ட நாள் 1801, அக்டோபர் 2. இதில் தோல்வியுற்றதன் காரணமாக 1801, அக்டோபர் 24 இல் திருப்புத்தூரில் மருதிருவர் தூக்கு மேடையில் வீர மரணமடைந்தனர். மருதிருவரின் இம்முடிவிற்குப் பின்னர் மயிலப்பன் சேர்வைகாரர் தன்னந்தனியே முதுகளத்தூர், கமுதி பகுதிகளில் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார். ஒரு நாள் கொடியவன் ஒருவன் கம்பெனியாரின் தூண்டுதலின் பேரில் பொருளாசை காரணமாக சேர்வைகாரரின் மறைவிடத்தைக் காட்டிக்கொடுத்தான். மூன்று மாத கால கடுமையான சிறை வாழ்க்கையை மேற்கொண்ட மயிலப்பன் சேர்வைகாரர் 1802, ஆகஸ்ட் 6 ஆம் நாளன்று அபிராமத்தில் கம்பெனியாரால் தூக்கிலப்பட்டார்.

MADURAI THEPPAKULAM - MARTHU STATUE

Monday 23 May 2011

கண்டவை, கற்றவை, கேட்டவை

மருது சகோதர்கள்

 
மருது பாண்டியர்கள்.
இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார்த் தேவர் என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர்.
ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவைவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. மொக்க பழனியப்பர் சிறந்த பக்திமானாகவும் வீரராகவும் திகழ்ந்தார். இவர் சேதுபதி நாட்டின் தளபதியாக இருந்தார். சிறுவர்களான பெரியமருதுவும் சின்ன மருதுவும் எதற்கும் அடங்காதவர்களாகவும் விளையாட்டில் விருப்பம் உள்ளவர்களாகவும் இருந்தனர் . தாயார் பொன்னாத்தாள் அவர்களுக்கு வீரர்களின் வரலாற்றை சொல்லி துணிவையும் ஏற்படுத்தினார். அவர்கள் தொல்லைகள் பெருகவே, அவற்றைத் தாங்கமுடியாத தாயார் மொக்கைப் பழநியப்பருடன் சேதுபதிநாட்டிற்கு அனுப்பி வைத்தார். அங்கும் அவர்களின் தொல்லைகள் தொடர்ந்தன.
இரவு வேளையில் கோட்டைக் கதவுகளை மூடி அவற்றிற்கு அணைவாக 5 அல்லது 6 பேர்கள் சேர்ந்து ஒரு பீரங்கியை குறுக்காக தள்ளி வைப்பது வழக்கம்.
ஒருநாள் இரவு சிறுவர்களான பெரியமருதுவும் சின்னமருதுவும் அந்த பீரங்கியைத் தள்ளிவைத்து கோட்டைக் கதவுகளை திறந்து வைத்துவிட்டனர். யார் இதைச் செய்தது என்று அறியாத காவலர்கள் மறுநாள் இரவு கதவுகளை அடைத்துவிட்டு மறைந்திருந்து காத்துக்கிடந்தனர். நடு இரவில் மருது சகோதரர்கள் அந்தபீரங்கியைத் தள்ளிக் கதவுகளைத் திறந்தனர். மறைந்திருந்த காவலர்கள் அவர்களைப் பிடித்த பொழுது அவர்கள் தளபதி மொக்க பழநியப்பரின் மைந்தர்கள் என்றறிருந்து செய்வதறியாது திகைத்தனர். மொக்க பழநியப்பர் வெளியூர் சென்றிருந்ததால் காவலர்கள் அரசரின் கவனத்திற்கு அந்த நிகழ்ச்சியைக் கொண்டு சென்றனர். பயந்தனர். எனினும் சேதுபதி அரசர் சிறுவர்களின் பலத்தையும், புத்திசாலித்தனத்தையும், அஞ்சாமையையும் கண்டு வியந்தார், மொக்க பழநியப்பர் ஊருக்கு திரும்பிய பொழுது, அந்த செய்திக் கேட்டு என்ன செய்வது என்று திகைத்திருந்தார். அரசர் அழைக்கவே, தளபதி அவரைச் சந்தித்தார். சிறுவர்களின் வீரத்தை மெச்சி புகழ்ந்ததோடு, அவர்களுக்கு சூரக்கோட்டையில் சிறந்த போர் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். தந்தையின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பயிற்சிக்குப் பின் அவர்களை அரண்மனைக் காவல் பணியில் அரசர் அமர்த்தினார்.
மருது பாண்டியர்கள் சிவகங்கை சீமைக்கு வந்த விதம்
ஒரு நாள் அரசர் விசயரகுநாத கிழவன் சேதுபதி வேட்டைக்கு சென்றுவிட்டு ஆறுமுகக் கோட்டையில் தங்கி இருந்தார். அப்பொழுது சிவகங்கைச் சீமையின் அரசரும் தனது மருமகன் முத்து வடுகநாதத் வேரும், அரசி வேலுநாட்சியாரும் அங்கு வந்தனர். தமது அரசியல் அமைச்சரான தாண்டவராய பிள்ளைக்கும், தளபதியான சுப்பிரமணியத் தேவருக்கும் வயதாகி விட்டதாகவும் , அவர்களுக்குப் பின்பு நாட்டைத் திறமையுடன் ஆளத் தகுதிவாய்ந்த இளவல்களை சேது நாட்டிலிருந்து அனுப்பினால் தக்க பயிற்சி கொடுத்து நியமிக்கலாம் என்று அரசர் முத்துவடுகநாத தேவர் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று, அனைத்துத் தகுதிகளையும் பெற்றுத் தனது மதிப்பிற்குப் பாத்திரமாகத் திகழ்ந்த மருதுபாண்டியர் சகோதர்களை அனுப்பலாமென்று விசய இரகுநாத அரசனின் தளபதி மொக்க பழனியப்பனிடம் தமது விருப்பத்தைச் சொன்னார். அவரும் அவர்களைச் சிவகங்கை அரசரிடம் ஒப்படைத்து அழைத்து செல்லுமாறு கூறினார். இளவல்களைக் கண்ணுற்ற முத்துவடுக நாதரும் வேலு நாட்சியாரும் சிறிது ஐயத்துடன் அவர்களை சிவகங்கைக்கு அழைத்து வந்தனர். இது 1761 ம் ஆண்டில் நடந்தது.
தொடரும் . . . . . . . .
வீரமும் திறமையும் வெளிப்படுதல்
சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் தேர்ந்த வீரமும், பண்பும், சிறந்த பக்கியும் , மக்கள் நலம் பேணும் குணமும் கொண்டு நாட்டை ஆண்டு வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் நாட்டில் பஞ்சமின்றி, பயமின்றி வளமுடன் நாட்டு மக்கள் வாழ்ந்து வந்தனர். வேலு நாச்சியாரோ சிறந்த பக்தை, போர் பயிற்சி பெற்றவர். பலமொழிகளைக் கற்றவர். இலக்கிய புலமை பெற்றவர், ஆங்கிலம் அறிந்தவர். மதிநுட்பமிக்கவர். மன்னருக்கு சிறந்த அரசியல் ஆலோசனைகளை வழங்கி வந்தார். வனப்பகுதிகள் நிறைந்து அரணாக நின்ற காளையார் கோவிலில் தான் கோட்டையும் இதற்கு ஒரே ஒரு கோட்டை வாயில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அரசர் முத்துவடுகநாதத் தேவர் இந்த காளையார் கோவில் காட்டில் தான் வேட்டையாடும் பழக்கம் உள்ளவர். அந்த மாதிரி ஒரு வேட்டைக்குச் செல்லும் பொழுது மருது சகோதரர்களும் உடன் அழைத்துச் செல்லப்பட்டனர். பல மிருகங்களை வேட்டையாடிக் கொன்றனர். வேங்கை ஒன்று அரசர் மீது பாய்ந்தது , சின்ன மருதுகுறுக்கில் பாய்ந்து வேங்கையுடன் கட்டிப் புரண்டார். சின்ன மருதுவின் தாக்குதலால் வேங்கைப்புலி புதர் மறைவில் ஓடி மறைந்தது. அடிப்பட்ட புலி சும்மா இருக்காது என்பதை உணர்ந்த பெரிய மருது சமயம் பார்த்திருந்தார். திடீரென வேங்கையின் வாலைப் பிடித்திழுத்து தலைக்குமேல் சுழற்றி தரையில் ஓங்கி அடித்தார் பெரிய மருது. பிறகு அதன் வாயைப் பிளந்து கொன்றார். அந்த நிகழ்ச்சி நடந்த இடம் தான் புலியடி தம்மம் என்று இன்று அழைக்கப்பட்டு வருகிறது. இதில் நெகிழ்ந்து போன அரசர் சிறுவயல் என்ற கிராமத்தை பெரிய மருதுவிற்கும் புலியடி தம்மம் என்ற கிராமத்தை சின்ன மருதுவிற்கும் அளித்து பெருமை செய்தார். இவர்கள் அந்தந்த பகுதியில் சமீன்தார்களாக 1769 ஆண்டில் இருந்தனர். அந்தச் சமயத்தில் தான் சருகணி மாதா கோவிலுக்கு பெரிய மருது சமீன்தார் என்ற முறையில் தேர் ஒன்றை வழங்கியதாகச் செய்தி உள்ளது. இந்த நிலையில் தான் பிரதாணி தாண்டவராயப் பிள்ளை மற்றும் தளபதி சுவப்பிரமணியத் தேவர் ஆகியோர்கள் வயது முதிர்ந்தனர். அவர்களிடம் பயிற்சி பெற்ற பெரிய மருதுவை தளபதியாகவும் ,மதிநுடட்பம் நிறைந்த சின்னமருதுவை அமைச்சராகவும் அரசர் முத்து வடுகநாதர் நியமித்தார். அரசி வேலு நாச்சியருக்கு சிறந்த முறையில் போர் பயிற்சியைத் தந்தவர் சின்ன மருதாவார். தொடரும் . . . . .. .
முத்து வடுகநாதரின் இறப்பும் அரசி வேலு நாச்சியாரின் பரிதவிப்பும்
சேது நாட்டரசர் விசயரகுநாத சேதுபதி 1762ல் காலமானார். அவரது சகோதரியுடன் 2 வயது மகன் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்டான். முத்துவை நாட்சியார் தளபதி வெள்ளையன் சேர்வை, அமைச்சர் தாமோதரன் பிள்ளை ஆகியோர்களின் ஒத்துழைப்புடன் சேது நாட்டின் ஆட்சி நடந்து வந்தது.
இதற்கிடையில் தளபதி காலமானார். தாமோதரன் பிள்ளை, தஞ்சை மன்னன் 1770ம் ஆண்டு சேது நாட்டுடன் போர் தொடுத்ததில் போர்காலத்தில் கொல்லப்பட்டார். சேது நாடு தஞ்சை மன்னன் வசமானது. தஞ்சை மன்னன் இவ்வாறு போர்தொடுத்து சேது நாட்டை தனதாட்சியின் கீழ் கொண்டு வந்ததை வெறுத்து நேரம் பார்த்திருந்தான். ஓராண்டு கழித்து ஆங்கிலேய தளபதி ஜோசப் சுமித் என்பவன் தலைமையில் தனது படையுடன் தஞ்சை மீது போர் தொடுத்தது. ஈடுகொடுக்கமுடியாத தஞ்சை மன்னன் ஆர்காட்டு நவாப்பிற்கு கப்பம் கட்டவும் பிடிப்பட்ட சேது நாட்டுப் பகுதிகைளத் திருப்பித் தரவும் ஒத்துக் கொண்டான். அதற்கு அடுத்த ஆண்டில் ஜோசப் சுமித் நவாப்பின் படை, புதுக் கோட்டைத் தொண்டைமான் படை உதவிஞடன் இராமநாதபுரத்தை முற்றுகையிட்டு வெற்றி கொண்டான். அரச குடும்ப வாரிசுகளைச் சிரைப்படுத்தி திருச்சிராப்பள்ளிக்கு கொண்டு சென்றான். அதன் பிறகு மீதமிருந்த சிவகங்கைச் சீமையைக் கைப்பற்ற நவாப்பு விரும்பினான். இதை சூழ்ச்சி முறையில் செய்து முடிக்க திட்டமிட்டான். ஏனெனில் ஆரக்காட்டு நவாபுடன் நட்புடன் அரசர் முத்துவடுகநாதர் இருந்து வந்தார்.
வஞ்சகத் திட்டம் ஒன்றை நாவபு தீட்டினான். இதையறியாத நிலையில் அரசர் முத்துவடுகநாதர் தனது இளைய ராணியுடன் காளையார் கோவில் காட்டிற்கு வெட்டையாடச் செல்கிறார் . ராணிவேலுநாட்சியார் கர்ப்பிணியாக இருந்ததால் கொல்லங்குடியில் தங்குகிறார். அன்றைய தினத்தில் நவாப்பின் படை கர்நாடக பட்டாளியனுடன் மங்கலம் நோக்கி வருவதாக ஒற்றன் மூலம் செய்தியறிந்த பெரிய மருது மங்கலம் சென்று அப்படைகளுடன் போரை எதிர் கொள்கிறார். இதனால் வெற்றி கிட்டாது என்பதை அறிந்து கொண்ட நவாப்பு மற்றொரு பிரிவு படையை கயவன் ஒருவன் உதவியுடன் குறுக்கு வழியில் காளையார் கோவில் கோட்டையை முற்றுகையிடுகிறான். நடு இரவில் இந்த படையெடுப்பை கோட்டை வீர்கள் எதிர்த்துப் போராடுகின்றனர். உறக்கத்திலிருந்த அரசர் முத்துவடுகநாதர் எழுந்து சீறிப் பாய்ந்து போரிடுகிறார். வஞ்சகத்தால் ஏற்பட்ட போரில் அவரும் அவரது இளைய ராணியும் கொள்ளப்படுகின்றனர். உயிர் சேதம் அதிகம். சின்னமருதுவை இச்செய்தி திகைக்க வைக்கிறது. உடனே கொல்லன் குடியில் தங்கியிருந்த வேலுநாட்சியாரைக்காப்பற்ற துரித நடவடிக்கை மேற்கொண்டார் மங்கலத்தில் போர் செய்துக் கொண்டிருந்த பெரிய மருதுவும் , வேலு நாச்சியாரைக் காப்பாற்றவும் சிவகங்கைச் சீமையைக் கைப்பற்றவும் ஆலோசனை செய்கின்றனர். முதலில் அரசியைக் காப்பற்றவேண்டும். பிறகு ஆங்காங்கே இரகசியமாக படைதிரட்டி நாட்டைப் பிடிப்பது என்று முடிவு செய்கின்றனர். அதற்கு ஒரே வழி திண்டுக்கல் விருப்பாட்சியில் உள்ள நண்பர் ஹைதர்அலியுடன் பாதுகாப்பைக் கோருவதென்று விருப்பாச்சிக்கு இரவோடு இரவாக காட்டு வழியில் சென்று ஹைதர்அலியைச் சந்தித்து நடந்தவற்றை எடுத்துச் சொல்கின்றனர். பதட்டமும் கோபமும் கொண்ட ஹைதர்அலி வேலுநாச்சியாரை தனது சகோதரியாக்கி பாசத்துடன் பாதுகாப்பு வழங்கினார். பெரிய மருதுவும் சின்ன மருதுவும் சிறிது இளைப்பாருதலுக்கு பின்பு இரகசியமாக படைத்திரட்டும் பணிக்கு சிவகங்கை கிராமங்களை நோக்கி புறப்பட்டனர். 1772 முதல் 1780 வரை மறைவு வாழ்க்க நடத்தும் நிலை ஏற்பட்டது. அதற்காக அரசிவேலு நாச்சியார் பட்ட மனவேதனைகள் பல. விருப்பாட்சியில் தங்கி இருந்த பொழுது தான் ஒரு பெண் மகவை அரசி பெற்றெடுத்தார். வெள்ளட்சி என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார். ஒரு சகோதரன் செய்ய வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசிக்கு ஹைதர்அலி செய்து கொடுத்தார்.
இந்த காலக் கட்டத்தில் மருது சகோதரர்களின் தீவிரவாதத் திட்டம் 3
விருப்பாட்சியில் ஹைதர்அலியின் பாது காப்பில் அரசி வேலுநாச்சியாரை வைத்த மருது சகோதரர்கள் ஆரக்காடு நாவப்பிற்கும், கும்பினியார்களுக்கும் எதிராக தீவிரவாதப் படைகளைத் திரட்டும் பொருட்டு செயல்திட்டம் ஒன்றை ஹைதர்அலியடன் கலந்தாலோசித்து முடிவு செய்தனர். அத்திட்டப்படி தெற்கே உள்ள பாளையக்காரர்களை வீரபாண்டிய கட்ட பொம்மன் தலைமையில் தூத்துக்குடி வரை ஒன்றுபடுத்தி நவாப்பிற்கும் கும்பினியார்களுக்கும் எதிராகச் செய்லபடுத்துவது என்ற முடிவாகியது. சிவகங்கை சீமை மக்களை அங்குள்ள காட்டுப் பகுதியில் ஆங்காங்கே கும்பினியர்களுக்கு எதிராக தீவிரவாதத்தை அளிப்பது என்றும் முடிவாயிற்று. இதற்கு தனது பங்கிற்கு படை வீரர்களையும் குதிரைகளையும் வேண்டும் பொழுது தருவதாக ஹைதர்அலி உறுதியளித்தார். இது அவரது நாட்டுப் பற்றை வெளிப்படுத்தியது.
இதனை செயல் திட்டமாக்க ஹைதர்அலி விருந்துஒன்றுக்குஏற்பாடு செய்து அதில் ஊமத்துரையை கலந்து கொள்ள வைத்தான். மருதுவைப் போன்ற மதிநுட்பமும், வீரமும் கொண்ட ஊமைத்துரையும் சின்னமருதுவும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நண்பர்களாயினர். விருந்திற்கு பிறகு மருது சகோதரர்கள் சிவகங்கை காட்டுப் பகுதி கிராமங்களில் செயல்பட்டு வந்த கும்பினியர் எதிர்பாளர்களுக்கு பயிற்சி அளிக்க உடன் புறப்பட்டனர். மருது சகோதரர்கள் தாம் சாதரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காரணத்தால் கீழ் மட்ட மக்களின் மனதைக் கவர்ந்து அவர்களைத் தங்கள் செயல்திட்டத்திற்கு ஆட்கொள்வதில் எளிதில் வெற்றி கண்டனர். காட்டுப் பகுதியில் ஆயுதம் தயாரிக்கும் பட்டறைகளை நிறுவினர். சிறந்த வீர்களைத் தேர்ந்தெடுத்துப் போர் பயிற்சி அளித்தனர். உளவுப் படை வீர்களைத் தயார் செய்து நவாப், தொண்டைமான், கும்பினியர் ஆகியோர்களின் போர் நடவடிக்கைகளை உடனுக்குடன் அறிந்து கொண்டு செயல்பட்டனர். மருதுசகோதரர்களோ மக்களோடு மக்களாக ஒன்றாகக் கலந்து செயல்பட்டதால் மக்களும் உற்சாகத்துடன் நாட்டை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மக்களின் இந்த நிலை ஏனைய பாளையங்களிலோ, அரசாட்சிகளிலோ இல்லை எனலாம்.
சிவகங்கைச் சீமை மீட்பு - 4
1772க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆர்க்காட்டு நவாப், தொண்டைமான் மற்றும் குப்பினியர்களின் படைகளை வெற்றிக் கொண்டு 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டி வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலுநாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டது. அரசியாரின் போர் வியூகத்தைத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தியது. மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர்அலியின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலுநாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர்அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார்.
மருது பாண்டியர் ஆட்சிப் பொறுப்பு
அரசி வேலுநாச்சியாருக்கு ஆண் மகவு இல்லை. மேலும் அவர் அடிக்கடி நோய்பட்டிருந்தார் மனம் நொந்த நிலையில் இருந்தார். ஆண் வாரிசு இல்லாத தனது அரசுக்கு தனத தாதையர்களும் கும்பினியாரும் தொல்லை கொடுக்கக் கூடும் என்பதை உணர்ந்து சிவகங்கைச் சீமையை தனது கணவர் முத்துவடுகநாதருக்கும், தனக்கும் போர்காலங்களிலும், நிர்வாகத்திலும் உறுதுணையாக நின்ற மருது சகோதர்களிடம் ஒப்படைக்க முன்வந்தார். தளபதி சந்தன ராசாவும் அதற்கு இசைவு தந்தார். தனது ஆபத்துகால நண்பனான ஹைதர்அரலியின் விருப்பத்துடன் செய்வதாக வேலு நாச்சியார் கூறினார். அதற்கு மருது சகோதரர்கள் எப்படி தாதாதையர்கள் ஏற்பர் என்று வாதிட்டனர்.”எனது மறைவிற்குப் பிறகு நாடும், மக்களும் நிம்மதியாகவும் வளமாகவும் வாழ வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். நீங்கள் அரசர்களாக வேண்டாம், அரசின் பிரதிநிதிகளாக இருந்து ஆட்சியை நடத்துங்கள்”
என்று கூறி சம்மதிக்க வைத்தார். உடனே அரண்மனை விழாக்கோலம் காண ஏற்பாடாயிற்று. மக்கள் வெள்ளமென திரண்டிருந்தனர். அந்த விழாவில் அன்பும் பாசமும் கொண்ட மருது சகோதரர்களை நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரசப் பிரதிநிதிகளாக நாட்டை நிர்வாகம் செய்வார்கள் என்றும் அதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென்றும் அறிவித்தார். மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சி நடந்தது 1780ல் 1793ல் வேலு நாச்சியாரின் மகள் வெள்ளச்சி நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகிறாள் . 1796ல் வேலுநாச்சியாரும் இறந்து விடுகிறார். அதன் பிறகு பெரியமருது சிவகங்கைச் சீமையின் மன்னராகவும், சின்னமருது அமைச்சராகவும் தளபதியாகவும் நாட்டை சிறப்புடன் அவர்கள் இறக்கும் வரை ஆண்டு வருகின்றனர். சந்தனராசா தளபதியக தொடர்கின்றார்.
அறப்பணிகளும் மக்கள் தொண்டும்
வெலு நாச்சியார் மீண்டும் சிவகங்கைச் சீமைக்கு அரசியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் மருது சகோதரர்களை அழைத்து, தனது கணவர் விரும்பிய அறப்பணிகள் தொடர வேண்டும், காளையார் கோவில் மீண்டும் சீரமைக்க வேண்டும் , மக்களுக்குத் தேவையான நிவாரணப்பணிகளைச் செய்ய வேண்டும், என்று கூறினார். அதனை ஏற்று முதன் முதலில் காளையார் கோவிலை சீரமைத்தனர். அக்கோவிலில் மருது சகோதரர்களின் சிலைகள் யானை கட்டி மண்டப வாயில் வைக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். மதுரை மீனாட்சியம்மன் கோவில் உயர் கோபுரத்திற்கு இணையான முகப்புக் கோபுரத்தைக் கட்டினார்கள். குன்றக்குடி முருகன் கோவில் , ஆவுடையார் கோவில், செம்பொன் நாதர் கோவில், சிங்கம்புனரி சேவகப் பெருமாள் கோவில், ஆகிய திருக்கோவில்களுக்கு சீரமைப்பு, திருப்பணிச் செலவு ஆகியவற்றை நல்கி உள்ளனர். காஞ்சி சங்கரமடத்திற்கு முத்து வடுகநாதர் பெயரில் தானம் வழங்கப் பட்டதாக செப்பேடு செய்தி ஒன்றும் உள்ளது.
குன்றக்குடியில் அரண்மனை ஒன்றையும் கட்டினர். மருதுபாண்டியர் அவையில் புலவர் குழு ஒன்று இருந்ததாகவும் அதன் மூலம் தமிழ் சங்கம் அமைத்து தமிழ் வளர்க்கப்பட்டதாகவும் செய்தி உள்ளது. மயூரிக் கோவை என்ற கவிதை நூல் அரங்கேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
நரிக்குடியில் கற்புக்கரசி பொன்னாத்தாளுக்கு சத்திரம் கட்டப் பட்டது. பெரிய மருதுவின்மமைவியர் ஐந்து பேருக்கும் அங்கு சிலைகள் வைக்கப்பட்டன. மருதுபாண்டியர் கலைகளையும் வளர்த்தனர். நாடக கலை வளர்ச்சி பெற்றதாகவும் கவிஞர் கண்ணதாசன் கூறியுள்ளார்.
திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு மருதுபாண்டியர் தேர் வழங்கியுள்ளனர், இதைப் போல் பல கோவில்களுக்கும் தேர்கள் அளித்துள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள அலங்கார சிலைகளை சமீபத்தில் தான் சீரமத்துள்ளனர். சருகனியில் மாதாகோவிலுக்கு தேர் செய்து கொடுத்து பாரி வள்ளல்களானார்கள் . சிவகங்கை ஆட்சியை மீண்டும் பிடித்து வேலுநாச்சியார் ஆட்சிப் பொறுப்பேற்றபொழுது நிதிநிலை சீர் கெட்டிருந்தது. இதை எதிர்க் கொள்ள வேண்டி ; திருவிதாங்கூரில் தங்களுக்கு வேண்டாத அந்த மன்னன் நடத்திய மல்யுத்த போட்டிகளில் மாறுவேடமணிந்து கலந்து கொண்டு வெற்றி பெற்று அதன் மூலம் பரிசாக கிடைத்த பெருந்தொகையினை சிவகங்கை அரசின் நிதி நிர்வாகத்தைச் சீர்படுத் செலவிட்டனர்.
பெரிய மருது காளையார் கோவிலுக்குத் தேர்கள் செய்ய திருப்புவனம் நதிக்கரையில் இரண்டு உயரந்த மருத மரங்கள் உள்ளதை அறிந்து, அவற்றை வெட்டிக் கொண்டுவர ஆண் வீரர்களை அனுப்பினார். அவற்றை வெட்ட விடாது குருக்கள் ஒருவரும் அவர் மகளும் தடுப்பதை அறிந்து பெரிய மருது மாறுவேடத்தில் நேரில் சென்று குருக்களிடம் காரணம் கேட்க, அவர்கள் அவ்விரு மரங்களையும் பெரிய மருது சின்ன மருதுவாகப் பாவித்து வளர்ப்பதாகவும் பூசை செய்வதாகவும் கூறினர் அது கேட்டு அவர்களது பாசத்தை உணர்ந்தார். மரங்களை வெட்டாது இருவரையும் அரண்மணைக்கு அழைத்து வந்து தங்க வைத்தக் கொண்டார். இது மக்களிடையே மருது சகோதரர்களுக் இருந்த மரியாதையை எடுத்துக் காட்டுகிறது.
காளையார் கோவிலுக்குச் தேர் செய்யப்படுகிறது. தேர் ஓட்டத்தன்று தேர் நகர மறுக்கிறது. அப்போது வடிவாகத் தேரைச் செய்த குப்பமுத்து ஆசாரி மன்னரிடம் அவரது செங்கோலையும், மோதிரத்தையும் கொடுத்து தம்மை ஒருநாள் வேந்தராக அறிவித்தால் தேர் நகரும் என்று சொல்ல, அதனை ஏற்று பெரியமருது குப்பமுத்து ஆசாரியை வேந்தராக அறிவிக்கிறார். குப்ப முத்து ஆசாரி மன்னர் உடையில் தேரில் உட்காரத் தேர் நகர்கிறது. ஆனால் குப்பமுத்து ஆசாரி தேரிலிருந்து தவறி விழுந்து இறந்து விடுகிறான். தேரோட்டத்தன்று மன்னர் இறப்பார் என்பது தேர் செய்த குப்பமுத்து ஆசாரிக்கு முன்பே தெரிந்துள்ளது. இது கண்டு பெரிய மருது வருந்துகிறார். ஆசாரியின் நாட்டுப் பற்றை வியந்து அவனுக்கு கோவிலில் சிலை ஒன்றை வைத்துச் சிறப்புச் செய்கிறார்.
பசும்பொன் ஆண்டுமலரிலிருந்து
வீரபாண்டிய கட்டபொம்மன் வீழ்சி:
மருது சகோதர்களின் வீரத்திற்கு முன் வெள்ளையரின்போர்த்திறமை வெற்றி பெறவில்லை. வெள்ளையர்கள் தக்க தருணம் பார்த்துக் காத்திருந்தனர். அப்பொழுது வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியில் ஜக்கம்மாதேவி வழிபாட்டில் இருந்தான். இரவோடு இரவாக எட்டப்பனின் சூழச்சியால் பானர்மேனின் ஆங்கிலப் படைகள் பீரங்கிகள் உதவியுடன் பாஞ்சாலங் குறிச்சிக்குள் புகுந்தது. இதை சற்றும் எதிர்பாராத வீரபாண்டிய கட்டபொம்மன், தம்பி ஊமைத்துரை ஆகியோர் தாக்கப்பட்டு கட்ட பொம்மன் அவன் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.
ஊமைத்துரை தப்பித்து உடம்பெல்லாம் இரத்தம் சொட்ட சிவகங்கைச் சீமைக்கு வந்து சின்னமருதுவை சந்தித்து நடந்த விவரங்களைக் கூறினான். பெரிய மருது மனம் துடித்தார். சின்னமருது பொங்கி எழுந்தார். நம்மை நம்மவர்களே காட்டிக்கொடுக்கும் இழிநிலை இருப்பதால்தான் கட்டபொம்மனுக்கு தோல்விஏற்பட்டுள்ளது என்று பெரிய மருது வருந்தினார். ஊமைத்துரைக்கு தாம் அடைக்கலம் கொடுத்தால் வெள்ளையர் தம்மீது வெறுப்பு கொண்டு போர்த் தொடு்க்கலாம் எனவே அவசர அவசரமாக சில மாறுப்பட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டனர். அமராவதிப் புதூர் கோட்டையை வலுவுடையதாக்கி ஊமைத்துரையை அங்கு தங்க வைத்தனர். திருமயம் கோட்டையையும் ஊமையன் கோட்டையும் தரப்பட்டது. பெரியமருது எதிர்பார்த்தது போலவே, வெள்ளையர்களின் போக்கு பிடிக்காமல் ஆர்காடு நவாப் உம்தார்-உல் உத்ரா மருது சகோதரர்களுக்கு உதவுவது என்று முடிவெடுத்து ஊமைத்துரையை விடுவிக்காவிட்டால் வெள்ளையர்கள் போர்தொடுக்க இருக்கிறார்கள் என்றும், கட்டபொம்மனின் குடும்பத்தை பாளையங்கோட்டைச் சிறையில் வைத்துள்ளதாகவும் கடிதம் அனுப்பி இருந்தான். கட்டபொம்மனின் குடும்பத்தை சின்ன மருது காப்பாற்ற வேண்டுமென்று முடிவெடுக்கப் படுகிறது. அப்பொழுது வெள்ளையன் கர்னல் சுமித்திடமிருந்து ஓலை ஒன்று ஆங்கில வீரன் கொண்டு வந்து கொடுத்தான்.
அவ்வோலையில், ஊமைத்துரையை உடனே வெள்ளையரிடம் ஒப்படைக்க வேண்டும், இல்லைவிட்டால் வெள்ளையரரின் எதிர்ப்பு ஏற்படும் என்று எழுதப்பட்டிருந்தது.
ஊமைத்துரையை ஒப்படைக்கு இயலாது எதிர்ப்பை எதிர்கொள்வதாகவும் ஆங்கில வீரனிடம் சொல்லி அனுப்பப்படுகிறது. அத்துடன் அன்று இரவே பாளையங்கோட்டை நோக்கி சின்னமருது உதயபெருமாள் தலைமையில் வீரர்கள் நாட்டு வெடிக்குண்டுகளுடன் மாறுவேடத்தில் செல்ல ஏறட்பாடாயிற்று.
காட்டில் இளைப்பாறிவிட்டு நடு இரவில் பாளையங்கோட்டையை அடைந்தனர். உதயப்பெருமாள் தலைமையில் சில வீரர்கள் கோட்டையைச் சுற்றி உள்ள காவலர்களை எதிர்க்க ஏற்பாடு செய்துவிட்டு கோட்டைக் கதவுகளை உடைத்தெறிந்து உள்ளே புகுந்தனர். இந்த திடீர் தாக்குதலை எதிரபாராத ஆங்கில வீரர்கள் அலறிக் கொண்டு ஓடினர். சிறை வைக்கப்பட்டிருந்த வீரபாண்டியனின் குடும்பத்தார், சிறையிலிருந்து மீட்கப்பட்டனர். சிறைக் கூடமும் சின்னா பின்னமாக்கப்பட்டது. கட்டபொம்மனின் குடும்பத்தார் சிவகங்கை அரண்மனையில் சகல மரியாதைகளுடன் வைக்கப்பட்டனர். கட்ட பொம்மனின் குடும்பம் காப்பாற்றப்பட்ட செய்தி அறிந்து கவர்னர் வெல்ஸ்லி கடுங்கோபம் கொண்டான். அவனது ஆதராவால் தஞ்சையின் ஆட்சிக்கு வந்த சரபோசி மன்னனை தஞ்சையிலிருந்து இறக்கிவிட்டு ஆட்சிப் பொறுப்பை தாமே ஏற்றுக் கொண்டு தஞ்சைக் கோட்டை, வல்லம் ஆகியவற்றை தஞ்சை மன்னனிடம்
ஒப்படைத்தான். அடுத்ததாக தஞ்சை மன்னன் சரபோஜின் உதவியோடு சிவகங்கை மீது படையெடுக்க வெள்ளையர்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் ஒன்றை ஆர்க்காடு நவாப் பெரிய முருதுவுக்கு அனுப்பி இருந்தான். படையெடுப்பை எதிர்கொள்ள ஏற்பாடுகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.
திருமயம் கோட்டைக்கு சின்னமருது அனுப்பப்பட்டார். அங்கு எதிர்பாராத விதமாக தொண்டைமான் தளபதி சர்தார் கிருஷ்ணன் சின்னமருது, ஊமைத்துரை ஆகியவர்களிடம் சிக்கி மனம் மாறி தொண்டைமானுக்கு எதிராகச் செயல்பட அவர்களிடம் உறுதி அளித்தான். கட்டப் பொம்மனின் குடும்பத்தார் பத்திரமாக சிவகங்கை அரண்மனையில் இருப்பதை சின்னமருது சொல்லக் கேட்டு சின்னமருதுவைக் கட்டித் தழுவிக் கொண்டான்.
அதன் பிறகு ஊமைத்துரையின் தலைமையில் தூத்துக்குடி துறைமுகம் பெளர்ணமி நாளொன்றில் தாக்கப்பட்டது. வெள்ளையர் வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். துறைமுகம் தீயிட்டு அழிக்கப்பட்டது. சர்தார் கிருஷ்ணன் எதிபாராத விதத்தில் வெள்ளைக் காரனின் துப்பாக்கிக் குண்டிற்கு இறையானான்.
இதைக் கண்ட ஊமைத்துரை கோபம் தலைக்கேறியது. துரை அக்னியூவைத் தேடினான். ஆனால் அவன் சில வீரர்களுடன் தப்பி விட்டான். மருது பாண்டியரின் உதவியால் தான் ஊமைத்துரை தூத்துக்குடியை அழித்தான் என்றறிந்த கர்னல் ஸ்மித் மருது பாண்டியரே ஆங்கிலேயர்களின் முதல் எதிரி என்று கருதினான்.
பசும்பொன் ஆண்டுமலரிலிருந்து
ஆங்கிலேய படையெடுப்பு - 5
இந்நிலையில் மருது சகோதரர்கள் உதயக்குமார் ஆகியோர் திருக் கோஷ்டியூர் சென்று வழிபட்டுவிட்டு , ஏரியூர் வழியாக குனறக்குடி சென்று முருகனை வழிபட்டனர். மலையை விட்டு இறங்கிய பொழுது தூரத்தில் படையொன்று அணிவகுத்து வருவதைக் கண்டனர். அப்படை சிவகங்கை நோக்கி வந்து கொண்டிருந்தது. உடனே மருதுபாண்டியர்கள் குறுக்கு வழியாக சிவகங்கைக்கு திரும்பினர். சிவகங்கைக்குத் திரும்பிய மருது சகோதரர்கள் போருக்கான விரைவு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதற்கிடையில் திருச்சியிலிருந்தும் தஞ்சையிலிருந்தும் ஆங்கிலப் படை வீரர்கள் சிவகங்கை நோக்கி விரைந்தன.
போர் பிரகடனம்:
சிவகங்கைப் போர் ஆங்கிலேயர்களுக்கச் சவாலாக இருந்தது. நவாப், தொண்டைமான், தஞ்சைமன்னன், இராமநாதபுரம் அரசர், மற்றைய பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களிடம் சரணடைந்த நிலையில் சிவகங்கைச் சீமை மட்டும் அவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. எப்படியும் சீமையை வீழ்த்தி வெற்றி பெறத் துடித்தது ஆங்கில கம்பெனி. இந்த நிலையில் ஊமைத்துரை தொண்டைமானுக்கு. ஒரு கடிதம் எழுதினான் அதில் ஆங்கிலேயர்களுக்குத் துணை நிற்பது மோசமான நிலையை உருவாக்கும், எனவே உனது ஆதரவை எனக்குக் கொடுத்து வெள்ளையரிடமிருந்து நாட்டைகக் காப்பாற்ற வேண்டும் என்று ஆதரவுக் கேட்டிருந்தான். சின்ன மருதுவோ நடக்க போகும் போரை எதிர்க்கொள்ள ஜம்புத் தீவு பிரகடனம் ஒன்றை தயார் செய்து திருவரங்கம் கோவில் கதவிலும் திருச்சி மலைக் கோட்டையிலும் ஒட்டி ஆங்கிலேயர்களுக்கு ஒரு போதும் துணை பொக வேண்டாம், அப்படி துணை போகிறவர்கள் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவர், என்று அறிவித்தார்.
இதை அனுசரிக்காத முசல்மான்கள் (முஸ்லீம்) பன்றியின் இரத்தத்தை குடித்தவர்களாவர் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ஆங்கிலேயர்களை மட்டுமின்றி, ஐரோப்பிய இழி பிறவிகளை ஒரு போதும் மன்னிக்காத, மருது பாண்டியன் என்று தன்னை அடையாளம் கொண்டிருந்தார். இந்த மாதிரி ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியாவில் வேறு எந்த அரசரோ பாளையக் காரர்களோ கண்டன அறிக்கை வெளியிட வில்லை. அந்த அளவுக்குத் துணிவும் இல்லை.
இந்திய நாட்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மைசூரில், மைசூர் போர்; மைசூர் போர்!!! என்றும், கர்நாடகப் போர் ; கர்நாகப் போர் !!! என்றும் குறிப்பிட்ட பெரிய போர்களைப் போல் சிவகங்கைச் சீமையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த போர்க்களங்கள் அநேகம். அவற்றில் மணலூர் போர், திருப்புவனம் போர், முத்தனேந்தல் போர், காளையார் கோவில் போர், சிவகங்கைப் போர், மங்கலம் போர் மானாமதுரைப் போர், திருப்பத்தூர் போர், பார்த்திபனார் போர், காரான்மைலைப் போர் ஆகியவை குறிப்பிடபத்தக்கவை. இப்படி நடந்த போர்களை இக்கட்டுரையில் விவதாதிக்க இடம் போதாது. இந்த முறை 150 நாட்களுக்கு மேலாக போர் நடந்தன. அப்பொழுது மருது பாண்டியரை வெற்றி கொள்ள வேண்டுமானால் சிறுவயல், முத்தூர், சோழபுரம் ஆகிய மூன்று வழிகளில் சென்றால் காளையார் கோவிலை நெருங்கலாம் என்று உடையத் தேவன் உளவு கூறினான்.
அதன்படி காளையார் கோவிலை ஆங்கிலப் படை சுற்றி வளைத்தது. அவர்களின் பிடியிலிருந்து மருது சகோதரர்கள் காட்டுவழியே தப்பி மங்கலம் சென்றடைந்தனர்.
புரட்சிப் படையினர் பாதுகாப்புக் கொடுத்தனர். அப்படி தப்பி வரும் வழியில் களைப்புத் தீர பழையச் சோறு கொடுத்துதவிய மூதாட்டிக்கு ஒரு கிராமத்தைத் தானமாக ஓலையில் எழுதிக் கொடுத்ததும் மனதில் நிற்கிறது.
அங்கும் ஆங்கிலப் படையினர் திமுதிமுவென நுழைந்தனர். அங்கு நடந்த போரில் சின்னமருது துப்பாக்கிக் குண்டுபட்டு கைதானார். பெரிய மருதுவும் கைது செய்யப்பட்டார். மருது பாண்டியர்களும் அவர்களது குடும்பங்களும் திருப்பத்தூர் கொண்டு சென்று காவலில் வைக்கப்பட்டனர். 24.10.1801 அன்று அவர்கள் அனைவரும் தூக்கிலிடப்பட்டனர். அவர்களுடன் 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தார்கள், வீரர்கள் இரக்கமின்றி தூக்கிலிடப்பட்டனர். இது ஜாலியன் வாலாபாக் படுகொலையைவிடக் கொடுமையானது.
தூக்கிலிடுமுன் உங்களின் கடைசி ஆசை என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு தூக்கிலிடப்பட்டபின் தங்களது உடல்களை காளையார் கோவில் கோபுர வாசலுக்கு எதிராகப் புதைத்து விட வேண்டும் என்றும், நாங்கள் இதுநாள் வரை எடுத்துமூலமாக, ஓலை மூலமாக வாய்மொழி மூலமாக கொடுக்கப்பட்ட மானியங்கள் தொடரவேண்டும் என்றும், அப்படி அறிவித்து இருக்கும் மானியங்களையும் உடன் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இது அவர்களது கொடைத் தன்மையையும் , நன்றி மறவாத் தன்மையையும் மன உறுதியையும் வெளிப்படுத்துகிறது.
அவைகள் அனைத்தும் வழங்கப்படும் என்று ஆங்கிலேயக் கர்னல் அக்னியூ உறுதி அளித்தான். அதன்படி அவைகளை பின்பு நிறைவேற்றப்பட்டன.
24-10-1801 அன்று தலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் வீரர்களின் உடல்கள் குவிந்திருந்த காரணத்தாலும், ஆங்கிலேயர்களிடம் ஏற்பட்ட பயம் காரணத்தாலும் மக்கள் இறந்தவர்களை அடையாளம் தெரிந்து அடக்கம் செய்ய துணியவில்லை, இரண்டு, மூன்று நாட்கள் கழித்து 27-10-1801ல் அன்று மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் உடலகளை காளையார் கோவிலுக்கு கொண்டுவரப் பெற்று அவர்களது விருப்பப்ட்ட கோபுரத்திற்கு எதிரே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் சின்னமருதுவின் மூன்றாவது மகன் துரைசாமி மட்டும் தேசத்துரோக கைதியாக சுமத்திரா தீவிற்குக் கொண்டு செல்லப்பட்டான். அவனோடு மேலும் 72 வீரர்கள் கைதிகளாக நாடு கடத்தப்பட்டனர். என்று கூறப்படுகிறது.
நாட்டிற்காகத் தங்கள் இன்னுயிர் ஈந்த மாமன்னர் மருதுபாண்டியர்களின் தியாகம் வேறு எவரும் செய்திராத ஒன்று அவர்கள் நவாப்பிற்கோ, ஆங்கிலேயருக்கோ மற்ற அரசர்களைப் போல், பாளையக்காரர்களைப் போல் கப்பம் கட்டவில்லை. சிவகங்கைச் சீமை பல வளங்களும் பெற்று சிறந்த நிர்வாகத்தின் கீழ் தனித்தொரு நாடாக - சீமையாக - விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இந்தியாவில் சுதந்டதிரத்திற்கு வித்திட்ட முதல் மாமன்னரக்களாவர். சுதந்திரமடைந்த குடியரசு பெற்ற இந்தியாவில் பல ஆண்டுகளாக அவர்களுக்கு மணி மண்டபமும் , அஞ்சல் தலை வெளியிடவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால் கடந்த 24-10-2004 அன்று தான் அஞ்சல் தலை நடுவன் அரசாலும், மாநில அரசாலும் வெளியிடப்பட்டது. பல ஊரக்களை மக்களுக்கும் கோவில்களுக்கும் மாநியமாக வழங்கிய அவர்க்களுக்கு காளையார் கோவிலில் மணி மண்டபம் கட்ட வேண்டும் என்ற நமது கனவை நிறைவேற்றுவது மாநில அரசின் கடமையாக நான் கருதுகிறேன். ஆட்சிப் பொருப்பில் உள்ளவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன்.
தியாகிகளுக்கோ, தலைவர்களுக்கோ நினைவு நாள் ஒரு நாள் தான் கொண்டாடப்படும். மாமன்னர் மருது பாண்டியர்கள் இரட்டை மன்னர்கள் என்பதாலும், அவர்கள் தியாகிகள் என்பதாலும் அவர்களுக்கு ஆண்டு தோறும் அக்டோபர் திங்கள் 24ம் நாளும் 27ஆம் நாளும் முறையே தமிழ்நாடு அரசு விழாவாக திருப்பத்தூரிலும், சமுதாய விழாவாக காளையார் கோவிலிலும் கொண்டாடப்பட்டு வருவது இயற்கையன்னை மருது பாண்டியர்களுக்கு வழங்கிய பெருமையாகும்..

எப்படிப் பாடினரோ? : கோவில் கோபுரங்களை காத்த மருது பாண்டியர் கதை

சென்னை : பொதிகை "டிவி'யில் தினமலர் வழங்கும், "எப்படிப் பாடினரோ' ஆன்மிக இசைப் பயண நிகழ்ச்சியில் இன்று, காளையார் கோவில் பற்றிய நான்காம் மற்றும் நிறைவுப் பகுதி ஒளிபரப்பாகிறது. வாரந்தோறும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில், காலை 11.30 முதல் 11.55 வரை தினமலர் வழங்கும், "எப்படிப் பாடினரோ' நிகழ்ச்சி, பொதிகை "டிவி'யில் ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய நிகழ்ச்சியில், இக்கோவிலின் கோபுரங்களை தன் இன்னுயிர் ஈந்து, வெள்ளையரிடமிருந்து காத்த மருதுபாண்டியர் கதை, குப்பமுத்து ஆசாரியின் தியாகம், கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள் ஆகிய விவரங்கள் இடம்பெறுகின்றன.

VIDEO-SIVAGANGAI SEEMAI

மருதுபாண்டியர்கள்-கோர்லே

 

மருதுபாண்டியர்கள்

Post  
“நான் இந்தப் பக்கங்களில் கூறியிருக்கும் நிகழ்வுகள் பன்னிரெண்டு, பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவ அதிகாரி ஒருவரால் என்னிடம் கூறப்பட்டவை. அவர் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்.
என்னிடம் அவர் சொன்னது இது: ‘உன்னால் இந்த உண்மைக் கதையை உலகத்திற்குச் சொல்ல முடியும். என்னால் முடியாது.’ ”

இது கோர்லே என்னும் ஆங்கிலேயர் எழுதிய புத்தகத்தின் தொடக்கம். இந்தப் புத்தகம் 1813இல் எழுதப்பட்டது. மருது பாண்டியரின் கதையைச் சொல்வது. (எனக்குத் தெரிந்த அளவில்) வரலாற்று ஆசிரியர்களின் பார்வையில் இன்றுவரைக்கும் படாதது. பதிப்பாளர் அகப்படாததால் (அல்லது பதிப்பிக்க மறுத்ததால்) அவராலேயே பதிப்பிக்கப்பட்டது.

புத்தகத்தின் பெயர்: Mahradu- An Indian Story of the Beginning of the Nineteenth Century – With Some Observations on the Present State of the British Empire and Chiefly of its Finance.. லண்டனில் பதிப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் விலை நான்கு ஷில்லிங்குகள்.




புத்தகம் எழுதப்பட்டிருக்கும் விதம் படிப்பவர்களையும் படிக்கத் தான் வேண்டுமா என்று யோசிக்கவைக்கும். நமது கழக எழுத்தாளர்களையே வியக்கவைக்கும் அளவிற்கு, ஒவ்வொரு வாக்கியமும் ஒரு பக்கத்திற்கு மேல். முதற்பகுதி மருது பாண்டியரைப் பற்றி. பின்பகுதி பிரித்தானியப் பேரரசின் வரவு செலவு விவகாரங்களைப் பற்றி.

உண்மையைச் சொல்ல வேண்டும், இதுவரை சொல்லாததைச் சொல்ல வேண்டும் என்னும் ஆசிரியரின் ஆர்வம் புத்தகத்தின் முதற்பகுதியில் வெளிப்படுகிறது. அவர் சொல்லும் உண்மை அதிரவைக்கும் உண்மை. இதுவரை வெளிவராத உண்மை. ஒரு அழித்தொழிப்பைப் பற்றிய உண்மை.

பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழகத்தைப் பற்றிப் பேசும் அனைவரும் மருது சகோதரர்களை வென்றது பற்றியும் அவர்கள் தூக்கிலிடப்பட்டது பற்றியும் குறிப்பிடத் தவறுவதில்லை. கர்னல் வெல்ஷ் தனது “இராணுவ நினைவுகள்” நூலில் மருது சகோதரர்களுடன் நடந்த போரைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார். கட்டபொம்மன் வெள்ளையரை எதிர்த்துப் போர் புரிந்ததற்குக் காரணம் இருந்தது. ஆனால் மருது போர் புரிந்ததற்குக் காரணம் ஏதும் இல்லை என்று சொல்லும் அவர், மருதுவின் வீரர்கள் பாஞ்சாலங்குறிச்சி வீரர்களைப் போலப் போர் புரியவில்லை என்கிறார்.

Indeed twenty thousand Panjalumcoorcheers would have been invincible in his country.

“இருபதாயிரம் பாஞ்சாலங் குறிச்சிக்காரர்கள் இவரது நாட்டில் இருந்திருந்தால், அவர்கள் வெல்ல முடியாதவர்களாக இருந்திருப்பார்கள்.”

தனக்கும் மருது சகோதரர்களுக்கும் உள்ள தோழமையைப் பற்றி வெல்ஷ் இவ்வாறு கூறுகிறார்.

“(இருவரில்) மூத்தவரின் பெயர் வெள்ளை மருது. இவருக்கும் அரசாளுவதற்கும் தொடர்பே கிடையாது. இவர் பெரிய வேட்டைக்காரர். வாழ்வு முழுவதையும் சுற்றித் திரிந்தே கழித்தவர். ஒப்பற்ற உடல் வலிமை கொண்ட இவர் ஆர்க்காட்டு ரூபாயைத் தனது விரல்களால் வளைக்கக்கூடியவர். ஐரோப்பியர்களால் மிகவும் மதிக்கப்பட்டவர். புலி வேட்டையில் முதலில் நின்று புலியைக் கொல்வது இவர்தான். இவரது தம்பி சின்ன மருது சிறுவயதிலிருந்து அரசாண்டவர். அவரது தலையசைப்பையே சட்டமாக மதித்தனர் அவரது மக்கள். அவரது அரண்மனையில் ஒரு காவலாளிகூடக் கிடையாது. யாரும் உள்ளே செல்லலாம், வெளியே வரலாம்.”

தனக்கு வேல் பிடிக்கவும் களரிக் கம்பு வீசவும் கற்றுக்கொடுத்தது சின்ன மருதுதான் என்று கூறும் வெல்ஷ், ஒரு மிருகத்தைப் போல அவர் வேட்டையாடப்பட்டதையும் தொடையில் காயப்பட்டு, காலொடிந்து சிறைப்பட்டதையும் சாதாரணக் குற்றவாளியைப் போலத் தூக்கிலிடப்பட்டதையும் மனவருத்தத்தோடு கூறுகிறார். வெல்ஷின் கூற்றுப்படி, சின்ன மருதுவின் கடைசி மகனைத் தவிர அவரது குடும்பத்தவர் அனைவரும் வெள்ளையரால் தூக்கிலிடப்பட்டனர். கடைசி மகன் துரைசாமிக்கு அப்போது வயது பதினைந்து. பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்.

“தூத்துக்குடியில் இருந்த இராணுவ அணிக்கு நான் தலைமை தாங்க அனுப்பப்பட்டேன். கலகத்தில் ஈடுபட்டதால் நாடுகடத்தல் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அங்குதான் இருந்தார்கள். அங்குதான் எனக்கு என் பழைய நண்பர் சின்ன மருதுவின் மகன் துரைசாமியின் விலங்குகளைத் தளர்த்தும் வாய்ப்பு - எனது நெஞ்சை உருகவைக்கும் வாய்ப்பு - கிடைத்தது. அவரது காவல் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்ததால், என்னால் அவரைத் தப்பவைக்க முடியவில்லை.”

உரிய மரியாதையுடன் அவரை நடத்த ஆணையிட்ட வெல்ஷ், பதினேழு வருடங்கள் கழித்து அவரைத் திரும்பப் பினாங்கில் மிகவும் தாழ்ந்த நிலையில் சந்தித்ததையும் தனது நினைவுகளில் குறிப்பிடுகிறார்.மருதுவின் குடும்பத்தினர் தூக்கிலிடப்பட்டதாகக் கூறும் வெல்ஷ் சிறுவர்கள் தூக்கிலிடப்பட்டதாகக் குறிப்பிடவில்லை.

ஊழலில் பிறந்து ஊழலிலேயே வளர்ந்ததாகக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசைக் குற்றஞ்சாட்டும் கோர்லே இவ்வாறு கூறுகிறார்;

“இது (இந்த அரசு) திறமையின் சாயலைக்கூட வெறுப்பது; ஏனென்றால் திறமை ஊழலின் எதிரி என்று அதற்குத் தெரியும். இந்த அரசு தாங்கிப் பிடிப்பது அதிகாரத்தை - வரைமுறையற்ற, கீழ்த்தரமான அதிகாரத்தை -ஏனென்றால் அதிகாரத்தால் மட்டுமே தன்னால் நிலைத்து நிற்க முடியும் என்று அதற்குத் தெரியும்.”

கோர்லே தனது புத்தகத்தில் மருதுவின் புகழ்பெற்ற திருவரங்கம் அறிக்கையை முழுவதுமாக வெளியிட்டிருக்கிறார். இந்த அறிக்கையைப் பற்றி நான் எனது ‘புலிநகக் கொன்றை’யில் குறிப்பிட்டிருக்கிறேன். விடுதலை வேண்டி அடிமனத்தின் ஆழத்திலிருந்து குரல் கொடுக்கும் இந்த அறிக்கை கோர்லேயையும் மிகவும் பாதித்திருக்கிறது. இந்த அறிக்கையைக் கி பி முதல் நூற்றாண்டில் ஜூலியஸ் அக்ரிகோலாவின் தலைமையில் நிகழ்ந்த ரோமானியப் படையெடுப்பிற்கு எதிராகக் கால்ககஸ் (Calgacus/Galgacus) என்ற கலடோனியத் (வட ஸ்காட்லாந்து) தளபதி நிகழ்த்திய பேருரைக்குக் கோர்லே ஒப்பிடுகிறார்.

“மனித இயல்பு எங்கேயும் ஒன்றுதான். எங்கெங்கெல்லாம் இறைவனால் தன்மானம் சிறிதளவாவது அளிக்கப்பட்டிருக்கிறதோ அங்குள்ளவர்களின் உணர்வுகள் ஒன்றாக இருக்கும் - அவை காலங்களையும் எல்லைகளையும் கடந்தவை. மருதுவின் அறிக்கையின் நோக்கம் அவரை நசுக்குபவர்களைக் கொடுங்கோலர்களாகவும் கூலிப்படைகளாகவும் உண்மையான வீரர்களின் அடிப்படைத் தன்மைகளான பரந்த மனமும் உயர்ந்த உள்ளமும் அற்றவர்களாகவும் சித்தரிப்பதுதான். கால்ககஸின் நோக்கமும் அதுவே.”


மருதுவின் அறிக்கை ஆங்கிலேயர்மீது அவர்கள் இந்தியாவில் ஆட்சி செலுத்தும் முறைமீது மக்களின் ஆழ்மனங்களில் இருப்பதை வெளிப்படையாகக் கூறுகிறது என்று குறிப்பிடும் ஆசிரியர், இந்த அறிக்கை ஆங்கிலேயரின் மிகக் கீழ்த்தரமான பழிவாங்கும் எண்ணத்தை உசுப்பிவிட்டது என்கிறார். அவர் எழுதியதை ஆங்கிலத்திலேயே தருகிறேன்:

Instantly, on receipt of this paper, sedition! Rebellion! was the cry; and the willing mandate was speedily prepared, which consigned the unhappy Mahradu and every male branch of his family to dishonourable grave.

ஆசிரியரின் கூற்றுப்படி எல்லா ஆண்களும் கல்லறைக்குச் சென்றனர் - சிறுவர்களும்கூட.

கோர்லே கூறுகிறார்:

“பாளையக்காரர்மீது போர் அறிவிக்கப்பட்டது. அவரது பாளையத்திற்குத் தீவைத்து அழிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரையும் அவரது குடும்பத்தில் இருந்த ஆண் மக்கள் அனைவரையும் கைதுசெய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. பிடிபட்ட அனைவரையும் ராணுவக் குழு ஒன்றின் மேற் பார்வையில் விசாரணை ஏதும் இன்றித் தூக்கிலிட ஆணை தரப்பட்டது, நான் கூறுவது வாசகர்களுக்குச் சந்தேகத்தைத் தரலாம். ஆனால் இந்த ஆணைகள் சிறிதுகூட மாற்றமின்றி, காலதாமதமின்றி நிறைவேற்றப்பட்டன.”

மருதுவும் அவரைச் சார்ந்தவர்களும் ஓர் அங்குலம் பரப்பளவைக்கூட விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டனர்.

1801ஆம் ஆண்டு மத்தியில் விதியால் வெல்லப்பட்ட மருதுவும் அவரது குடும்பத்தினரும் சிறைபிடிக்கப்பட்டனர். இரண்டு அல்லது மூன்று பேர்களாக இராணுவ மன்றத்தின்முன் கொணரப்பட்டு உடனே தூக்கிலிடப்பட்டனர். இந்தத் தண்டனையை நிறைவேற்றிய இராணுவக் கேப்டன் தனது நிலைமையை நன்றாக உணர்ந்திருந்தார். தான் செய்வது இதுதான் என்று எழுத்து மூலம் மேலிடத்திற்குத் தெரிவித்து எழுத்து மூலம் அனுமதி பெற்ற பிறகே அவர் தனது கடமையைச் செய்தார் என்று கோர்லே சொல்கிறார்.

“எல்லோராலும் மதிக்கப்பட்ட தலைவனுடன், அவனுடைய வயதான அண்ணனும் அழைத்துவரப்பட்டார். “Dummy” என்று அழைக்கப்பட்ட அவர் பிறவியிலேயே ஊமை. (ஆசிரியர் ஊமைத்துரையைக் குறிப்பிடுகிறார். ஊமைத்துரை மருதுவின் உறவினர் அல்ல என்பது ஆசிரியருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை).* இவர்களுடன் மருதுவின் மகன்களும் பேரன்களும் - பத்துப் பன்னிரெண்டு வயதுச் சிறுவர்கள் - தூக்கிலிடப்பட்டனர்.

மருது ராணுவ மன்றத்திடம் தனக்குத் தயை ஏதும் காட்ட வேண்டாம் என்று சொன்னார். ‘நான் என் நாட்டைக் காப்பதற்காகச் சண்டையிட்டுத் தோற்கடிக்கப்பட்டேன். என்னுடைய உயிரைப் பறிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். நான் அது பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்தச் சிறுவர்கள்? இவர்கள் என்ன தவறுசெய்தனர்? இவர்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்களா? இவர்களைப் பாருங்கள், இவர்களால் ஆயுதம் எடுக்க முடியுமா?’

மருதுவின் இந்தக் கோரிக்கை, மூழ்கும் மாலுமி கடலிடம் முறையிட்டதைப் போலத்தான்!”

எனக்கு “கேட்டனையாயின் வேட்டது செய்ம்மே” என்று முடியும் புறநானூற்று வரிகள் நினைவிற்குவருகின்றன. கோவூர்க்கிழார் மலையமான் மக்களை யானை இடறுவதிலிருந்து காப்பதற்காகப் பாடிய பாடலின் வரிகள். ஆங்கிலேயர்கள் கிள்ளிவளவன் அல்லர். வேட்டதையே செய்தனர்.

கோர்லே கூறுகிறார்:

நான் இந்த நிகழ்வுகளை நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் இவை ஆயிரக்கணக்கான கம்பெனி துருப்புகளின் முன்னிலையில் நிகழ்ந்தவை. அரசரின் 74, 77, 94 ரெஜிமெண்டுகளின் முன்னால் நிகழ்ந்தவை. நான் இந்த நிகழ்வுகளை உங்கள் முன் கொண்டுவந்ததற்காக எந்தப் பாராட்டையும் கேட்கவில்லை. நீதியின் துணைவராக இருக்கும் - இருந்த - இந்த நாட்டின் கைகளில் இவற்றை ஒப்படைக்க வேண்டிய கடமை எனக்குக் கொடுக்கப்பட்டது. அதை நான் நிறைவேற்றிவிட்டேன்.”

இந்தப் புத்தகத்திற்கு வரவேற்பு எப்படி இருந்தது?

கோர்லேயின் புத்தகத்திலேயே ஒரு வரி இருக்கிறது. “Everything again favours the French Emperor”. 1813ஆம் ஆண்டில் நெப்போலியன் ஐரோப்பா முழுவதையும் ஆண்டுகொண்டிருந்தார். ஆங்கில மக்களின் பார்வை முழுவதும் ஐரோப்பா மீதிருந்தது. நெப்போலியனுக்கு எதிராக அமைத்த கூட்டணி 1813ஆம் ஆண்டு ட்ரெஸ்டனில் நடந்த போரில் படுதோல்வி அடைந்தது. கூட்டணி 40,000 பேரை இழந்தது. 1805ஆம் ஆண்டிலிருந்து 1815 வரை நடந்த போர்களில் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலைமையில் பத்து, பதினைந்து சிவகங்கைச் சீமைச் சிறுவர்களைப் பற்றி நினைக்க ஆங்கில அரசிற்கோ வாசகர்களுக்கோ நேரம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.

ஆனாலும் இந்தப் புத்தகத்திற்கு ஒரு மதிப்புரை வந்தது. லே ஹண்ட் (Leigh Hunt) என்னும் மிகப் புகழ் பெற்ற கட்டுரையாளர் இந்தப் புத்தகத்திற்குத் தன்னுடைய The Examiner என்னும் பத்திரிகையில் மதிப்புரை எழுதினார். ஹண்ட் தன்மானம் மிக்க பத்திரிகையாளர். கீட்ஸ், ஷெல்லி போன்ற கவிஞர்களின் நண்பர். மன்னர் மூன்றாம் ஜார்ஜின் மகன் (பின்னால் நான்காம் ஜார்ஜாகப் பதவி ஏற்றவர்) பற்றி எழுதிய கட்டுரை ஒன்றிற்காக (1813இல் எழுதிய கட்டுரை!) இரண்டு வருடம் சிறை சென்றவர்.

இந்த மதிப்புரையில் (மதிப்புரையின் சில முக்கியமான வரிகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கின்றன) அவர் கூறுவது இது: For if the story is true -which we cannot but doubt until better evidence be adduced -it is one of the most disgraceful and diabolical proceedings that have occurred in the present age.

இது உண்மைக் கதையாக இருந்தால் - உண்மையா என்பது தக்க சான்றுகள் வரும்வரை சந்தேகத்திற்கு உரியது - இது இக்காலத்தின் நடந்த மிக அவமானகரமான, பயங்கரமான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும்.

இந்த அழித்தொழிப்பு நிகழ்ந்ததற்கு வேறு சான்றுகள் இருக்கின்றனவா? நான் அறிந்த அளவில் இதைப் பற்றி எந்த வரலாற்று ஆசிரியரும் குறிப்பிட்டதில்லை என்று எண்ணுகிறேன். நான் அறிந்தது அதிகம் இல்லை. நான் வரலாற்று வல்லுநன் அல்ல.

இவரது கூற்று வெல்ஷ் எழுதியதற்கு மாறாக இருக்கிறது. மருது குடும்பத்தினர் அனைவரையும் அழித்தொழிக்க முடிவு எடுத்திருந்தால், துரைசாமி மட்டும் எவ்வாறு நாடு கடத்தப்பட்டார்? ஒருவேளை அவர் யார் என்பது அடையாளம் கண்டுகொள்ளப்படாததால் அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். வெல்ஷ்கூட மேற்கூறியபடி துரைசாமியைத் தூத்துக்குடியில் மற்ற கைதிகளுக்கு மத்தியில் தான் பார்த்ததாகக் குறிப்பிடுகிறார். அவர் இளவரசர் என்பதே மற்றவர்களுக்குத் தெரியவில்லை.

கோர்லேயின் புத்தகத்தில் தகவற் பிழைகள் பல இருக்கின்றன. ஆனால் அதனால் மட்டும் அவர் கூறுவதில் உண்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது. மேலும் கேட்டதையே புத்தகமாக எழுதுவதாக அவரே குறிப்பிடுகிறார். அவருக்கு இந்தப் புத்தகத்தால் ஆதாயம் ஏதும் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை. மாறாகத் தன்னுடைய பணத்தைச் செலவழித்துப் புத்தகத்தைப் பதிப்பித்திருக்கிறார். எனவே அவருக்குப் பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. நீதி கிடைக்க வேண்டும் என்ற உந்துதலால் எழுதப்பட்ட புத்தகம் அது என்பது அதைப் படித்தாலே தெரியும்


அழித்தொழிப்பு நடந்திருக்கக்கூடும் என்பதற்கு மறைமுகச் சான்று ஒன்று இருக்கிறது.

1841ஆம் ஆண்டு பிரித்தானிய பார்லிமெண்டின் மேலவை (The House of Lords) பிரிட்டிஷ் காலனிகளில் நடைமுறையில் இருக்கும் (இருந்த) அடிமை முறையைப் பற்றி ஓர் அறிக்கை கொண்டுவந்தது. அந்த அறிக்கையில் 1806ஆம் ஆண்டு Southern Court of Appeal திருச்சிராப் பள்ளி கொடுத்த இரண்டு தீர்ப்புகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது

சிவகங்கை ஜமீன்தார் இரண்டு விதவைகளுக்கு எதிராகத் தொடுத்த வழக்குகளை விசாரித்து முறையீட்டு மன்றம் வழங்கிய தீர்ப்புகள் அவை. சிவகங்கை ஜமீன்தார் உடையத் தேவர் என்று எண்ணுகிறேன். இவர் ஆங்கிலேயருடன் சேர்ந்துகொண்டு மருது சகோதரர்களுக்கு எதிராக இயங்கியதைப் பற்றி வெல்ஷ் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஜமீன்தார் பட்டம் விசுவாசத்திற்கு அளிக்கப்பட்ட பரிசு என்பதையும் அவர் சொல்கிறார். அவரது பட்ட மளிப்பு விழாவில், படைத் தளபதி கர்னல் அக்னியூவின் கால்களைக் கட்டிக்கொண்டு கண்ணீர்விட்டு நன்றி தெரிவித்ததையும் வெல்ஷ் குறிப்பிடத் தவறவில்லை.

இந்த விதவைகள் யார்?

முதல் விதவையின் பெயர் மீனம்மாள், சிவஞானம் என்பவரின் மனைவி; மருது சேர்வைக்காரரின் மருமகள். இரண்டாம் விதவையின் பெயர் வீராயி ஆத்தாள். மருது சேர்வைக்காரரின் மனைவி. இவர்கள் இருவருக்கும் சாதகமாக ஜில்லா கோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துத் தொடங்கப்பட்ட வழக்குகள் இவை.

1801இல் மீனம்மாள் தன்னுடைய நகைகளைத் தன் வேலைக்காரர் அழகு என்பவரிடம் கொடுத்துவைத்திருந்தார். அவரிடமிருந்து நகைகளைச் சிவகங்கை ஜமீன்தார் பறித்துக்கொண்டார். வீராயி ஆத்தாளின் கதை வேறு. அவர் ஒளித்துவைத்திருந்த நகைகளை ஜமீன்தார் கண்டுபிடித்துத் தனதாக்கிக்கொண்டார். நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 6,600 நட்சத்திரப் பகோடாக்கள் (1 நட்சத்திரப் பகோடா = சுமார் 4 கம்பெனி ரூபாய்கள் - இன்றைய விலையில் நகைகளின் பெருமானம் பல கோடி ரூபாய்கள் இருக்கும்). ஜமீன்தார் இந்த நகைகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று ஜில்லா நீதிமன்றத்தில் தீர்ப்பாகியிருந்தது. இந்தத் தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்து, முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்புகளின் சுருக்கம் இது:

அரசு அறிக்கை 6 ஜூன் 1801இன்படி மருது சேர்வைக்காரரும் அவரது குடும்பமும் நெல்குடி (சிவகங்கை ஜமீன்தார்) வம்சத்திற்கு அடிமைகள். அடிமைக்குச் சொத்து கிடையாது. அப்படி அடிமை ஏதாவது சொத்துச் சேர்க்க நேர்ந்தால் அந்தச் சொத்து அடிமையின் சொந்தக்காரரைச் சென்றடையும். மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகளாகப் பிறக்கவில்லை. இருப்பினும் “ஸ்மிருதி சந்திரிகை”யின்படி அடிமைகளின் மனைவிகளும் அடிமைகளாகக் கருதப்படுவர். (1864க்கு முன்னால் நீதிமன்றங்களில் பண்டிதர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்து தர்ம சாத்திரங்கள் என்ன கூறுகின்றன என்பதை நீதிபதிகளுக்கு அவர்கள் தான் அறிவுறுத்தினர்.) அதனால் மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகள். அவர்களுக்கு நகைகள் போன்ற சொத்துகளை வைத்துக்கொள்ளும் உரிமை கிடையாது. அவர்களது நகைகள் சிவகங்கை ஜமீன்தாருக்குச் சொந்தம்.

இந்தத் தீர்ப்புகள் பல கோணங்களிலிருந்து ஆராயப்பட வேண்டியவை என்பதில் ஐயம் இல்லை. ஆனால் நமக்கு இவற்றிலிருந்து ஒரு சான்று கிடைக்கிறது. இரண்டு விதவைகளுக்கும் ஆண் வாரிசுகள் ஏதும் இல்லை என்பது தீர்ப்பிலிருந்து தெரிகிறது. ஆண் வாரிசுகள் இருந்திருந்தால் அவர்களைப் பற்றிப் பேசப்பட்டிருக்கும். மருதுவின் குலம் அழித்தொழிக்கப்பட்டது என்பதற்கு இந்தச் சான்று முக்கியமான ஒன்று என நான் எண்ணுகிறேன்.

தேடினால் பல சான்றுகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

மருதுவிற்கு நீதி கேட்க இருநூறு வருடங்களுக்கு முன்னால் ஓர் ஆங்கிலேயர் முன்வந்திருக்கிறார். தமிழர்கள் அனைவரும் அவருக்கு நன்றிசெலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

பிற்குறிப்பு: இந்தப் புத்தகங்களை எனக்குத் தேடித் தந்தது கூகிள். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பாட்லியன் நூலகமே நமது ஒரு சொடுக்கிற்குக் காத்திருக்கிறது.

மற்றொரு குறிப்பு: Gourlay என்னும் பெயர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பெயர். எனவே அவரை ஆங்கிலேயர் எனச் சொல்வதைவிட ஸ்காட்லாந்தியர் எனச் சொல்வதே சரியாக இருக்கும். இவர்களுக்கும் இங்கிலாந்தியருக்கும் எப்போதுமே உரசல்கள் இருந்திருக்கின்றன. Gourlay என்னும் பெயரை காவ்ர்லே என உச்சரிக்க வேண்டும் எனச் சிலர் சொல்கிறார்கள். நமக்கு கோர்லே என்பது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆசிரியர் கோர்லே பற்றி விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. Biographical Dictionary of Living Authors of Great Britain என்னும் புத்தகம் - 1816இல் வந்தது - இவரது பெயரைக் குறிப்பிடுகிறது. ஆனால் இந்தப் புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

* பெரிய மருதுவைப் பற்றியும் கோர்லே குறிப்பிடவில்லை,

கட்டுரையை எழுத உதவிய நூற்கள்:



1. Mahradu – An Indian Story of the Beginning of the Nineteenth Century - 1813 London

2. Military Reminiscences - James Welsh 1830 London

3. The Examiner 1813 Collection – Leigh Hunt

4. The Sessional Papers on Slavery Printed by the Order of the House of Lords - 1841, London

மருது பாண்டியர் வரலாறும் வழிமுறையும்-BOOK

ஆசிரியர்: முனைவர் கு.மங்கையர்கரசி
வெளியீடு: புத்தா பப்ளிகேஷன்ஸ்
பகுதி: வரலாறு
ISBN எண்: 

விலை:  ரூ.160 



  புத்தா பப்ளிகேஷன்ஸ், சென்னை. (பக்கம்: 320)
முன்னுரை, மருது சகோதரர்களும் சிவகங்கைப் பாளையமும், மருது சகோதரர்களின் எழுச்சி, அவர்களின் மேலாண்மை எதிர்ப்போர், அவர்களின் வீழ்ச்சி, அவர்களின் ஆக்கப்பணிகள், அவர்களைப் பற்றிய இலக்கியங்கள், அவர்களின் குடிவழி என எட்டு கட்டுரைகளாக இந்த ஆய்வடங்கல் வெளியிடப்பட்டுள்ளது.

சின்ன மருது ஜூன் 16, 1801ல், வெளியிட்டுள்ள திருச்சி அறிக்கை, மருது சகோதரர்களின் நோக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அக்கால கட்டத்தில் ஆங்கிலேயரி ன் ஆதிக்க எதிர்ப்பைக் காட்டிய மற்றவர்கள் இத்தகைய அறிக்கையை வெளியிடாதபோது சின்ன மருதுவின் துணிச்சல் நம்மை நெகிழ வைக்கிறது.

மருது சகோதரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதற்குக் காரணம் ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததும், சிவகங்கையின் உண்மைக் குடிவழியை நிலை நிறுத்த விரும்பியதேயாம் (பக். 302).

வீரத்தின் விளை நிலமாக விளங்கிய இச்சகோதரர்கள், பல அறப்பணிகளைச் செய்துள்ளனர். அரண்மனைகள், கோட்டைகள் பல அமைத்து நன்கு ஆட்சி செய்துள்ளனர். இதை ஆசிரி யை நன்கு விளக்கி உள்ளார்.

போராட்டம் வாழ்க்கையில் ஓர் அங்கம். ஆனால், இச்சகோதரர்களுக்கு போராட்டமே வாழ்க்கையாக அமைந்தது என்பதை வாசகர்கள் உணரும் வண்ணம் ஆசிரியை அழகுற விளக்கியுள்ளார். கருத்து வளமான நூலை, வெகு சுவாரஸ்யமாக எடுத்துச் செல்லும் திறமைக்கு படிப்பவர் பாராட்டாமல் இருக்க முடியாது.
  

Friday 20 May 2011

மருது பாண்டியர்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சி


மருதிருவர் பெற்ற சாபம்
சித்தபுருஷர் நாராயண யோகீஸ்வரர் சிவகங்கை அருகே உள்ள ஒர் சிற்றூர் காளையார்கோவில். பாண்டி நாட்டு சிவத்தலங்களுள் ஒன்று. மேலும் 18ம் நூற்றாண்டு ஆங்கிலேய எதிர்ப்புப் புரட்சிகளுக்கு மையமாக அமைந்த ஊர்.
சிவன் கோவிலில் 3 சிவலிங்கங்கள் உண்டு. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இவ்வூர் திருக்கானப்பேர் என அறியப்ப்டும் சிறப்பைத் தன்னகத்தே கொண்டிருந்தது.
இவ்வூரில் 2000 ஆண்டு காலமாக சித்த நிலை அடைந்த ஒரு யோக புருஷர் ஜீவ சமாதியில் இருந்து வந்தார். அவர் பெயர் நாராயண யோகீஸ்வர் என்பர். 1801ம் ஆண்டு ஜூலை வாக்கில் சிவன் கோயில் அர்ச்சகர்கள் ஒரு புதிரான சம்பவத்தைக் கண்டனர்.

நள்ளீரவு அர்த்த ஜாம பூஜை முடிந்து கதவுகள் மூடப்படும். வெளியிலிருந்து ஒருவரும் கோவிலிக்குள் செல்ல இயலாது. மறு நாள் காலையில் கதவுகள் திறந்ததும் சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் மாமிசத் துண்டுகள் மற்றும் எலும்புத் துண்டுகள் இறைந்து கிடக்கும்.
பல நாட்கள் இவ்வாறு நடக்கவே அர்ச்சகர்கள் ஆச்சர்யம், அதிர்ச்சி அடைந்து இதனை ஆட்சி அதிகாரத்திலுள்ள மருது இருவரிடம் தெரிவித்து ஆகம விதிகளுக்குப் புறம்பான கருவறைக்குள் மாமிச பண்டங்கள் சிதறுதலைத் தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
மருதிருவர் ஆச்சரியம் அடைந்தவராக சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் அர்த்த ஜாம காலத்திற்குப் பின்னர் இருந்து நிகழ்வுகளை ஆராய ஓர் ஓற்றரை நியமித்தார்.
மருதிருவரின் ஆணைப்படி கருவறைக்குளிருந்த ஓர் ஓற்றர் கதவுகள் அடைக்கப்பட்டபின்னும் கருவறைக்குள் ஒரு சுரங்கப்பாதை வழியே முதியவர் ஒருவர் வந்து சிவலிங்கத்திற்கு நிணம் கொண்டு பூஜை செய்வதை அவ்வொற்றர் கண்டு அப்பெரியவைக் கைது செய்து மருதிருவர் முன் நிறுத்தினர்.
மருதிருவர் அப்பெரியவரின் செயல் பற்றி வினவ அப்பெரியவர் தான் ஒரு சித்தபுருஷர் என்றும் கடந்த 2000 ஆண்டு காலமாக நிண பூஜை செய்து வருவதாகவும் இன்னிண பூஜை முறை சித்தர் சாத்திரப்படி சரியானது என்றும் பதிலளித்தார்.
அப்பெரியவரின் கூற்றில் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் அவர் ஒரு சித்தபுருஷர் என்பதை முறைப்படி நிறுவும்படி கோரவே அப்பெரியவர் அர்ச்சகர்களின் சவாலினை ஏற்றார். அதன்படி அப்பெரியவர் மண்ணுக்குள் ஆழப்புதைக்கப்படுவார். அதன் பின்னர் அப்பெரியவர் வேறு எங்காவது தோன்றவேண்டும். இதன்படி ஓர் ஒற்றர் ராமேஸ்வரம் அனுப்பப்பட்டார்.
அப்பெரியவர் மண்ணுக்குள் புதைக்கப்பட்டார். அப்பெரியவரின் கூற்றில் மீண்டும் மீண்டும் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் மருதிருவரைக் கொண்டு அப்பெரியவர் புதையுண்ட இடத்தினைத் தோண்டச் செய்தனர்.
அவ்விடம் தோண்டப்பட்டவுடன் அக்குழிக்குள் அப்பெரியவர் இன்னும் தவ நிலையிலிருந்ததையும் ராமேஸ்வரத்திற்கு அனுப்பட்ட ஒற்றனிடமிருந்து அப்பெரியவர் தற்சமயம் ராமேஸ்வரத்தில் தான் உள்ளார் என்ற செய்தி வந்ததையும் கண்டு திகைப்படைந்த அர்ச்சகர்கள் பின் வாங்கினர். தவ நிலை கலைந்த அப்பெரியவர் சித்தர் நாராயண யோகீஸ்வரர் தன் கூற்றினை நம்பாத அர்ச்சர்களை நம்பிய மருதிருவர்களுக்கு ஒரு சாபம் இட்டார்.
அதன்ப்டி அன்றிலிருந்து 90 நாட்கள் கழித்து மருதிருவரின் முடிவு அமையும் என்பது யோகீஸ்வரரின் சாபமாகும். யோகீஸ்வரரின் சாபத்திற்குள்ளான மருதிருவர் மிகச்சரியாக 90 கழித்து 24-10-1801 அதிகாலை ஆங்கிலேயர்களால் திருப்புத்தூரில் தூக்கு மேடையில் வீர மரணம் எய்தினர்.
சித்தர் நாராயண யோகீஸ்வரரின் ஜீவ சமாதி இன்றும் சிவகங்கை சமஸ்த்தான தேவஸ்தானத்தினரால் காளையார்கோவிலில் பேணப்பட்டு வருகிறது

முக்குலத்து வீரன் அழகு முத்துக்கோன் சேர்வை

(இந்த பதிவு நீண்ட பெரிய பதிவாக இருக்கலாம்.ஆனால், இங்கே சொல்லப்பட்டு இருக்கிற அனைத்து கருத்துகளும் மிக அரிய தகவல்கள்,அதனால்தான் எங்களால் எதையும் சுருக்கி பதிவேற்ற முடியவில்லை.காலம் கருதாமல் பொறுமையாக படித்து உணரவும் மறைக்கப்படும் வரலாற்று உண்மைகளை.
கோயில் = கோ+இல்; கோ – அரசு , இல் – இல்லம். அதுபோல, கோன் என்பது அரசன் என்ற பதத்தை குறிக்கும் சொல்.அழகு முத்து கோன் என்ற முக்குலத்து மாவீரனை கோனாராக்கி வேடிக்கை பார்ப்பதை உங்களுக்கு அறிய தரவே இந்த பதிவு. )
தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய முக்குலத்து மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை, அவனது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது.
அவனைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு அவனது ஆறு துணைத் தளபதிகளும் 248 வீரர்களும் நிறுத்தப்பட்டார்கள்.
எங்களை எதிர்ப்போர்க்கு இதுதான் கதி என்று கும்பினிப்படை எக்காளமிட்டபடி அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. `ம்’ என்றால் பீரங்கிகள் முழங்கும். வீரன் அழகு முத்துக்கோனும் அவனது வீரர்களும் உடல் சிதறிப் போவார்கள். அதைப் பொறுக்கமாட்டாமல்தான் அன்றைய நடுக்காட்டுச் சீமை பாளம்பாளமாய் வெடித்து சுட்டு எரித்துக்கொண்டிருந்தது.

“மன்னிப்புக் கேட்டால் இக்கணமே விடுதலை; வரி கொடுக்க சம்மதித்தால் உயிர் மிஞ்சும்” என்று கும்பினிப்படை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், “தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார் ” என்ற வீரன் அழகுமுத்துக் கோனின் கர்ஜனையைக் கேட்டு கும்பினிப்படை அதிர்ந்தது.
ஆத்திரம் கொண்டது.இருநூற்று நாற்பத்தெட்டு வீரர்களின் தோள்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும் வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில் வீரன் அழகுமுத்துக்கோனையும் நிறுத்தினார்கள்.
பீரங்கிகள் வெடித்துச் சிதறின. வீர மைந்தர்களின் ரத்தத்தால் நனைந்தது நடுக்காட்டுச் சீமை.இந்தியாவின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் பக்கத்தில் இடம்பிடித்துக் கொண்டார் வீரன் அழகுமுத்துக்கோன்.தாய்மண்ணை அடிமைப்படுத்த நினைத்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராக சுதந்திர முழக்கமிட்ட மற்றுமொரு வீரனைத்  தேவர் சமூகம் தந்தது என்பது மறுக்கவும், மறைக்கவும் முடியாத வரலாறு.
ஆனால், அப்படிப்பட்ட முக்குலத்தை சேர்ந்த மாவீரனை வேறு யாரெல்லாமோ இன்று உரிமை கொண்டாடுவதை எண்ணி, உண்மையை உலகறிய செய்ய வெளிவந்த நூலை இங்கே தேவர் முக்குலத்தோர் தளத்தின் மூலமாக அறிய தருகிறோம்.படித்து தெளிவுறுக.
வீரன் அழகுமுத்து சேர்வை

நூல்             :  மறவர் குல மன்னன் வீரன் அழகுமுத்து சேர்வை
ஆசிரியர்    :  சேவாரத்னா நெல்லை மா. சேதுராமபாண்டியன்
வெளியீடு  :  அகில இந்திய தேவர் முன்னேற்றக் கழகம்,
44-A, மேல ரத வீதி, சி.என்.கிராம,
திருநெல்வேலி – 627 001
நுழைவாயில்:
எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமே அல்லாது வேறொன்றும் அறியேன் பராபரமே.
அன்புடையீர்! வணக்கம்! நலம் வாழ்க!
ஒரு பொருளை உரிமை கொண்டாடும் பொது, அது தனக்கு உரியது தான் என்பதற்கான சான்று அல்லது சாட்சி அல்லது மனசாட்சி வேண்டும். தனக்கு பொருள் ஏதும் இல்லை என்பதற்காக இன்னொருவர் வைத்திருக்கும் பல பொருள்களில் ஒன்றை தெரிந்தோ, தெரியாமலோ எடுத்து வைத்துக் கொண்டு அதற்கு சொந்தம் கொண்டாடுவது, எந்த வகையில் நியாயம்? எந்த வகையிலும் சொந்தம் கொண்டாடத் தகுதி இல்லாத போது, தவறாக சொந்தங் கொண்டாடி போலி பெருமை தேடுவது, சொந்தம் கொண்டாடுவோரின் தன்மானத்தின் மீது சந்தேகம் உருவாக வழி வகுக்காதா? இந்த சிந்தனையோடு, எழுதப்பட்டது தான் “வீரன் அழகுமுத்து சேர்வை மறவர் குல மன்னன்” என்ற இந்தச் சிறு நூலாகும்.
மற்றவர் பெருமையை அபகரித்து, போலி பெருமை தேடும் அளவுக்கு எங்கள்(முக்குலத்தோர்) சமூகம் இல்லை. ஏனெனில் எங்களுக்குள்ள வரலாற்றுப் பெருமைகள் வேறு எவருக்கும் இல்லை என்பது உலகறிந்த உண்மை. அதற்காக எங்கள் பெருமைகளில் ஒன்று திருடப்பட்டால் நமக்குத்தான் வேறு பல பெருமைகள் உள்ளனவே, இது ஒன்று போனால் போகட்டும் என்று விட்டு விட முடியாது. கூடாது. விட்டு விடுவது அல்லது விட்டுக் கொடுப்பது எங்களுக்குப் பெருமை தாராது. எங்கள் புகழ் அனைத்தையும் பேணிக்காக்கும் கடமையும், உரிமையும் எங்களுக்கு உண்டு.
இந்த நல்லெண்ணத்துடன் தான், மாவீரன் அழகுமுத்து சேர்வையை, அழகுமுத்து கோனாராக்கிப் பெருமைப் படுத்துவது சரியல்ல என்பதை எடுத்துக் கூறத்தான் இப்படைப்பு.நூலை மிக அடக்கத்துடன் எழுதியுள்ளேன்(ஆசிரியர்). எங்கள் வரலாற்றில் திரிபு திணிக்கப்படுவதை வரலாற்றுக்கு சொந்தக்காரர்களாகிய நாங்கள் வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல என்பது பொதுவான கருத்தாகும்.
வீரன் அழகுமுத்து சேர்வை என்ற பெயருடைய எங்கள் வீட்டில் பிறந்த வீரமகனை யாவரும் மரியாதையுடன் உறவாடலாம்! ஆனால் களவாடக் கூடாதல்லவா! களவாடுவதை தடுப்பது, அந்த வீரப் பிள்ளை பிறந்த தேவர்குலத்தாரின் தார்மீகக் கடமை அல்லவா! அந்தக் கடமையை இந்த சிறுநூல் மூலம் ஓரளவு செய்துள்ளதாக நம்புகிறேன்.
இதனை நடுநிலைமையுடன் சிந்திப்பவர்கள் அனைவரும், வீரன் அழகுமுத்து சேர்வை தேவர்குலத்து சிங்கம் என்பதை ஒப்புக் கொள்வார்கள்! வீரன் அழகுமுத்துக் கோன்(அரசன்) கோனார் அல்ல என்பதை புரிந்து அவருக்கு ரத்த வழி சொந்தம் கொண்டாட எங்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்பதை ஒப்புக் கொள்வதுதான், அவர்கள் தங்கள் மனசாட்சியை மதிப்பதற்கு அழகாகும்.
போலிப் பெருமைக்கு தங்களை ஆளாக்கிக் கொண்டிருப்பவர்களில் பலருக்கு மாவீரன் அழகுமுத்து தேவர் குலத்தவர் என்பது தெரியும். ஆனாலும் இயன்றமட்டும் சாதித்துப் பார்ப்போம் என்ற உள்ளுணர்வுடன் செயல்படுகிறார்கள். வீண் முயற்சியில் அவர்கள் இன்னமும் ஈடுபடுவது, அவர்களுக்கு நல்லது அல்ல.
நான் எல்லோரையும் மதிப்பவன்(ஆசிரியர்). மனித நேயத்துடன் பழகுபவன். ஆனால் எங்கள் உரிமையிலோ, பெருமையிலோ வீணாகக் குறுக்கிடுவோரை எண்ணி வருத்துப்படுகிறவன். எங்களது விலை மதிப்பற்ற பொருளை கவர்ந்து கொண்டதாக எண்ணி, உள்ளுக்குள் மகிழ்ச்சி கொள்ளாதீர்கள். அது நீடிக்காது.
இந்தச் சிறுநூல் ஒரு மாவீரன் பிறந்த குலத்தின் பெருமையை பாதுகாக்கப் புறப்பட்ட படைக்கலன்களில் ஒன்று தான். நான் சமூக நல்லிணக்கத்தை உருவாக்கிட உழைப்பவன். யாரையும் புண்படுத்திடக்கூடாது; மனித நேயமே அமைதிக்கும், நல்வாழ்வுக்கும் துணை புரியும் என்ற நம்பிக்கை கொண்டவன். இந்த மனநிலையில் இருந்துதான் இச்சிறு நூலை, உண்மையை வெளிச்சமிட்டுக் காட்டிடும் வரலாற்று உணர்வுடன் எழுதினேன்.
எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் – மக்கள்
தனை ஈன்ற தமிழ்நாடு தனக்கும் – என்னால்
திணை அளவு நலமேனும் கிடைக்குமாயின், நான்
செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாகும்.
உன்னை ஒன்று வேண்டுகிறேன் – என்னால்
ஆவதொன்று உண்டாயின் அதற்கெந்தன்
உயிர் உண்டு!
(- பாவேந்தர் பாரதிதாசன்.)
அன்புள்ள சேவாரத்னா நெல்லை மா. சேதுராமபாண்டியன்.
வரலாறைத் தேடி

வரப் புயர நீர் உயரும்!
நீர் உயர நெல் உயரும்!
நெல் உயர கோன் உயரும்!
கோன் உயரக் குடி உயரும்! – அவ்வையார்.
இந்த வாழ்த்துப் பாடலில் “கோன்” என்ற சொல், அரசன், மன்னன் என்ற பொருளைக் கொண்டதாகும்! அவ்வையார் ஒரு மன்னனை வரப்புயர வாழ்க என்று வாழ்த்தினார். அதன் விரிந்த பொருளை பாடிக்காட்டினார். அது தான் மேற்கண்ட பாடல்.இந்தப் பாடலில் இடம் பெற்ற கோன் என்ற சொல்லை வைத்துக் கொண்டு எங்கள் சமுதாயத்தை தான் அவ்வையார் கோனார் என்று குறிப்பிட்டுள்ளார் என்று எவரும் கூறிடார்! வாதிடார்!
கோன்” என்ற சொல்லை கோனார் என்று நினைத்துக் கொண்டு, மாவீரன் அழகுமுத்துக் கோன் (அரசன்) என்ற அழகுமுத்து சேர்வையை தனது சமூகத்தைச் சேர்ந்தவர் என்று சொந்தம் கொண்டாடுவது வேடிக்கையானது.சேர்வைக்காரன் அல்லது சேர்வை என்ற சொல், சேர்த்து வைத்தவன் அல்லது சேர்ந்திருப்போர்க்குத் தலைவன் என்ற பொருளைக் குறிக்கும் சொல்லாகும்.
முக்குலத்தோர் என்று அழைக்கப்படும் கள்ளர், மறவர், அகம்படியர் என்ற முக்கிய 3 பிரிவுகளும் தேவர் என்ற ஒரு சமுதாயத்திற்குள் உள்ள உட்பிரிவுகளாகும்.இந்த முக்கிய 3 பிரிவுகளுக்குள்ளே சேர்வை, அம்பலம், தொண்டைமான், வாண்டையார் உள்ளிட்ட 34 கிளைப் பிரிவினர் உள்ளனர்.
அனைவரும் மறவர். நெல்லை மாவட்ட முன்னாள் ஆட்சித் தலைவர் பாஸ்கரத் தொண்டைமான் ஐ.ஏ.எஸ்., அவர்கள் “மறவர் சரித்திரம்” என்ற ஆய்வு நூலை விரிவாக எழுதி வெளியிட்டார். அதன் விளக்கம் காணலாம்.
சேர்வை என்ற பிரிவில்தான், மாவீரர்களான சிவகங்கை மன்னர்கள் – மருதுபாண்டியர்கள் வருகிறார்கள். அந்த மாமன்னர்களின் மானமிகு வீரமிகு தியாகத்தால் மேலும் பெருமை பெற்றது தேவர் சமுதாயம்.
வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது!
வேலும் வாழும் தங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது!
எக்குலத் தோரும் ஏற்றிப்புகழ்வது எங்கள் பெருமையடா!
எம் முக்குலத்தோர்க்கே உலகில் உவமை காண்பது அருமையடா!
- என்று முகவை மண்ணின் மைந்தன் கவியரசு கண்ணதாசன் ‘சிவகங்கை சீமை’ திரைப்படத்தில் மருதுபாண்டியர்களை மனதில் நிறுத்தி எழுதிய பாடல் வரிகள் இவை.
தேவர் இன வரலாற்றை சங்க இலக்கியங்களை ஆய்வு செய்தும், தமிழக கிராமங்களில் ஆய்வு செய்தும் எழுதி, எக்காலமும் போற்றப்படும் எழில்மிக்க ஏற்றமிக்க நூலாக வெளியிடுமாறு, முனைவர் நாவுக்கரசு கா.காளிமுத்து அவர்களை கேட்டு, 29.06.2003ல் மதுரையில் நடந்த அகில இந்திய தேவர் முன்னேற்றக் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். காரணம், தேவர் சமுதாய மன்னர்களை, மாவீரர்களை, மாபெரும் தியாகிகளை, வேறு சமுதாயத்தினர் சொந்தம் கொண்டாடி, வரலாற்றுப் பிழை செய்ய முற்படுகின்றனர்.
தேவர் சமுதாயத்திற்கே உரிய பாண்டியர் என்ற சீர்மிகு அடைமொழியை யார் யாரெல்லாம் தங்கள் பெயருக்கு பின்னால் சேர்த்துப் போலி பெருமை தேடுகிறார்கள்! வரிப்புலியை போல் உடலில் சூடு பதித்துக் கொள்கிற காட்டுப் பூனைகளை வரிப்புலிகள் என்று வரலாறு அறிந்தோர் ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.
தேவர் வீட்டில் ஆண் மகவு பிறந்தால் “என்ன பாண்டியன் பிறந்திருக்கிறாராமே” என்றும், பெண் மகவு பிறந்தால் “என்ன நாச்சியார் பிறந்துள்ளாரா? நல்லா இருக்கிறாரா?”
என்றும் விசாரிக்கும் வழக்கம் இன்றளவும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் வழங்கி வருகிறது. ஆகவே, பிறவிப் பாண்டியர்களாக தேவர் இனம் பண்டைப் புகழ் தாங்கி விளங்குவதை காழ்ப்புணர்வுகளால் பொறுக்க இயலாமல் போவது இயல்புதான். சிலர் நன்றிக்காக தனது பெயரோடு அல்லது தங்கள் மகன்கள் பெயரோடு பாண்டியன் என்ற சாதிப் பெருமைக் குறியை சேர்த்து வைத்துக் கொள்வதையும் காணலாம்.
இறைவனுக்கு நிகராக ஆம்! அந்த தேவாதி தேவனுக்கு நிகராக விளங்கி நாட்டை ஆண்டவர்கள் தேவர் எனப்பட்டனர். அவர்கள் வீரமிகுந்தவர்களாக விளங்கி, போரிட்டு நாட்டைக் காத்தமையால் மறவர் ஆயினர். விவேகத்துடன் சங்கம் வைத்துத் தமிழ் வளர்க்கும் அளவுக்கு அவர்கள் பாண்டித்துவம் பெற்றிருந்ததால், அவர்கள் பாண்டியர் எனப் போற்றப்பட்டனர்.
தேவர், மறவன், பாண்டியன் என்று 3 சொற்களால் குறிப்பிடப்படுபவர்களும் தேவர் சமுதாயத்தினர் தான். இவையும் செய்த தொழிலை வைத்து வைக்கப்பட்ட பெயர்கள் தான் என்பதை நாங்கள் மறைப்பதற்கு இல்லை. பொதுவாக சாதிப் பெயர்கள் பலவும் அவர்கள் செய்த தொழிலை குறிக்கும்படியாக குறிக்கப்பட்டது.
செப்பேடு:

“எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பதறிவு”
என்ற வான்புகழ் வள்ளுவனின் தேமதுர அறிவுரையே இந்தக் குறள்பா. யார் என்ன சொன்னாலும், அதன் உண்மைப் பொருளை உணர்வது தான் அறிவு. ஆனால் அதற்கேற்ற மூளைப் பலம், ஆய்வுத் திறன், நடுநிலை சிந்தனை, பொறுமை, நிதானம், சாதிமத உணர்ச்சி வசப்படாமை தேவை.
இவை இல்லாதார்தான் எடுப்பார் கைப்பிள்ளைகளாக மாறி, உண்மை எது எனத் தெரியாமல் நுனிப்புல் மேய்ந்து, நுண்ணறிவை பயன்படுத்தாமல் சுயநலவாதிகளின் சூழ்ச்சி வலையில் விழுந்து வீண் வம்புகளை விதைக்க துணை நிற்கின்றனர்.
வீரன் அழகுமுத்து சேர்வைக்காரனை அவனது வீரம், ஆளுமைத் திறன் எண்ணி “கோன்” அதாவது மன்னன் என்ற அடைமொழி கூட்டி அழகுமுத்துக் கோன் என்று வழங்கினர். அழகுமுத்து பிறப்பால் சேர்வை (மறவர்) சிறப்பால் கோன்(அரசன், மன்னன்,ராஜா).
வீரன் அழகுமுத்து சேர்வையின் வாரிசுகள் சிலர் ,கட்டாலங்குளத்தில் தற்போதும் வாழ்கிறார்கள். சிலர், பிழைப்பு-தொழில் நாடி வேறு ஊர்களுக்கு சென்று வாழ்கின்றனர்.பத்திரங்கள் நடைமுறைக்கு வராத காலத்தில், தாள் உருவாகாத நிலையில் பத்திரங்களை செப்புத் தகடுகளில் எழுதிக் கொடுப்பது வழக்கமாக இருந்துள்ளது. வரலாற்றுக் குறிப்புகளை கற்களில் பொரித்து வைத்தனர்.
சிலைகள் வடிவில் செதுக்கி வைத்தனர்.செப்புத் தகடுகளில் எழுதித் தரப்பட்டவை பட்டயம் என வழங்கப்படுகிறது.
வீரன் அழகுமுத்து சேர்வைக்காரனுக்கு, காசி கோத்திரம் விஸ்வநாத நாயக்கரவர்கள் புத்திரன் பெரிய வீரப்ப நாயக்கன் அவர்கள் கிருஷ்ணா கோத்திரம் கோபால வம்சம் அழகுமுத்து சேர்வைக்காரன் புத்திரன் அழகுமுத்து சேர்வைக்காரனுக்கு எழுதிக் கொடுத்த செப்புப் பட்டயத்தின் ஒரு பகுதி நகல் இங்கே அப்படியே தரப்பட்டுள்ளது.

செப்புப்பட்டயம்:



மேற்கண்ட செப்புப்பட்டயத்தில் எழுதப்பட்டிருப்பதவாது:
இன்னான் கொல்கைக் குட்பட்ட நிலமும் மாத்தானம்பட்டி கிழக்கு மால் வைப்பாற்று எல்கைக்கு மேற்கு, தேற்குமால் குளத்தூர் எல்கைக்கு வடக்கு மேற்கு மால் செங்கப்படை எல்கைக்கு கிழக்கு, வடக்குமால் மந்திக்குலம் எல்கைக்கும் பெருமாள் கோவிலுக்கும் தெற்கு, இந்த நான்கு எல்கைக் குள்பட்ட நிலமும், இதில் கட்டாலங்குளம் சோழபுரம் வாலனம்பட்டி மாக்காலம்பட்டி ஆகக் கிராமம் நாளும் தனக்கு அமரமாகவும் தீத்தான்பட்டி குருவி நத்தம் கிராமம் இரண்டும் அழகப்பன் சேர்வைக்காரன் பாட்டாத்தார்க்கு தந்த மானியமாகவும் விட்டுக் குடுத்த படியினாலே ஆகக் கிராமம் ஆறு மதில்சேர்ந்த பட்டியும் இதிலுள்ள நஞ்சை புஞ்சை நிகி நிட்சேபமும் சிவதரு பாசானம் அச்சானிய ஆகாமியம் சித்த சாத்தியம் களெங்கிர அட்ட யோகா தேசாக்காரியங்களும் உன்னுடைய புத்திர பவுதிய பாரம்பரியமாக நயந்திரார்க்கு மாகக் தனாதி வினியவிக்கிரம யோக்கியமாகவும் ஆண்டனுபவித்துக் கொண்டு சுகமயிருக்கவும் இந்தப் படிக்குக் காசிப கோத்திரம் விசுவநாத நாயக்கரவர்கள் புத்திரன் கிருஷ்ணப்ப நாயக்கரவர்கள் புத்திரன் பெரிய வீரப்ப நாயக்கரவர்கள் கிருஷ்டினக் கோத்திரம் கோபால வம்சம் அழகுமுத்து சேர்வைக்காரனுக்கு எழுதிக் கொடுத்த பட்டையம் உ.மீனாட்சியம்மாள் துணை.
இதிலுருந்து அழகுமுத்து சேர்வைக்காரன் மகன் அழகுமுத்து சேர்வைக்காரன் என்பது விளங்கும். அதாவது, அழகுமுத்து செர்வைக்காரனின் தந்தையார் பெயரும் அழகுமுத்து சேர்வைக்காரன் என்பது தெரிகிறது. வீரன் அழகுமுத்து சேர்வைக்காரன் என்பதில் மட்டுமல்ல அவனது தந்தையின் பெயரில் கோனார் என்ற சாதிச் சொல் இடம் பெறவில்லை என்பதை சற்று ஊன்றிக் கவனித்தால் புரியும்.
இப்போது திரைப்படத் துறையில் கிராமிய இசையால் புகழ் பெற்று வருகிறவர் பரவை முனியம்மாள். “தூள்” படத்தின் மூலம் வெளி உலகுக்கு அறிமுகமாகி இப்போது “என புருஷன்”, “எதிர் வீட்டுக்காரன்” உள்ளிட்ட பல படங்களில் பாடி நடித்து வருவதோடு, சின்னத்திரையிலும் மின்னி வருகிறார் இவர்.
இவரது தந்தை வாடிப்பட்டி பக்கம் உள்ள செல்வகுலம் பெருமாள்பட்டியை சேர்ந்த கருப்பயா சேர்வை என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் படுகொலை செய்யப்பட்டாரே தா.கிருட்டிணன் இவரும் சேர்வை. சேர்வைக்காரன் என்ற சொல், சேர்வை சாதியில் பிரபலமானவரைக் குறிக்கும் சொல்லாகும்.
மேற்கண்ட பட்டயத்தில் இடம்பெற்றுள்ள கோபால வம்சம், கிருஷ்ண கோத்திரம் என்ற சொற்களைப் பற்றிக்கொண்டு தான், வீரன் அழகுமுத்து சேர்வையை கோனார் என்று கூறி சாதிசாயம் பூசி சிலை எடுத்தார்கள், விழா நடத்தினார்கள்.கோபால வம்சம் என்பது பிராமணர்களின் ஒரு பிரிவினரையும், வேறு மேல்சாதியரில் சில பிரிவுகளையும் குறிப்பிடும் சொல்லாக உள்ளது.
கோபாலன் என்ற பெருமாளை-நாராயணனை தலைமுறை தலைமுறையாக வழிபாடும் சமூகத்தின் சில பிரிவினர் கோபாலவம்சமாகத் தங்களை கூறி வருவது எல்லோரும் அறிந்ததே. கிருஷ்ண கோத்திரம் என்பது, கிருஷ்ணனாகிய கோபாலனை குல தெய்வமாக நீண்ட காலமாக வழிபடுவோரை குறிக்கும் சொல்லாக உள்ளது. இவ்வாறு வழிபடுவோர் விபூதியை நெற்றியின் மேல் நோக்கி நாமம் போல் பூசுகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள தேவர் சமூகத்தினர் நாராயணனை குல தெய்வமாக வழிபடுகின்றனர். இவர்கள் எல்லாம் தங்களை “கிருஷ்ணகோத்திரம்” என்று கூறிகிறார்கள். குலம் என்பது சாதியை குறிக்கிறது. முக்குலத்தோர், கோனார் குலத்தோர், பிராமணகுலத்தோர் என, என்ன சதியோ அந்த சாதியை ஒருங்கிணைத்துக் கூறும் சொல் ‘குலம்’ என்பதாக உள்ளது.
அனைத்து தமிழ் நாட்டையும் சேர்த்துக் குறிப்பிடும் போது ‘தமிழ்க்குலம்’ என்கிறோம். ஆகவே, கோபால வம்சம், கிருஷ்ண கோத்திரம் என்பது பரம்பரை வழிபாடு முறையை வைத்து பல சமூகத்தார்களின் உட்பிரிவினர் பலரை குறிக்கும் சொல்லாகும்.
சாதிகளில் நடுசாதியாகிய கோனார் என்ற இடையர் குலம் விளங்குகிறது. நெல்லை மாவட்டத்திலுள்ள கிராமங்கள் பலவற்றிலும் மறவனும்-இடையனும் ஒன்று. கொண்டை வைத்தவன் ‘மறவன்’. ‘கோ” வைத்தவன் இடையன் என்று கூறுவது வழக்கு மொழியாக உள்ளது.
இதிலிருந்து கோபாலவம்சம் கிருஷன் கோத்திரம் என்பது பல சாதிப் பிரிவுகள் பயன்படுத்தும் சொற்களே தவிர குறிப்பிட்ட ஒரு சாதியை அடையாளம் காட்டும் சொற்கள் அல்ல என்பது தெளிவாகிறது.அதுமட்டுமல்ல, இதே பட்டயத்தில் ‘காசிப கோத்திரம் விஸ்வநாத நாயக்கர் அவர்கள் புத்திரன் கிருஷ்ணப்ப நாயக்கர் அவர்கள் புத்திரன் வீரப்ப நாயக்கர் அவர்கள்’ என்ற வாக்கியமும் இடம் பெற்றுள்ளது.
காசிப கோத்திரம் என்றால், காசி விஸ்வநாதக் கடவுளாகிய சிவபெருமானை வழிபாடும் வழக்கம் கொண்டவர் என்பது பொருள். நாயக்கர்கள் எல்லாம் காசிப கோத்திரம் அல்லர். வீரபாண்டிய கட்டபொம்மன் ஜக்கம்மாள் என்ற பராசக்தியை வழிபட்டு வந்த சக்தி கோத்திரத்தை சார்ந்த நாயக்கர்.
ஆகவே காசிப கோத்திரம் காசி விஸ்வநாதக் கடவுளைக் குலதெய்வமாக பரம்பரையாக வழிபாடும் குலத்தாரை அல்லது குலத்தின் உட்பிரிவாளரைக் குறிக்கும் என்பதையும் தெளிதல் நன்று.
பொதுவில் தனது சாதிக்குக் ஒரு அடையாளம் தேவையென விரும்புவது, ஆசைப்படுவது சாதியத்தை வளர்த்து அதன் மூலம் சுயலாபவேட்டையில் ஈடுபடுவோரின் செயலாக மாறியது ஏன்? ஓட்டுக்காகப் பூசப்படும் போலிப் பூச்சுக்களும், பொய் விளம்பரங்களும் அடிப்படையை தகர்க்க முடியுமா? நீருக்குள் விடும் காற்று வெளியே வந்து தானே தீரும்!
இந்த சுதந்திரப் போருக்கு முதல் முழக்கமிட்ட மான மறவன் – மாவீரன் மன்னன் பூலித்தேவனுக்கு நெற்கட்டான் செவ்வல், வாசுதேவ நல்லூர், ராஜபாளையம் ஆகிய 3 இடங்களில் கோட்டைகள் இருந்தன! அவனது படை வரிசைகள் பல. அவற்றுக்குத் தளபதிகள் பலர். அவர்களுள் ஒருவன் ஒண்டி வீரன். இவன் பகடை சமுதாயத்தைச் சேர்ந்தவன்!
துப்புரவுத் தொழிலார்கள் தங்கள் குலத்தின் அடையாளமாக ஒண்டி வீரனை எண்ணிப் போற்றி புகழ்வதில் பொருள் உண்டு! நியாயம் உள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனின் தலைமகனாக தலைமைத் தளபதியாக விளங்கி, போர்க்களத்தில் வெள்ளையரின் துப்பாக்கி குண்டுக்கு மார்புகாட்டி மடிந்த மாவீரன் பகதூர் வெள்ளையத்தேவன்.
அவனுக்கு அடுத்த நிலையில் இருந்த தளபதிகளில் வீரன் சுந்தரலிங்கம் ஒருவன். அவன் தாழ்த்தப்பட்ட சமூத்தின் அடையாள புருஷனாக போற்றப்படுவதில் பொருள் உண்டு. நியாயம் உள்ளது.
ஆனால் மன்னர் பாஸ்கர சேதுபதியையோ, வீரமங்கை வேலுநாச்சியாரையோ, மாமன்னர் பூலித்தேவனையோ, கட்டாலங்குளம் அழகுமுத்து சேர்வைக்காரனையோ தேவர் குலத்தில் இருந்து, ஆம் வீரமறவர் குலத்தில் இருந்து பிரித்துக் கொண்டு போய் யாரும் சொந்தம் கொண்டாட நினைப்பது அல்லது சொந்தங் கொண்டாடுவது வரலாற்றை பிழை படுத்துவதாக அமையாதா? அன்றைய கால கட்டத்தில் ஆளும் பொறுப்பில் பரவலாக தேவர்களும் இருந்ததற்கு, மனித லட்சன ஆராய்ச்சி அறிஞர்கள் செய்து வைத்த கபடமற்ற ஏற்பாடே காரணம்.
இன்ன லட்சணம் உடையவன் இன்ன தொழிலையே செய்வதற்கு ஏற்றவன் என ஆய்ந்தறிந்து தொழில் ரீதியில் சாதி பிரிவு ஏற்படுத்தப்பட்ட போது, மறவர் குலம் என்ற பாண்டியர் குலம் ஆட்சிப் பொறுப்புக்கு – காவல் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டது. அதன் படியே ஆட்சி அமைப்புகள், காவல் அமைப்புகள் உருவாயின.
மறவர் குலத்தில் 34 பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் சேர்வை. இந்த சேர்வை குலத்தவன் தான் கட்டாலங்குளம் ஜாமீன் அழகுமுத்து சேர்வைக்காரன் என்பதை உறுதிப்படுத்த எத்தனையோ சான்றுகள் உள்ளன.
அவற்றில் ஒன்று நாயக்க மன்னர் அழகுமுத்து சேர்வைக்காரனுக்கு பட்டியம் எழுதிக் கொடுத்ததைக் குறிப்பிடும் பழங்கால கல்வெட்டு ஒன்று. இது பாண்டிய மன்னர் வைத்த கல்வெட்டாகும். இந்தக் கல்வெட்டிலும் சேர்வை என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும் சரியான சான்று.
இதோ அந்தக் கல்வெட்டு.
ஆவணங்கள் இன்றியமையாதன என்பதை நாம் அறிவோம். ஆனால் அது பற்றி நாம் அடிக்கடி சிந்திப்பதில்லை. ஆவணங்கள் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இடம் பெறுகின்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இரயிலிலோ, பேருந்துகளிலோ, விமானத்திலோ பயணம் செய்யும் ஒரு நபர் அந்தப் பயணத்தை அவர் தொடர்ந்து நீடிக்கவும், தாம் போய்ச் சேரவேண்டிய இடத்தை அடையவும், அவரால் பெறப்பட்ட பயணச்சீட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.
வழக்குகளும் ஆவணங்களும்:

நீதி மன்றங்களில் வழக்குகள் உருவாகின்றன என்றால், அவைகளுக்கு போது மக்களோ அல்லது அதிகாரிகளோ காரணமாவர். அவர்கள் தொடுக்கும் வழக்குகளுக்கும், போலிஸ் தொடரும் பொதுநலம் சார்ந்த வழக்குகளுக்கும் அடிப்படை தேவை ஆவணங்களே.
பல்வேறு வழக்குளுக்கு முதல் தகவல் அறிக்கை (FIR) என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிவோம். அதுவே வழக்கின் அடிப்படை ஆவணமாகிறது. சில வழக்குகள் தொடர ஆவணங்கள் கிடைக்காமல், நீதியை பெறமுடியாமல் வழக்கறிஞர்களும், பொதுமக்களும், ஏன் நீதிபதிகளும் ஆதங்கப்படும் நிலைகளும் உண்டு.
ஒரு சில நேரங்களில் நீதிபதிகள் அதிர்ச்சி அடையும் வகையில் முக்கிய வழக்குகளில் திடீரென ஆவணங்கள் கிடைத்து, வழக்கின் உச்சகட்டத்தை ஏற்படுத்துகின்றன அல்லது யாராவது ஒருவர் வந்து தன்னிடம் ஆதாரம் இருப்பதாக கூறி ஆவணங்கள் சிலவற்றை நேரிலோ, வழக்கறிஞர்கள் மூலமாகவோ அளித்து வழக்கை திசை திருப்பி எல்லோரையும் பிரமிக்கச் செய்து விடுவதும் உண்டு.
சில நேரங்களில் நீதிபதிகளுக்கு அஞ்சலில் ஒரு தகவல் வந்ததாக தெரிவித்து, அதை ஒரு ஆவணமாகக் கருதி அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு அதன் மூலம் தீர்ப்புகள் உருவாவதும் உண்டு. இப்படி உருவாகும் பல்வேறு நீதிமன்ற ஆவணங்கள் அந்தந்த கால கட்டங்களில் உள்ள மக்களின் சமூக வாழ்க்கையினை பிரதிபலிக்கின்றன.
ஆவணங்களில் இந்திய கலாசார அடிப்படைகள்:
இந்தியக் கலாச்சாரத் தொன்மை பற்றிய ஆய்வுகள் யாவும் இன்னும் நடந்து கொண்டே இருக்கின்றன. அதற்கான ஆவணங்கள்/தகவல்கள் யாவும் புதை பொருட்களிலிருந்தும், கல்வெட்டுக்களிலிருந்தும், பழங்கால குகை ஓவியங்கள், நாணயங்கள் போன்றவற்றிலிருந்தும் ஆதாரங்களைச் சேகரித்த வண்ணமாகவே இருக்கிறோம். இது முடிவடையாத ஒன்று.
வீரன் அழகுமுத்து ‘சேர்வை’ (மறவர்) குலத்தவன் என்பதற்கு மேலே கண்ட பட்டய நகலும், கல்வெட்டு நகலும் வரலாற்று ஆவணங்கள்-அடிப்படை ஆதாரங்கள் அல்லவே? இன்னமுள்ள ஆதாரங்களை அடுத்து பார்ப்போம்.
சூடேற்றிக் கொள்வோம்:


அத்தோடு நமது குலகொழுந்தை சொந்தம் கொண்டாட வருவோரை வரவேற்போம். வீரர்களையும் தியாகிகளையும், யார் போற்றினாலும், துதித்தாலும் நாமும் அவர்களோடு இணைந்து செயல்படுவோம். ஆனால், நமது உறவை தனது உறவாக்க விபரம் தெரியாமல் யார் முற்பட்டாலும் அவருக்கு புரிய வைத்திடவும், நமது உறவை பாதுகாத்திடவும் நமக்கு உரிமை உண்டு. ஆகவே தான் இந்த சிறுநூல் உருவானது.
சங்கரதாஸ் சுவாமிகள நாடகக்கலையின் தந்தை என போற்றப்படுகிறார். அவர் மறவர் இனத்தின் ஒப்பற்ற கலை மைந்தர் ஆவார். அவரது பெயரில் ‘தாஸ்’ இருப்பதால் அவரை கோனார் என்று எண்ணி சொந்தம் கொண்டாட யாரும் முற்பட்டு விடக்கூடாது என்பது நமது கவலை. தியாகி விஸ்வநாத தாஸ் அவர்கள் நாவிதர் (மருத்துவர்) குலத்தை சேர்ந்த மாமனிதர்.
அவருடைய பெயரில் தாஸ் இருப்பதால் அவரையும் எதிகாலத்தில் கோனார் என்று கூறி யாரும் சொந்தம் கொண்டாட வந்துவிடக் கூடாது என்பதும் நமது கவலை. ஆனால் அப்படி நடக்காது என்று நம்புகிறோம். நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே வன்னிக்கோனேந்தல் என்ற கிராமம் உள்ளது.
அதாவது வன்னிக்கோன் ஏந்தல் என்பது அந்த ஊரின் பெயர். அந்தப் பகுதியை ஆண்ட மன்னனின் பெயர் வன்மையன். வன்மையன் என்றால் வன்மை மிக்கவன் என்பது பொருள். மன்னன் என்றால் கோன் என்பது பொருள்.
ஆகவே மன்னன் வன்மையன், வன்மையக்கொன் என்று அழைக்கப்பட்டான். அவன் சீர்மிகுந்த ஆற்றலும், சிந்தனையும் கொண்டிருந்ததால் ‘ஏந்தல்’ என்று போற்றப்பட்டான். ஆகவே அவன் ஆண்ட பகுதி வன்மையகோன் ஏந்தல் என்று வழங்கலாயிற்று.
அதுவே பிற்காலத்தில் மருவி வன்னிக்கோனேந்தல் என்று மாறியது. ஆகவே, இந்த ஊர் பெயரில் கோன் என்று இருப்பதை வைத்துக்கொண்டு வன்மையக்கோன், கோனார் குலத்தைச் சேர்ந்தவர் என்று இதுவரை யாரும் சொந்தம் கொண்டாடவில்லை.
அவ்வாறு சொந்தம் கொண்டாடி இருந்தால் வீரன் அழகுமுத்து மறவர் குலத்தை சேர்ந்தவன் என்று இன்று நாம் சான்றாவணங்கலோடு நிரூபிப்பது போன்ற மற்றொரு நிலை எழுந்திருக்கும். பிற்காலத்தில் இந்தப் பகுதி ஊத்துமலை மன்னரின் ஆளுகைக்கு வந்தது. ஊத்துமலை மன்னரும் மறவர் குல மாணிக்கமே என்பது உலகறிந்த உண்மை.
பரம்பரை ரத்தம் உடம்பிலே முறுக்கேறி
ஓடும் அறம் காத்த சமுதாயமே!
ஆன்மிகம் வளர – நிலைக்க ஆலயங்கள்
பல அமைத்த அரசகுலத் தோன்றல்களே!
வரிப்புலிகளை கண்டு தறிகெட்டு ஓடிய பூனைகள்
தங்கள் உடலிலே சூடு போட்டுக் கொள்வதாலேயே
பூனைகள் புலிகள் என்று எவரும் கருதிடார்!
ஆனால் தேவைப்படும் நேரத்தில் கூட பாயாமல் பதுங்கும் குணம் கொண்டோரின் பிறவியிலேயே சந்தேகம் வரும்! ஆகவே சந்தேகத்திற்கு என்றும் இடமளிக்காமல் உள்ளத்துள் உத்வேகம் கொண்ட முத்தமிழ் வளர்த்த முக்குலத்துச் சிங்கங்களே – முக்குலம் எனில் கள்ளர், மறவர், அகமுடையார் என மூன்று பிரிவுகளைக் கொண்ட நாம்!
நமது மூதாதையராம் சேர,சோழ,பாண்டிய மன்னர்களின் நீதி வலுவா ஆட்சியில், “கள்ளர்” என்பது மறைந்திருந்து பகை மூலத்தையும், நாடு நடப்புகளையும், உள்ளூர் துரோகிகளையும் அறிந்து அரசர்களுக்கு ரகசியமாகக் கூறும் ஒற்றர் படையைக் குறிக்கும் சொல்லாகும்.
“மறவர்” என்பது களத்தில் எதிரிகளை நேருக்கு நேர் சந்தித்து புறமுதுகு காட்டாமல், வீரப் போர் புரிந்து, நாட்டை காத்தோரைக் குறிக்கும் சொல்லாகும்.
“அகமுடையார்” என்பது கோட்டைக்குள் (அகத்தில்) இருந்த படைப்பிரிவினர். இவர்கள் கோட்டையை உள்ளேயும், வெளியேயும் காத்து நின்றோர். கோட்டைக்குள் புகுந்த எதிரிப்படைகளுடன் மோதி, அவர்களை அழிக்கும் வல்லமை வாய்ந்தவர்கள். இது அகமுடையார் பணியாக இருந்தது.
நமது மன்னர்கள் இந்த முக்குலத்தின் ஏக பிரதிநிதிகளாக, முக்குலத்தின் ஒப்பற்ற வீரமும் விவேகமும் கூடிய ஏந்தல்களாக இருந்தனர். மூன்று பிரிவுகளும் சமநிலை உடைய ஆட்சிப்பிரிவுகள். இந்த வரலாற்று உண்மையை நெஞ்சில் பதிய வைப்போம். யாவருக்கும் புரிய வைப்போம்.
இந்திய விடுதலைப் போரில் முதல் பலியானவர்கள் நாம்! ஆங்கில ஏகாதிபத்தியதிற்கு பேராபத்தை விளைவித்தவர்கள் நாம்! ஆட்சியை இழந்தோம்! உறவினர்களை பலி கொடுத்தோம்! உடமைகளை இழந்தோம்! ஆனால் தூக்குக் கையிற்றை முத்தமிட்ட போதும் மானத்தை இழக்காமல், மரணத்தை அணைத்தோம். இந்த வரலாறுகளை நினைவு கூர்ந்து நெஞ்சில் சூடேற்றிக் கொள்வோம்.
வெள்ளை ஏகாதிபத்திய ஏஜென்ட் கமாண்ட்டெண்ட் கான்சாகிப் பீரங்கிப் படைக்கு தன்னையும், தனது படை வீரகளையும் இந்த மண்ணின் விடுதலைக்காக பலி கொடுத்தவர் கட்டாலங்குளம் மன்னன் மாவீரன் மானமறவன் அழகுமுத்து சேர்வைக்காரன். அந்த மாவீரனின் நேரடி வழித் தோன்றல்களான லெஷ்மிராஜவிடம் இருந்து பல்வேறு தகவல்கள், வீரன் அழகுமுத்து சேர்வைக்காரர் பற்றி கிடைத்தது.
அழகுமுத்து சேர்வைக்காரனின் தந்தை அழகுமுத்து சேர்வைக்காரர் கட்டாலங்குளம் பகுதியை அரசாலும் உரிமையை, மதுரையை ஆண்ட மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் குமாரர் பெரிய வீரப்ப நாயக்கர் அவர்களிடம் ஒரு செப்பேட்டின் மூலம் பட்டயம் பெற்று அரசாண்டார். அந்தப் பட்டயத்தில் அழகுமுத்து சேர்வைக்காரன் புத்திரன் அழகுமுத்து சேர்வைக்காரன் எனக் குறிப்பிடப் பட்டுள்ளதை அறிந்தோம்.
அழகுமுத்து சேர்வைக்காரன் கான்சாகிப்பை எதிர்த்து பெத்தநாயக்கனூர் கோட்டையில் போரிட்டதாகக் கிடைத்திருக்கும் ஆதார நூல் வம்சமணி தீபிகை. இது எட்டையாபுரம் சமஸ்தானத்தில் வேலை செய்த சுவாமி தீட்சிதர் என்பவரால் எழுதப் பட்டது. அதில் அழகுமுத்து சேர்வைக்காரன் மற்றும் 5 படைத்தளபதிகளும் பீரங்கி வாயில் வைத்து சுடப்பட்டதாக குறிப்பிடப் பட்டுள்ளது.
எட்டயாபுரம் “ஃபாஸ்ட் அண்ட் பிரசண்ட்” என்ற ஆங்கில நூலை டபிள்யு. இ. கணபதிப்பிள்ளை என்பவர் எழுதியுள்ளார். அதிலும் வம்சமணி தீபிகையில் கூறியுள்ளபடியே சொல்லப்பட்டுள்ளது.
இந்த நூல் தான் தற்பொழுது அழகுமுத்து சேர்வைக்காரர் கான்சாகிப்பை எதிர்த்து போர் புரிந்தார் என்று சான்று காட்டுவதற்கு சிறந்த அடிப்படை நூலாக தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் உள்ளது. அந்த நூலில் அரசர் கொடுத்த பட்டயம் பற்றியும் தகவல் உள்ளது. அதிலும் அழகுமுத்து சேர்வைக்காரன் என்று தான் உள்ளது.
1932 ம் ஆண்டு அழகுமுத்து சேர்வைக்காரரின் வாரிசுதாரர்கள், அவர்களின் கார்டியன் பாக்கியத்தாய் அம்மாள் மூலம் தனது ஜாமீன் சொத்துக்களைப் பாகவிஸ்தி மூலம் பெறுகிறார்கள். சொத்தைப் பெற்றவர்கள் விபரம் கீழ்க்கண்டபடி குறிப்பிடப்பட்டுள்ளது.
1) அழகுமுத்து என்ற துரைச்சாமி சேர்வைக்காரர் இந்து ராயர்.
2) சின்னச்சாமி என்ற குமாரெட்டு சேர்வைக்காரர்
3) இவர்கள் இருவரின் மூத்த மகன்களுக்கு தனது இரண்டு மகள்களை பெண் கொடுத்த அப்பாவு அய்யா சேர்வைக்காரர் என்றே உள்ளது.
அவர் பத்திரத்தில் சாட்சியாகவும் ஜாமீன் மேனேஜராகவும் வருகிறார்.அந்த இரண்டு வாரிசுகள் தான் அழகுமுத்து சேர்வைக்காரரின் நேரடி வாரிசுகள், தற்போதும் வாழ்கிறார்கள்.
மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆட்சித் தலைவர்களுக்கும் ஆதரங்களோடு பலரால் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜமீன் ஒழிப்பின் போது இந்திய அரசால் (எஸ்டேட் அபாலிசன் ஆக்ட் படி) நஷ்ட ஈடு பெற்றவர்களின் சான்று ஆவணம் இன்றும் தமிழ்நாடு அரசு செட்டில்மென்ட் டிபார்ட்மெண்டில் உள்ளது.
அதில்
1) அழகுமுத்து என்ற துரைச்சாமி
சேர்வைக்காரனின் புத்திரர்
காசிச்சாமி சேர்வைக்காரர் (சிவத்தசாமி அவர்களின் தந்தை)
2) சின்னச்சாமி என்ற குமாரெட்டு சேர்வைக்காரர் மற்றும் அவர்களின் புதல்வர்கள்:-
அ ) சின்னச்சாமி என்ற குமாரெட்டு சேர்வைக்காரர்
ஆ) சுந்தரராஜ சேர்வைக்காரர் வாரிசுதாரர் லக்ஷ்மிராஜா
இ) துரைராஜா சேர்வைக்காரர்
ஈ) பால்துரை சேர்வைக்காரர்
உ) செல்லச்சாமி சேர்வைக்காரர் என்றே உள்ளது.
இது 1955 க்குப் பின்னர் உள்ள ஆவணமாகும்.
இந்த உண்மையை நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக தேவர் குல மக்களுக்கும், கோனார் குல மக்களுக்கும் தெரியப்படுத்துகின்ற நோக்கத்தில் இச்சிறுநூல் எழுதப்பட்டது.
கட்டாலங்குளத்திற்கான வருவாய்த்துறை ஆவணங்கள், ஊராட்சி ஆவணங்கள், வாக்களர் பட்டியல் இவற்றைப் பார்வையிட்டால், இப்பொழுது கூட ஒரு கோனார் வீடு கூட அங்கு இல்லை என்பதை அறியலாம்.
தற்போது, கட்டாலங்குளம் ஊராட்சித் தலைவராக இருப்பவர் திரு. இரா.கருப்பசாமி பாண்டியன் அவர்கள் என்பது குறிப்படத் தக்கது.
ஆகவே காயங்களை நியாயப்படுத்தக் கூடாது. நியாயங்களை காயப்படுத்தவும் கூடாது. வரலாற்றினைப் பேணுவோம்! மாவீரன் அழகுமுத்து சேர்வையைப் போற்றுவோரை போற்றுவோம். பொதுவில் தியாகிகள் அனைவரையும் போற்றுவோம்.அவர்களது வரலாற்றை நமது வாரிசுகளுக்கு பாடம் சொல்லுவோம்.
“சீறி வந்த புலியதனை முறத்தினாலே சிங்காரத் தமிழ் மறத்தி துரத்தினாளே”
இது நமது அன்னையின் பெருமை. இந்தப் பெருமையை காப்போம்.
இச்சிறுநூல் யாரையும் எள்ளளவும் மனநோகச் செய்யாது. யார் மீதும் நமக்கு வெறுப்போ, காழ்ப்போ இல்லை.
சமுதாய நல்லிணக்கம் பேணுவோம், நமது சரித்திரத்தை காப்போம்.
வாழ்க தமிழ்! வெல்க வீரத்தமிழர்!
சிறப்பு நன்றி : வரலாற்று உண்மைகளை உலகிற்கு அறிய தந்த சேவாரத்னா நெல்லை திரு. மா. சேதுராமபாண்டியன் அய்யா அவர்களுக்கும்,இந்த பெரிய பதிவை எங்களுக்கு வழங்கிய உறவினர் திரு. தனியன் அவர்களுக்கும் எங்களது நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்.

Wednesday 11 May 2011

காளையார் கோயில் வரலாறு


கோயில் என்று தமிழில் வெறுமே சொன்னால் அது தில்லையையும், திருவரங்கத்தையும் தான் குறிக்கும். அவற்றை விடுத்து, சிவகங்கைக்கு அருகில் உள்ள காளையார் கோயிலைத் தான், வரலாற்றுத் தாக்கம் ஏற்படுத்தியதாய் நான் சொல்லுவேன்.
(காளையார் கோயில் என்பது, இன்று கோயிலுக்கும் ஊருக்குமான பெயர். சங்க காலத்தில், கானப் பேரெயில் என்று தான் ஊருக்குப் பெயர் இருந்தது. (கானத்தில் இருக்கும் பெரிய கோட்டை கானப் பேர் எயில்.)
காளையைக் குறிக்கும் பழந்தமிழ்ச்சொல் ஏறு. சங்ககாலத்தில் இவ்வூர் ஏறை என்னும் பெயருடன் விளங்கியது. இதன் அரசன் ஏறைக்கோன். குறமகள் இளவெயினி என்னும் புலவர் இந்த அரசனின் பெருமையைப் போற்றியுள்ளார்.

சோழ நாட்டில் இருந்து, ஈழம் செல்ல ஒரு பக்கம் ஆதி சேது என்னும் கோடியக் கரை; இன்னொரு பக்கம் மதுரை வழியாய் இராமேச்சுரம். இரண்டாவது வழியில், கடலாழம் அன்றைக்கு மிகவும் குறைவு; கிட்டத்தட்ட ஓராள், இரண்டாள் உயரம் தான் பல இடங்களில் இருக்கும்; வெகு எளிதில் ஈழம் போய்விடலாம். மதுரையில் இருந்து இராமேச்சுரம் போக, காளையார் கோவில் கானத்தைக் கடக்க வேண்டும்.
கானப்பேரை ஆண்டுவந்த கோதைமார்பனை வீழ்த்தி கானப் பேரெயிலைப் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி கடந்ததாக சங்க இலக்கியம் பேசும். (அப்படிக் கடந்து, குறுநில மன்னனை தோற்கடித்தால் தானே நெல்லையும், நாஞ்சிலும், குமரியும் பாண்டியனின் கட்டுக்குள் தொடர்ந்து இருக்கும்?) இன்றைக்கு நாம் காணும் சங்க இலக்கியங்களைத் தொகுத்தது, இந்தப் பாண்டியனின் பேரவையில் தான்.
கானப்பேரெயிலைச் சுற்றி இருக்கும் காட்டின் அடர்த்தி தமிழக வரலாற்றில் பெரிதும் பேசப்பட்டிருக்கிறது. பேரரசுச் சோழர் (imperial chozas) காலத்தில், இந்தக் காடு இன்றையைக் காட்டிலும் பரந்து பட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வரை இருந்திருக்க வேண்டும்.
(அதே போல திண்டுக்கல், அழகர்கோயில் வரை இன்னொரு காடு தொட்டுக் கொண்டிருக்கும்.) கானத்தின் வடகிழக்கு எல்லையாய் கான் நாடு காத்தான் என்னும் பெயர் கொண்ட எங்கள் பக்கத்து ஊர் தென்படுகிறது. “இராசராசனும், இராசேந்திரனும், இன்ன பலரும், தங்களின் பெரும்படையை கானபேரெயிலின் வழியே நகர்த்தி ஈழம் போயிருக்க வேண்டும்” என்று ஆய்வாளர் ஊகிக்கிறார்கள்.
இலங்கையில் இருந்து படையெடுத்து வந்த இலங்காபுரத் தண்டநாதன் கூட, எதிர்வரவாய், மதுரை நோக்கிக் காளையார்கோயில் வழி படையெடுத்துப் போயிருக்கிறான். [சிங்களத்தாருக்கும், நமக்கும் இடையுற்ற உறவாடல்கள், சண்டைகள், பெண் கொடுப்பு, பண்பாட்டுப் பரிமாறல்கள் போன்றவற்றை நம் வரலாறுகள் சொல்லித் தருவதில்லை.
வடபுலத்தாரைக் காட்டிலும் சிங்களத்தாரும், கன்னடத்தாரும் நமக்கு முகன்மையானவர்கள் என்பதே வரலாற்று உண்மை.]
காளையார் கோயிலின் மூலவரைக் காளீசர் என்றும், அம்மனைச் சொன்னவல்லி (சொர்ணவல்லி) என்றும் அழைக்கிறார்கள். காளியப்பன், சொர்ணவல்லி என்ற பெயர்கள் சிவகங்கை வட்டாரத்தில் மிகுதியும் உண்டு.
கோயிலின் உள்ளே, அருகருகே, மூன்று கருவறைகள் உண்டு. காளீசருக்கு ஒருபக்கம் சோமேசரும், இன்னொரு பக்கம் மதுரையை நினைவுறுத்துமாப் போல சுந்தரேசரும், இருக்கிறார்கள். இவர்களுக்கு நாயகியாய்ச் சுந்தர நாயகியும், அங்கயற்கண்ணியும், உண்டு. ஆக மூன்று கோயில்கள் சேர்ந்து ஒரு பெருங்கோயிலாய் மாறியிருக்கிறது.
சம்பந்தர், சுந்தரரும், அருணகிரிநாதரும் இங்கு பாடியிருக்கிறார்கள். பதினோறாம் திருமுறையும் பாடுகிறது. திருவருட்பாவிலும் சொல்லப் பட்டிருக்கிறது. சிற்பக் கலை சிறந்து விளங்கும் இந்தக் கோயில் பெருமாண்டமானது. பலரும் பார்க்க வேண்டிய கோயில். [அண்மையில் வலைப்பதிவில் திரு. இராமநாதன் இந்தக் கோயில் பார்த்ததை ஒளிப்படங்களோடு பதிவு செய்திருந்தார்.] வரகுண பாண்டியன் (1251-1261) காளீசருக்குத் திருப்பணி செய்து ஒரு சிறு கோபுரத்தை இங்கு எழுப்பியிருக்கிறான்.
பாண்டியருக்குப் பின்னால், நாயக்கர் ஆட்சியும், நவாபு ஆட்சியும் வந்து, முடிவில் சிவகங்கைச் சீமை முழுதும், 1604 ல் சேதுபதிகளுக்குக் கீழ் வந்து சேர்ந்திருக்கிறது. சேதுபதிகள் மதுரை நாயக்கர்களுக்கும், பின்னால் ஆற்காடு நவாபுக்களுக்கும் கீழ், தொட்டும் தொடாமலும், அவ்வப்போது கப்பம் கட்டி, அடங்கி இருந்திருக்கிறார்கள்.
கிழவன் சேதுபதி (1674-1710)க்கு அப்புறம் வந்த அவர் மகன் விசயரகுநாத சேதுபதி, தன் மகள் அகிலாண்டேசுவரியை நாலுகோட்டை பெரிய உடையாத் தேவரின் மகனான சசிவர்ணத் தேவருக்கு மணம் முடித்ததில் இருந்து, சிவகங்கைச் சீமை ஒரு தனித்த நிலை பெறுகிறது. திருமணத்திற்குப் பின்னால், சேதுநாட்டில் இருந்து மூன்றில் ஒருபங்கு பிரித்துச் சிவகங்கைச் சீமையில் சேர்க்கப் பட்டது.
சேதுநாட்டிற்கும் சிவகங்கைச் சீமைக்கும் எப்பொழுதும் வெதுப்பும், கனிவுமாய் அடுத்தடுத்து உண்டு. கொள்வினை – கொடுப்பிணை இருக்கும் சீமைகள் அல்லவா?
சசிவர்ணரின் மைந்தர் முத்துவடுக நாதருக்கு (இவர் பூதக்க நாச்சியார் என்ற இன்னொரு அரசிக்குப் பிறந்தவர்; சேதுபதியின் மகள் அகிலாண்டேசுவரிக்கு பிள்ளைகள் கிடையாது). மெய்க்காப்பாளராய் வந்து சேர்ந்தவர்கள் மருதிருவர். [இவர்கள் பிறந்த ஊர் அருப்புக் கோட்டைப் பக்கம்.
இவர்களின் தாயாரின் ஊர் சிவகங்கைப் பக்கம்.] முத்துவடுகரை ஆங்கிலேயரும், ஆற்காடு நவாபும் சூழ்ச்சி செய்து தொலைத்த பின்னால், அவர் மனைவி வேலுநாச்சியார் ஆட்சிக்கு வந்தார். முத்து வடுகர் ஆட்சியிலும், வேலுநாச்சியார் ஆட்சியிலும் மருதிருவர் பெரும்பொறுப்பு வகித்தார்கள். பெரிய மருது தலைமை அமைச்சராயும், சின்ன மருது தளபதியாயும் சேவை செய்தார்கள்.
முடிவில், தாயாதிச் சண்டையில் இருந்து மீள்வதற்கு இடையில், வேலுநாச்சியார் பெரிய மருது சேர்வையையே மணஞ் செய்தார். அதற்குப் பின் நடந்த எல்லாப் புரிசையிலும் (practice) பெரிய மருது மன்னராகவே கருதப் பட்டார்.
மேலும் இங்கு நுணுகி விவரிக்காமல், மருதிருவர் காலத்தில் காளையார் கோயிலுக்கும் தமிழக வரலாற்றிற்கும், நாவலந்தீவின் விடுதலைப் பெருங்கடனத்திற்கும் (ப்ரகடனம்) உள்ள தாக்கத்தை உணர்த்தும் முக்கிய நிகழ்வுகளைக் கூற விரும்புகிறேன்.
காளீசர் கோயிலை இன்றிருக்கும் அளவிற்கு பெரிதாக்கிக் கட்டியவர்கள் மருதிருவரே. மருதிருவரின் கோயில் திருப்பணிகள் பரந்து பட்டவை; அவற்றில் காளையார் கோவில் பணியே மிக உயர்ந்தது. பெரிய மருதுவின் முயற்சியால், 157 அடியில், கோயிலின் 9 நிலைப் பெரிய கோபுரம், சோமேசர் திருமுன்னிலைக்கு (சந்நிதிக்கு) முன்னால் கட்டப்பட்டது.
மதுரைக் கோயிலின் தெற்குக் கோபுரம் தவிர்த்து, மற்ற கோபுரங்கள் எல்லாம் காளீசர் கோபுரத்திலும் உயரம் குறைந்தவை தான். தெற்குக் கோபுரம் மட்டுமே 160 3/4 அடி உயரம் ஆகும். காளீசர் கோபுர உச்சியில் இருந்து கூர்ந்து பார்த்தால் (அல்லது தொலை நோக்காடி – telescope – கொண்டு பார்த்தால்), தெளிவான நாளில் மதுரைத் தெற்குக் கோபுரம் தெரியும். பழைய பாண்டியர் கால வழக்கப் படி, மதுரையைப் போலவே பெருங்கோபுரம் எடுத்து கோயிலைக் கட்டியதால் தான், மருதிருவர்கள் பாண்டியர் என்றே மக்களால் அழைக்கப் பட்டார்கள். நாட்டுப் பாடல் ஒன்று,
கருமலையிலே கல்லெடுத்து காளையார் கோவில் உண்டுபண்ணி மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய மருது வாரதைப் பாருங்கடி
என்று அவர்களின் பெருமை சொல்லும். (இந்தப் பாட்டு “சிவகங்கைச் சீமை” திரைப்படத்திலும் வரும். பார்க்க வேண்டிய படம். கண்ணதாசன் எடுத்த படம். வீரபாண்டியக் கட்டபொம்மனைக் காட்டிலும் நல்ல வரலாற்றுப் படம்.)
கோயிலுக்கு வேண்டிய செங்கல்களை மானாமதுரைக்கு அருகில் உள்ள செங்கோட்டைச் சூளையில் உருவாக்கி, மக்களின் முயற்சியால், பல்லாயிரக் கணக்கானவர் வரிசையாய் நின்று, அஞ்சல் முறையில், செங்கோட்டை – மானாமதுரை – முடிக்கரை – காளையார் கோவில் என்ற (13 மைல்) வழியில் கொண்டு வரப் பட்டது. இது போன்ற கட்டுமான உத்தி (நாட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்து கட்டும் உத்தி) அதுவரையில் யாராலும் செய்யப் பட்டதில்லை.
இந்தக் கட்டுமானம் பற்றியே சிவகங்கையில் பல் வேறு கதைகள் உண்டு. (காளீசர் கோயிலில் பெரிய மருது தேரமைத்த கதையும், அதன் ஆசாரி பெரிய மருதுவிடம் இருந்து முடிவாங்கி ஒருநாள் மன்னரான கதையும், பின்னால் தேரோட்டம் முடியும் போது ஈகம் – தியாகம் – செய்து ஆசாரி உயிர்கொடுத்த கதையும் நம் மனத்தை ஈர்க்கும்; இன்னொரு முறை பார்க்கலாம்.) 1789 திசம்பரில் தொடங்கி 1794 ஆண்டிற்குள் இந்த ஆலயத் திருப்பணி முடிந்தது.
கோயிலுக்குத் தெற்கே உள்ள ஆனைமடு ஊருணி மிகவும் பெரியது. மதுரை வண்டியூர் தெப்பக்குளம் அளவிற்கு அது இருக்கும்.
மருதிருவருக்கு கிட்டத் தட்ட இரண்டாம் தலைநகராகவே காளையார் கோவில் இருந்தது. அவர்களின் படைகள் குவிக்கப் பட்டு, படைத் தளமும் அங்கு தான் இருந்தது. படைத்தளபதி சின்ன மருது, சிறுவயலில் அரண்மனையில் தங்கியது போக, பெரும்பாலான நேரம் காளையார் கோயிலிலேயே இருந்து, படைநடவடிக்கைகளை கவனித்திருக்கிறார்.
அத்தனை படைத் தளவாடங்களும் கானப்பேர்க் கோட்டைக்குள் தான் இருந்தன. படையும் சிறப்பான திறமைகள் பெற்று ஆங்கிலேயர் படைக்குச் சரிநிகர் சமானமாய்த்தான் இருந்தது. இந்தக் காட்டினுள் மருதிருவரும் அலையாத இடம் கிடையாது.
பின்னால், மருது பாண்டியருக்கும் ஆங்கிலேயருக்கும் (கூடவே ஆற்காடு நவாபுக்கும்) இடையே, வரிவிதிப்பு மீறல், தன்னாளுமை போன்றவற்றால் பெருத்த சண்டைகள் ஏற்பட்டன. அந்தக் காலத்தில் சின்ன மருது ஒரு பெரிய தடவழி (strategy)க்காரர்.
படையுத்திகளில் வல்லவர். அவர் தன் நாட்டு விடுதலையை மட்டும் பாராமல், நாவலந்தீவின் விடுதலைக்கே முதன்மையாய், வெள்ளைக்காரரை வெளியேற்ற வேண்டும் என்று, ஓர் எதிர்ப்புப் போராளி முன்னணியையே, உருவாக்கினார்.
அதில் திப்பு சுல்தான், வட கேரளக் குறுநிலக் காரர்கள், கன்னட அரசர்கள், மராட்டியத் தலைவர்கள், பாஞ்சாலங் குறிச்சி முதற்கொண்டு பல்வேறு தமிழகப் பாளையக் காரர்கள், போராளிக் கழகங்கள் என்று பல்வேறு உறுப்பினர்கள் இருந்திருக்கிறார்கள். தென்னிந்திய அளவில் இந்த முன்னணி விரிந்து பரந்திருந்தது.
இவர்களின் கூட்டங்கள் பலகாலம் திண்டுக்கல், திருப்பாச்சிப் பகுதிகளில் நடந்திருக்கின்றன. கூட்டணியின் தலைவரான சின்னமருதுவின் தடவழிக்கு இணங்கவே யாவரும் பணியாற்றியிருக்கிறார்கள். சின்னப் பாண்டியரின் “ஜம்புத்வீபப் பிரகடனம்” – படிக்க வேண்டிய ஒன்று – 1801 ஜூன் 16 க்கு முன்னால் திருவரங்கம் கோயிலின் வெளி மதிலில் முதன்முதலாய் ஒட்டப் பெற்றது. (வேடிக்கையைப் பார்த்தீர்களா? இந்திய விடுதலையின் முதல் எழுச்சிவெளியீடு சீரங்கம் அரங்கன் கோயில் சுவரில் ஒட்டப் பட்டிருக்கிறது.) பின்னால், திருச்சிக் கோட்டையின் வெளிச்சுவரிலும் ஒட்டப்பட்டது.
இந்தச் சீரங்க வெளியீட்டை அறிந்த ஆங்கிலேய அரசு, (அப்பொழுது சென்னையில் ஆங்கிலேயரின் ஆட்சியாளர் இராபர்ட் கிளைவின் மகனான எட்வர்ட் கிளைவ்.) 6.7.1801 ல் எதிர்ப்பு முன்னணியை முளையிலேயே கிள்ள வேண்டும் என்ற நோக்கில், அரசாணை பிறப்பித்தது. ஆங்கிலேயர் படையினர், பாஞ்சாலங்குறிச்சியில் தொடங்கி, ஒவ்வொருவராய் அழித்து, இடையில் மைசூரையும் 2 மாதங்களில் தொலைத்து, முடிவில் சிவகங்கைக்கு வந்தார்கள்.
கிட்டத் தட்ட 1801 மார்ச்சில் இருந்து அக்டோ பர் வரை 8 மாதங்கள் சிவகங்கைச் சீமையை முற்றுகையிட்டனர். ஆங்காங்கே சிறுசிறு வெற்றிகள் பெற்றாலும் முழு வெற்றியை ஆங்கிலேயரால் பெறவே முடியவில்லை. இத்தனைக்கும், அதுவரை இந்தியாவில் நடந்த எந்தப் போரிலும், இவ்வளவு ஐரோப்பியர் இறந்ததில்லையாம்; சிவகங்கைப் போரில் தான் அதிகம் பேர் இறந்திருக்கின்றனர்.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி தீர்மானமாய் நிலைத்ததில் இந்தப் போர் முகன்மையானது. (This war was decisive in firmly establishing English rule in India).
“காளையார் கோவிலைக் கைப்பற்றினால் தான், சிவகங்கை கவிழும்; முன்னணி உடையும்; மற்ற போரளிகள் தொய்ந்து போவார்கள்; சென்னைக் கோட்டை உறுதிபெறும், ஆங்கில அரசு நாவலந்தீவில் நிலைக்கும்” என்ற கருத்தில், கர்னல் அக்னியூ காட்டைச் சுற்றி வளைத்தான். 40 மைல் சுற்றளவும், குறுக்கே 11-12 மைல் நீளமும் கொண்ட காட்டின் இடையே அப்பொழுது வயல்களோ, ஊர்களோ இல்லை. காட்டை ஒரு பக்கம் வெட்டத் தொடங்கினால், நிழல் குறைந்து ஆங்கிலேயர் அணி (அதனுள் இந்தியர் மட்டுமில்லை, மலாய்க்காரரும் இருந்தனர்.) வெய்யிலில் நகர முடியாமல் தடைப் பட்டது. காட்டிற்குள் செல்லும் முயற்சி எதுவும் பலிக்கவில்லை.
முடிவில், காட்டிக் கொடுத்தவர்களின் உதவியோடு, மருது படை பயன்படுத்திய கமுக்க (secret) வழியை அறிந்து, அதன் வழியே படைநடத்தி, 30/9/1801 இரவு கழிந்து மறுநாள் புலரும் நேரத்தில், காளையார்கோவில் ஊர்வாயிலுக்கு அக்னியூ வந்து சேர்ந்தான்.
அதற்கு இடையில் ஒற்றர் மூலம் “கோயில் கோபுரத்தைப் பீரங்கி கொண்டு தகர்க்க” அக்னியூ திட்டமிட்டிருப்பதை அறிந்த மருது பாண்டியர் யாரும் நினைக்க முடியாத ஒரு செயலைச் செய்தார்கள். (பீரங்கி வைத்து பிளப்பது என்னும் அச்சுறுத்துக் கருத்தீட்டைக் குமுகத்தில் பலரும் ஆங்கிலேயர் காலத்தில் அறிந்த காரணத்தால், பின்னொரு காலத்தில் பாரதிதாசன் வேடிக்கையாகச் சொல்லுவார்: “சீரங்க நாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளப்பதுவும் எக்காலம்?” ஒரு சிலர் கோவப் படாதீர்கள்!! இங்கே கோபுரம் பிளக்கும் கதை தான் குறியிடப் படுகிறது ;-))
கில்ஜிகளின் காலத்தில், திருவரங்கக் கோயில் உலாத் திருமேனிகளுக்கு ஆபத்து வந்த போது, காளையார் கோயிலில் தான் அவை பாதுகாக்கப் பட்டன. (இது திருக்கோட்டியூர் வழியான தொடர்பு. இராமனுசர் காலத்தையும் அவருக்குப் பின்னால் ஏற்பட்ட உறவுகளையும் இங்கு எண்ணிக் கொள்ளுங்கள்.
இன்றைக்கும் திருக்கோட்டியூர் சிவகங்கைச் சமத்தானக் கோயில்.) இப்பொழுது காளையார் கோவிலுக்கே பாதகம் என்றால், என்ன செய்வது? 1783 – ல், திருவில்லிபுத்தூர் கோபுரத்தைத் தகர்ப்பதாய் அறிவித்து, நெல்லைப் பாளையக்காரர்கள் கப்பம் கட்ட ஒப்பிய பின்னரே, ஆங்கிலேயர் கோபுரத் தகர்ப்பைக் கைவிட்டனர்.
[இன்றைக்குத் தமிழ்நாடு அரசின் சின்னமாகப் போற்றுகிறோமே அந்தக் கோபுரம் தான் இது.] இதே போல சங்கரன் கோயில் கோபுரத்தையும் (பார்க்க வேண்டிய கோயில்) இடிப்பதாக அறிவித்த பின்னால், நெல்கட்டும் செவல் பூலித்தேவர், கோயில், கோபுரத்தைக் காப்பாற்றுவதற்காகச் சண்டை போடாமல் சரணடைந்தார். கோபுரத்திற்காக எதிரியிடம் சரணடைந்தவர் தமிழக வரலாற்றில் பலர் இருந்திருக்கிறார்கள். கோபுரங்கள் சொல்லும் வரலாற்றுக் கதைகள் தமிழகத்தில் மிகுதி.
அத்தனையையும் சீர்தூக்கிப் பார்த்த மருதிருவர், இரவோடு இரவாய் 78000 பேர் கொண்ட தங்கள் படையை, தளவாடங்களுடன், நகரை விட்டு நகர்த்தியிருக்கிறார்கள். 1801 அக்டோபர் முதல் தேதி அக்னியூ ஊரில் நுழைந்தான்; ஓர் எதிர்ப்பும் இல்லை.
முடிவில் ஒரு வெடி வெடிக்காமல், ஒரு துமுக்கு (rifle) வேட்டு இல்லாமல், ஒரு குண்டு இல்லாமல், ஆங்கிலேயர் கொடி காளிசர் கோபுரத்தின் உச்ச கலசத்தில் ஏறிப் பறக்க விடப்பட்டது; கவனம் கொள்ளுங்கள், கொடிபறந்தது கோட்டை வாசலில் அல்ல; கோபுர உயரத்தில். ஆக, காளீசர் கோபுரத்தையே ஆங்கிலேயர் பிடித்தார்கள். அதில்தான் அவர்களின் முழுக்கவனமும் இருந்தது. [பின்னால் அக்னியூவின் கோபுரத் தகர்ப்பு ஆணை ஆங்கிலேய அரசிதழிலேயே வெளிவந்தது.]
ஆக ஒரு கோபுரத்திற்காக, அதைக் காப்பாற்றுவதற்காக, தமிழக விடுதலை, ஏன் இந்திய விடுதலை, 146 ஆண்டுகள் தள்ளிப் போனது. போரே இல்லாது போனதால், போராளிகளின் போராட்டமும் பின்னால் பிசுபிசுத்தது.
இத்தனைக்கும் மருதுபாண்டியர் பெருத்த வலிமையுடன் இருந்தார்கள் என்றுதான் வரலாறு சொல்லுகிறது. மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய பெரிய மருது, காளீசர் கோபுரத்தைக் காக்காமல் வேறு என்ன செய்வார்? “இப்படி நடந்திருக்குமானால் – what if” என்ற கேள்வி வரலாற்றில் சிக்கலானது தான். ஆனாலும், சின்ன மருதுவின் “ஜம்புத்வீபப் பிரகடனம்” படித்தவருக்கும், அந்தக் காலப் போர்க் கூட்டணியைப் புரிந்து கொண்டவருக்கும், கிழக்கிந்தியக் கும்பனியின் அந்தப் பெரிய போர் முயற்சியை ஆழ்ந்து ஆய்ந்தவருக்கும் நான் சொல்லுவது புரியும். It is perplexing that we lost an opportunity of throwing out the English rule just for the sake of a Temple Tower.
இன்றையத் தமிழ் இளையர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் சொன்னது கதையல்ல, உண்மை. காளையார் கோயில் போர், இந்திய விடுதலையின் ஒரு முகன்மைக் குறியீடு. (வேலூர்க் கோட்டைச் சிப்பாய்ப் புரட்சியெல்லாம் அதற்கு அப்புறம் வந்தது, 1857 ல் வடக்கே நடந்த சிப்பாய்ப் புரட்சியும் இன்னும் பல ஆண்டு கழித்து வந்தது.) இந்திய வரலாற்றில் மருது பாண்டியரின் பங்களிப்பு சரியான முறையில் மக்களுக்குத் தெரிவிக்கப் படவில்லை.
காளையார் கோயிலை வசப்படுத்திய அக்னியு, பத்தே0 நாட்களில், அக்டோபர் 11 அன்று, அந்தக் காட்டையே கொளுத்தினான்; சிவகங்கை, திண்டுக்கல் காடுகளைக் கொளுத்தும் படி கும்பினியின் மேலிடமே உத்தரவிட்டது. அன்று அழிந்தது தான் அந்தச் சீமை; காடு போயிற்று; அந்தப் பக்கமே வறண்டு, செங்காட்டு பூமியானது. உடன் இருந்த மெய்க்காப்பாளன் கருத்தான் காட்டிக் கொடுக்க, தொடையில் குண்டடி பட்டு, சின்னப் பாண்டியர் 4/10/1801 லேயே கைதானார். அடுத்த நாளில் கருத்தானின் கைகாட்டலில், அவருக்கு இருந்த பக்கவாதக் குறைவை சூழ்ச்சியால் ஏற்பட வைத்து, பெரிய பாண்டியரைக் கைது செய்தனர்.
(இரண்டு பாண்டியரும், நாட்டின் மேல் இருந்த காதலால், காளையார் கோவில் காட்டை விட்டு, அகலவே இல்லை; நினைத்திருந்தால் வட கேரளத்திற்கும், கன்னட தேசத்திற்கும் தப்பி, பின்னால் மீண்டு வந்து, அணிசேர்த்து, ஆங்கிலேயருக்கு எதிராய்த் திரும்பவும் படையெடுத்திருக்கலாம்; ஆனால் செய்யவில்லை.
மக்களின் மேல் இருந்த பற்று, நாட்டை விட்டு நகர வைக்காமல், அவர்கள் கண்ணை மறைத்தது.) இருவரும் திருப்புத்தூரில் அக்டோ பர் 24-ல் தூக்கில் இடப்பட்டனர். சிவகங்கை அரச குலம் அந்த மூன்றே வாரத்தில் ஒருவரில்லாமல் முற்றிலுமாய்க் கருவறுக்கப் பட்டது.
மருதிருவர், சிவகங்கை பற்றிய நிறையச் செய்திகளை, வரலாற்றின் இந்தப் பகுதியை அறிய விரும்புவோர், பெரியவர் செயபாரதியின் அகத்தியர் மடலாடற் குழுவிற்குப் போனால், ஏராளமாய்ப் படிக்க முடியும். கூடவே மீ.மனோகரனின் “மருது பாண்டிய மன்னர்கள் 1780-1801″ என்ற பொத்தகத்தையும் (அன்னம் வெளியீடு, 2, சிவன்கோயில் தெற்குத் தெரும் சிவகங்கை 623 560) படிப்பதற்கு நான் பரிந்துரை செய்வேன்
கோயில் என்று தமிழில் வெறுமே சொன்னால் அது தில்லையையும், திருவரங்கத்தையும் தான் குறிக்கும். அவற்றை விடுத்து, சிவகங்கைக்கு அருகில் உள்ள காளையார் கோயிலைத் தான், வரலாற்றுத் தாக்கம் ஏற்படுத்தியதாய் நான் சொல்லுவேன்.
(காளையார் கோயில் என்பது, இன்று கோயிலுக்கும் ஊருக்குமான பெயர். சங்க காலத்தில், கானப் பேரெயில் என்று தான் ஊருக்குப் பெயர் இருந்தது. (கானத்தில் இருக்கும் பெரிய கோட்டை கானப் பேர் எயில்.)
காளையைக் குறிக்கும் பழந்தமிழ்ச்சொல் ஏறு. சங்ககாலத்தில் இவ்வூர் ஏறை என்னும் பெயருடன் விளங்கியது. இதன் அரசன் ஏறைக்கோன். குறமகள் இளவெயினி என்னும் புலவர் இந்த அரசனின் பெருமையைப் போற்றியுள்ளார்.

சோழ நாட்டில் இருந்து, ஈழம் செல்ல ஒரு பக்கம் ஆதி சேது என்னும் கோடியக் கரை; இன்னொரு பக்கம் மதுரை வழியாய் இராமேச்சுரம். இரண்டாவது வழியில், கடலாழம் அன்றைக்கு மிகவும் குறைவு; கிட்டத்தட்ட ஓராள், இரண்டாள் உயரம் தான் பல இடங்களில் இருக்கும்; வெகு எளிதில் ஈழம் போய்விடலாம். மதுரையில் இருந்து இராமேச்சுரம் போக, காளையார் கோவில் கானத்தைக் கடக்க வேண்டும்.
கானப்பேரை ஆண்டுவந்த கோதைமார்பனை வீழ்த்தி கானப் பேரெயிலைப் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி கடந்ததாக சங்க இலக்கியம் பேசும். (அப்படிக் கடந்து, குறுநில மன்னனை தோற்கடித்தால் தானே நெல்லையும், நாஞ்சிலும், குமரியும் பாண்டியனின் கட்டுக்குள் தொடர்ந்து இருக்கும்?) இன்றைக்கு நாம் காணும் சங்க இலக்கியங்களைத் தொகுத்தது, இந்தப் பாண்டியனின் பேரவையில் தான்.
கானப்பேரெயிலைச் சுற்றி இருக்கும் காட்டின் அடர்த்தி தமிழக வரலாற்றில் பெரிதும் பேசப்பட்டிருக்கிறது. பேரரசுச் சோழர் (imperial chozas) காலத்தில், இந்தக் காடு இன்றையைக் காட்டிலும் பரந்து பட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வரை இருந்திருக்க வேண்டும்.
(அதே போல திண்டுக்கல், அழகர்கோயில் வரை இன்னொரு காடு தொட்டுக் கொண்டிருக்கும்.) கானத்தின் வடகிழக்கு எல்லையாய் கான் நாடு காத்தான் என்னும் பெயர் கொண்ட எங்கள் பக்கத்து ஊர் தென்படுகிறது. “இராசராசனும், இராசேந்திரனும், இன்ன பலரும், தங்களின் பெரும்படையை கானபேரெயிலின் வழியே நகர்த்தி ஈழம் போயிருக்க வேண்டும்” என்று ஆய்வாளர் ஊகிக்கிறார்கள்.
இலங்கையில் இருந்து படையெடுத்து வந்த இலங்காபுரத் தண்டநாதன் கூட, எதிர்வரவாய், மதுரை நோக்கிக் காளையார்கோயில் வழி படையெடுத்துப் போயிருக்கிறான். [சிங்களத்தாருக்கும், நமக்கும் இடையுற்ற உறவாடல்கள், சண்டைகள், பெண் கொடுப்பு, பண்பாட்டுப் பரிமாறல்கள் போன்றவற்றை நம் வரலாறுகள் சொல்லித் தருவதில்லை.
வடபுலத்தாரைக் காட்டிலும் சிங்களத்தாரும், கன்னடத்தாரும் நமக்கு முகன்மையானவர்கள் என்பதே வரலாற்று உண்மை.]
காளையார் கோயிலின் மூலவரைக் காளீசர் என்றும், அம்மனைச் சொன்னவல்லி (சொர்ணவல்லி) என்றும் அழைக்கிறார்கள். காளியப்பன், சொர்ணவல்லி என்ற பெயர்கள் சிவகங்கை வட்டாரத்தில் மிகுதியும் உண்டு.
கோயிலின் உள்ளே, அருகருகே, மூன்று கருவறைகள் உண்டு. காளீசருக்கு ஒருபக்கம் சோமேசரும், இன்னொரு பக்கம் மதுரையை நினைவுறுத்துமாப் போல சுந்தரேசரும், இருக்கிறார்கள். இவர்களுக்கு நாயகியாய்ச் சுந்தர நாயகியும், அங்கயற்கண்ணியும், உண்டு. ஆக மூன்று கோயில்கள் சேர்ந்து ஒரு பெருங்கோயிலாய் மாறியிருக்கிறது.
சம்பந்தர், சுந்தரரும், அருணகிரிநாதரும் இங்கு பாடியிருக்கிறார்கள். பதினோறாம் திருமுறையும் பாடுகிறது. திருவருட்பாவிலும் சொல்லப் பட்டிருக்கிறது. சிற்பக் கலை சிறந்து விளங்கும் இந்தக் கோயில் பெருமாண்டமானது. பலரும் பார்க்க வேண்டிய கோயில். [அண்மையில் வலைப்பதிவில் திரு. இராமநாதன் இந்தக் கோயில் பார்த்ததை ஒளிப்படங்களோடு பதிவு செய்திருந்தார்.] வரகுண பாண்டியன் (1251-1261) காளீசருக்குத் திருப்பணி செய்து ஒரு சிறு கோபுரத்தை இங்கு எழுப்பியிருக்கிறான்.
பாண்டியருக்குப் பின்னால், நாயக்கர் ஆட்சியும், நவாபு ஆட்சியும் வந்து, முடிவில் சிவகங்கைச் சீமை முழுதும், 1604 ல் சேதுபதிகளுக்குக் கீழ் வந்து சேர்ந்திருக்கிறது. சேதுபதிகள் மதுரை நாயக்கர்களுக்கும், பின்னால் ஆற்காடு நவாபுக்களுக்கும் கீழ், தொட்டும் தொடாமலும், அவ்வப்போது கப்பம் கட்டி, அடங்கி இருந்திருக்கிறார்கள்.
கிழவன் சேதுபதி (1674-1710)க்கு அப்புறம் வந்த அவர் மகன் விசயரகுநாத சேதுபதி, தன் மகள் அகிலாண்டேசுவரியை நாலுகோட்டை பெரிய உடையாத் தேவரின் மகனான சசிவர்ணத் தேவருக்கு மணம் முடித்ததில் இருந்து, சிவகங்கைச் சீமை ஒரு தனித்த நிலை பெறுகிறது. திருமணத்திற்குப் பின்னால், சேதுநாட்டில் இருந்து மூன்றில் ஒருபங்கு பிரித்துச் சிவகங்கைச் சீமையில் சேர்க்கப் பட்டது.
சேதுநாட்டிற்கும் சிவகங்கைச் சீமைக்கும் எப்பொழுதும் வெதுப்பும், கனிவுமாய் அடுத்தடுத்து உண்டு. கொள்வினை – கொடுப்பிணை இருக்கும் சீமைகள் அல்லவா?
சசிவர்ணரின் மைந்தர் முத்துவடுக நாதருக்கு (இவர் பூதக்க நாச்சியார் என்ற இன்னொரு அரசிக்குப் பிறந்தவர்; சேதுபதியின் மகள் அகிலாண்டேசுவரிக்கு பிள்ளைகள் கிடையாது). மெய்க்காப்பாளராய் வந்து சேர்ந்தவர்கள் மருதிருவர். [இவர்கள் பிறந்த ஊர் அருப்புக் கோட்டைப் பக்கம்.
இவர்களின் தாயாரின் ஊர் சிவகங்கைப் பக்கம்.] முத்துவடுகரை ஆங்கிலேயரும், ஆற்காடு நவாபும் சூழ்ச்சி செய்து தொலைத்த பின்னால், அவர் மனைவி வேலுநாச்சியார் ஆட்சிக்கு வந்தார். முத்து வடுகர் ஆட்சியிலும், வேலுநாச்சியார் ஆட்சியிலும் மருதிருவர் பெரும்பொறுப்பு வகித்தார்கள். பெரிய மருது தலைமை அமைச்சராயும், சின்ன மருது தளபதியாயும் சேவை செய்தார்கள்.
முடிவில், தாயாதிச் சண்டையில் இருந்து மீள்வதற்கு இடையில், வேலுநாச்சியார் பெரிய மருது சேர்வையையே மணஞ் செய்தார். அதற்குப் பின் நடந்த எல்லாப் புரிசையிலும் (practice) பெரிய மருது மன்னராகவே கருதப் பட்டார்.
மேலும் இங்கு நுணுகி விவரிக்காமல், மருதிருவர் காலத்தில் காளையார் கோயிலுக்கும் தமிழக வரலாற்றிற்கும், நாவலந்தீவின் விடுதலைப் பெருங்கடனத்திற்கும் (ப்ரகடனம்) உள்ள தாக்கத்தை உணர்த்தும் முக்கிய நிகழ்வுகளைக் கூற விரும்புகிறேன்.
காளீசர் கோயிலை இன்றிருக்கும் அளவிற்கு பெரிதாக்கிக் கட்டியவர்கள் மருதிருவரே. மருதிருவரின் கோயில் திருப்பணிகள் பரந்து பட்டவை; அவற்றில் காளையார் கோவில் பணியே மிக உயர்ந்தது. பெரிய மருதுவின் முயற்சியால், 157 அடியில், கோயிலின் 9 நிலைப் பெரிய கோபுரம், சோமேசர் திருமுன்னிலைக்கு (சந்நிதிக்கு) முன்னால் கட்டப்பட்டது.
மதுரைக் கோயிலின் தெற்குக் கோபுரம் தவிர்த்து, மற்ற கோபுரங்கள் எல்லாம் காளீசர் கோபுரத்திலும் உயரம் குறைந்தவை தான். தெற்குக் கோபுரம் மட்டுமே 160 3/4 அடி உயரம் ஆகும். காளீசர் கோபுர உச்சியில் இருந்து கூர்ந்து பார்த்தால் (அல்லது தொலை நோக்காடி – telescope – கொண்டு பார்த்தால்), தெளிவான நாளில் மதுரைத் தெற்குக் கோபுரம் தெரியும். பழைய பாண்டியர் கால வழக்கப் படி, மதுரையைப் போலவே பெருங்கோபுரம் எடுத்து கோயிலைக் கட்டியதால் தான், மருதிருவர்கள் பாண்டியர் என்றே மக்களால் அழைக்கப் பட்டார்கள். நாட்டுப் பாடல் ஒன்று,
கருமலையிலே கல்லெடுத்து காளையார் கோவில் உண்டுபண்ணி மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய மருது வாரதைப் பாருங்கடி
என்று அவர்களின் பெருமை சொல்லும். (இந்தப் பாட்டு “சிவகங்கைச் சீமை” திரைப்படத்திலும் வரும். பார்க்க வேண்டிய படம். கண்ணதாசன் எடுத்த படம். வீரபாண்டியக் கட்டபொம்மனைக் காட்டிலும் நல்ல வரலாற்றுப் படம்.)
கோயிலுக்கு வேண்டிய செங்கல்களை மானாமதுரைக்கு அருகில் உள்ள செங்கோட்டைச் சூளையில் உருவாக்கி, மக்களின் முயற்சியால், பல்லாயிரக் கணக்கானவர் வரிசையாய் நின்று, அஞ்சல் முறையில், செங்கோட்டை – மானாமதுரை – முடிக்கரை – காளையார் கோவில் என்ற (13 மைல்) வழியில் கொண்டு வரப் பட்டது. இது போன்ற கட்டுமான உத்தி (நாட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்து கட்டும் உத்தி) அதுவரையில் யாராலும் செய்யப் பட்டதில்லை.
இந்தக் கட்டுமானம் பற்றியே சிவகங்கையில் பல் வேறு கதைகள் உண்டு. (காளீசர் கோயிலில் பெரிய மருது தேரமைத்த கதையும், அதன் ஆசாரி பெரிய மருதுவிடம் இருந்து முடிவாங்கி ஒருநாள் மன்னரான கதையும், பின்னால் தேரோட்டம் முடியும் போது ஈகம் – தியாகம் – செய்து ஆசாரி உயிர்கொடுத்த கதையும் நம் மனத்தை ஈர்க்கும்; இன்னொரு முறை பார்க்கலாம்.) 1789 திசம்பரில் தொடங்கி 1794 ஆண்டிற்குள் இந்த ஆலயத் திருப்பணி முடிந்தது.
கோயிலுக்குத் தெற்கே உள்ள ஆனைமடு ஊருணி மிகவும் பெரியது. மதுரை வண்டியூர் தெப்பக்குளம் அளவிற்கு அது இருக்கும்.
மருதிருவருக்கு கிட்டத் தட்ட இரண்டாம் தலைநகராகவே காளையார் கோவில் இருந்தது. அவர்களின் படைகள் குவிக்கப் பட்டு, படைத் தளமும் அங்கு தான் இருந்தது. படைத்தளபதி சின்ன மருது, சிறுவயலில் அரண்மனையில் தங்கியது போக, பெரும்பாலான நேரம் காளையார் கோயிலிலேயே இருந்து, படைநடவடிக்கைகளை கவனித்திருக்கிறார்.
அத்தனை படைத் தளவாடங்களும் கானப்பேர்க் கோட்டைக்குள் தான் இருந்தன. படையும் சிறப்பான திறமைகள் பெற்று ஆங்கிலேயர் படைக்குச் சரிநிகர் சமானமாய்த்தான் இருந்தது. இந்தக் காட்டினுள் மருதிருவரும் அலையாத இடம் கிடையாது.
பின்னால், மருது பாண்டியருக்கும் ஆங்கிலேயருக்கும் (கூடவே ஆற்காடு நவாபுக்கும்) இடையே, வரிவிதிப்பு மீறல், தன்னாளுமை போன்றவற்றால் பெருத்த சண்டைகள் ஏற்பட்டன. அந்தக் காலத்தில் சின்ன மருது ஒரு பெரிய தடவழி (strategy)க்காரர்.
படையுத்திகளில் வல்லவர். அவர் தன் நாட்டு விடுதலையை மட்டும் பாராமல், நாவலந்தீவின் விடுதலைக்கே முதன்மையாய், வெள்ளைக்காரரை வெளியேற்ற வேண்டும் என்று, ஓர் எதிர்ப்புப் போராளி முன்னணியையே, உருவாக்கினார்.
அதில் திப்பு சுல்தான், வட கேரளக் குறுநிலக் காரர்கள், கன்னட அரசர்கள், மராட்டியத் தலைவர்கள், பாஞ்சாலங் குறிச்சி முதற்கொண்டு பல்வேறு தமிழகப் பாளையக் காரர்கள், போராளிக் கழகங்கள் என்று பல்வேறு உறுப்பினர்கள் இருந்திருக்கிறார்கள். தென்னிந்திய அளவில் இந்த முன்னணி விரிந்து பரந்திருந்தது.
இவர்களின் கூட்டங்கள் பலகாலம் திண்டுக்கல், திருப்பாச்சிப் பகுதிகளில் நடந்திருக்கின்றன. கூட்டணியின் தலைவரான சின்னமருதுவின் தடவழிக்கு இணங்கவே யாவரும் பணியாற்றியிருக்கிறார்கள். சின்னப் பாண்டியரின் “ஜம்புத்வீபப் பிரகடனம்” – படிக்க வேண்டிய ஒன்று – 1801 ஜூன் 16 க்கு முன்னால் திருவரங்கம் கோயிலின் வெளி மதிலில் முதன்முதலாய் ஒட்டப் பெற்றது. (வேடிக்கையைப் பார்த்தீர்களா? இந்திய விடுதலையின் முதல் எழுச்சிவெளியீடு சீரங்கம் அரங்கன் கோயில் சுவரில் ஒட்டப் பட்டிருக்கிறது.) பின்னால், திருச்சிக் கோட்டையின் வெளிச்சுவரிலும் ஒட்டப்பட்டது.
இந்தச் சீரங்க வெளியீட்டை அறிந்த ஆங்கிலேய அரசு, (அப்பொழுது சென்னையில் ஆங்கிலேயரின் ஆட்சியாளர் இராபர்ட் கிளைவின் மகனான எட்வர்ட் கிளைவ்.) 6.7.1801 ல் எதிர்ப்பு முன்னணியை முளையிலேயே கிள்ள வேண்டும் என்ற நோக்கில், அரசாணை பிறப்பித்தது. ஆங்கிலேயர் படையினர், பாஞ்சாலங்குறிச்சியில் தொடங்கி, ஒவ்வொருவராய் அழித்து, இடையில் மைசூரையும் 2 மாதங்களில் தொலைத்து, முடிவில் சிவகங்கைக்கு வந்தார்கள்.
கிட்டத் தட்ட 1801 மார்ச்சில் இருந்து அக்டோ பர் வரை 8 மாதங்கள் சிவகங்கைச் சீமையை முற்றுகையிட்டனர். ஆங்காங்கே சிறுசிறு வெற்றிகள் பெற்றாலும் முழு வெற்றியை ஆங்கிலேயரால் பெறவே முடியவில்லை. இத்தனைக்கும், அதுவரை இந்தியாவில் நடந்த எந்தப் போரிலும், இவ்வளவு ஐரோப்பியர் இறந்ததில்லையாம்; சிவகங்கைப் போரில் தான் அதிகம் பேர் இறந்திருக்கின்றனர்.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி தீர்மானமாய் நிலைத்ததில் இந்தப் போர் முகன்மையானது. (This war was decisive in firmly establishing English rule in India).
“காளையார் கோவிலைக் கைப்பற்றினால் தான், சிவகங்கை கவிழும்; முன்னணி உடையும்; மற்ற போரளிகள் தொய்ந்து போவார்கள்; சென்னைக் கோட்டை உறுதிபெறும், ஆங்கில அரசு நாவலந்தீவில் நிலைக்கும்” என்ற கருத்தில், கர்னல் அக்னியூ காட்டைச் சுற்றி வளைத்தான். 40 மைல் சுற்றளவும், குறுக்கே 11-12 மைல் நீளமும் கொண்ட காட்டின் இடையே அப்பொழுது வயல்களோ, ஊர்களோ இல்லை. காட்டை ஒரு பக்கம் வெட்டத் தொடங்கினால், நிழல் குறைந்து ஆங்கிலேயர் அணி (அதனுள் இந்தியர் மட்டுமில்லை, மலாய்க்காரரும் இருந்தனர்.) வெய்யிலில் நகர முடியாமல் தடைப் பட்டது. காட்டிற்குள் செல்லும் முயற்சி எதுவும் பலிக்கவில்லை.
முடிவில், காட்டிக் கொடுத்தவர்களின் உதவியோடு, மருது படை பயன்படுத்திய கமுக்க (secret) வழியை அறிந்து, அதன் வழியே படைநடத்தி, 30/9/1801 இரவு கழிந்து மறுநாள் புலரும் நேரத்தில், காளையார்கோவில் ஊர்வாயிலுக்கு அக்னியூ வந்து சேர்ந்தான்.
அதற்கு இடையில் ஒற்றர் மூலம் “கோயில் கோபுரத்தைப் பீரங்கி கொண்டு தகர்க்க” அக்னியூ திட்டமிட்டிருப்பதை அறிந்த மருது பாண்டியர் யாரும் நினைக்க முடியாத ஒரு செயலைச் செய்தார்கள். (பீரங்கி வைத்து பிளப்பது என்னும் அச்சுறுத்துக் கருத்தீட்டைக் குமுகத்தில் பலரும் ஆங்கிலேயர் காலத்தில் அறிந்த காரணத்தால், பின்னொரு காலத்தில் பாரதிதாசன் வேடிக்கையாகச் சொல்லுவார்: “சீரங்க நாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளப்பதுவும் எக்காலம்?” ஒரு சிலர் கோவப் படாதீர்கள்!! இங்கே கோபுரம் பிளக்கும் கதை தான் குறியிடப் படுகிறது ;-))
கில்ஜிகளின் காலத்தில், திருவரங்கக் கோயில் உலாத் திருமேனிகளுக்கு ஆபத்து வந்த போது, காளையார் கோயிலில் தான் அவை பாதுகாக்கப் பட்டன. (இது திருக்கோட்டியூர் வழியான தொடர்பு. இராமனுசர் காலத்தையும் அவருக்குப் பின்னால் ஏற்பட்ட உறவுகளையும் இங்கு எண்ணிக் கொள்ளுங்கள்.
இன்றைக்கும் திருக்கோட்டியூர் சிவகங்கைச் சமத்தானக் கோயில்.) இப்பொழுது காளையார் கோவிலுக்கே பாதகம் என்றால், என்ன செய்வது? 1783 – ல், திருவில்லிபுத்தூர் கோபுரத்தைத் தகர்ப்பதாய் அறிவித்து, நெல்லைப் பாளையக்காரர்கள் கப்பம் கட்ட ஒப்பிய பின்னரே, ஆங்கிலேயர் கோபுரத் தகர்ப்பைக் கைவிட்டனர்.
[இன்றைக்குத் தமிழ்நாடு அரசின் சின்னமாகப் போற்றுகிறோமே அந்தக் கோபுரம் தான் இது.] இதே போல சங்கரன் கோயில் கோபுரத்தையும் (பார்க்க வேண்டிய கோயில்) இடிப்பதாக அறிவித்த பின்னால், நெல்கட்டும் செவல் பூலித்தேவர், கோயில், கோபுரத்தைக் காப்பாற்றுவதற்காகச் சண்டை போடாமல் சரணடைந்தார். கோபுரத்திற்காக எதிரியிடம் சரணடைந்தவர் தமிழக வரலாற்றில் பலர் இருந்திருக்கிறார்கள். கோபுரங்கள் சொல்லும் வரலாற்றுக் கதைகள் தமிழகத்தில் மிகுதி.
அத்தனையையும் சீர்தூக்கிப் பார்த்த மருதிருவர், இரவோடு இரவாய் 78000 பேர் கொண்ட தங்கள் படையை, தளவாடங்களுடன், நகரை விட்டு நகர்த்தியிருக்கிறார்கள். 1801 அக்டோபர் முதல் தேதி அக்னியூ ஊரில் நுழைந்தான்; ஓர் எதிர்ப்பும் இல்லை.
முடிவில் ஒரு வெடி வெடிக்காமல், ஒரு துமுக்கு (rifle) வேட்டு இல்லாமல், ஒரு குண்டு இல்லாமல், ஆங்கிலேயர் கொடி காளிசர் கோபுரத்தின் உச்ச கலசத்தில் ஏறிப் பறக்க விடப்பட்டது; கவனம் கொள்ளுங்கள், கொடிபறந்தது கோட்டை வாசலில் அல்ல; கோபுர உயரத்தில். ஆக, காளீசர் கோபுரத்தையே ஆங்கிலேயர் பிடித்தார்கள். அதில்தான் அவர்களின் முழுக்கவனமும் இருந்தது. [பின்னால் அக்னியூவின் கோபுரத் தகர்ப்பு ஆணை ஆங்கிலேய அரசிதழிலேயே வெளிவந்தது.]
ஆக ஒரு கோபுரத்திற்காக, அதைக் காப்பாற்றுவதற்காக, தமிழக விடுதலை, ஏன் இந்திய விடுதலை, 146 ஆண்டுகள் தள்ளிப் போனது. போரே இல்லாது போனதால், போராளிகளின் போராட்டமும் பின்னால் பிசுபிசுத்தது.
இத்தனைக்கும் மருதுபாண்டியர் பெருத்த வலிமையுடன் இருந்தார்கள் என்றுதான் வரலாறு சொல்லுகிறது. மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய பெரிய மருது, காளீசர் கோபுரத்தைக் காக்காமல் வேறு என்ன செய்வார்? “இப்படி நடந்திருக்குமானால் – what if” என்ற கேள்வி வரலாற்றில் சிக்கலானது தான். ஆனாலும், சின்ன மருதுவின் “ஜம்புத்வீபப் பிரகடனம்” படித்தவருக்கும், அந்தக் காலப் போர்க் கூட்டணியைப் புரிந்து கொண்டவருக்கும், கிழக்கிந்தியக் கும்பனியின் அந்தப் பெரிய போர் முயற்சியை ஆழ்ந்து ஆய்ந்தவருக்கும் நான் சொல்லுவது புரியும். It is perplexing that we lost an opportunity of throwing out the English rule just for the sake of a Temple Tower.
இன்றையத் தமிழ் இளையர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் சொன்னது கதையல்ல, உண்மை. காளையார் கோயில் போர், இந்திய விடுதலையின் ஒரு முகன்மைக் குறியீடு. (வேலூர்க் கோட்டைச் சிப்பாய்ப் புரட்சியெல்லாம் அதற்கு அப்புறம் வந்தது, 1857 ல் வடக்கே நடந்த சிப்பாய்ப் புரட்சியும் இன்னும் பல ஆண்டு கழித்து வந்தது.) இந்திய வரலாற்றில் மருது பாண்டியரின் பங்களிப்பு சரியான முறையில் மக்களுக்குத் தெரிவிக்கப் படவில்லை.
காளையார் கோயிலை வசப்படுத்திய அக்னியு, பத்தே0 நாட்களில், அக்டோபர் 11 அன்று, அந்தக் காட்டையே கொளுத்தினான்; சிவகங்கை, திண்டுக்கல் காடுகளைக் கொளுத்தும் படி கும்பினியின் மேலிடமே உத்தரவிட்டது. அன்று அழிந்தது தான் அந்தச் சீமை; காடு போயிற்று; அந்தப் பக்கமே வறண்டு, செங்காட்டு பூமியானது. உடன் இருந்த மெய்க்காப்பாளன் கருத்தான் காட்டிக் கொடுக்க, தொடையில் குண்டடி பட்டு, சின்னப் பாண்டியர் 4/10/1801 லேயே கைதானார். அடுத்த நாளில் கருத்தானின் கைகாட்டலில், அவருக்கு இருந்த பக்கவாதக் குறைவை சூழ்ச்சியால் ஏற்பட வைத்து, பெரிய பாண்டியரைக் கைது செய்தனர்.
(இரண்டு பாண்டியரும், நாட்டின் மேல் இருந்த காதலால், காளையார் கோவில் காட்டை விட்டு, அகலவே இல்லை; நினைத்திருந்தால் வட கேரளத்திற்கும், கன்னட தேசத்திற்கும் தப்பி, பின்னால் மீண்டு வந்து, அணிசேர்த்து, ஆங்கிலேயருக்கு எதிராய்த் திரும்பவும் படையெடுத்திருக்கலாம்; ஆனால் செய்யவில்லை.
மக்களின் மேல் இருந்த பற்று, நாட்டை விட்டு நகர வைக்காமல், அவர்கள் கண்ணை மறைத்தது.) இருவரும் திருப்புத்தூரில் அக்டோ பர் 24-ல் தூக்கில் இடப்பட்டனர். சிவகங்கை அரச குலம் அந்த மூன்றே வாரத்தில் ஒருவரில்லாமல் முற்றிலுமாய்க் கருவறுக்கப் பட்டது.
மருதிருவர், சிவகங்கை பற்றிய நிறையச் செய்திகளை, வரலாற்றின் இந்தப் பகுதியை அறிய விரும்புவோர், பெரியவர் செயபாரதியின் அகத்தியர் மடலாடற் குழுவிற்குப் போனால், ஏராளமாய்ப் படிக்க முடியும். கூடவே மீ.மனோகரனின் “மருது பாண்டிய மன்னர்கள் 1780-1801″ என்ற பொத்தகத்தையும் (அன்னம் வெளியீடு, 2, சிவன்கோயில் தெற்குத் தெரும் சிவகங்கை 623 560) படிப்பதற்கு நான் பரிந்துரை செய்வேன்