Showing posts with label MARUTHU PANDIYAR. Show all posts
Showing posts with label MARUTHU PANDIYAR. Show all posts

Thursday, 19 November 2020

 

மருது பாண்டியர் மறைக்கப்பட்ட உண்மைகள்

-பி.ஏ. கிருஷ்ணன்
“நான் இந்தப் பக்கங்களில் கூறியிருக்கும் நிகழ்வுகள் பன்னிரெண்டு, பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவ அதிகாரி ஒருவரால் என்னிடம் கூறப்பட்டவை. அவர் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்.
என்னிடம் அவர் சொன்னது இது: ‘உன்னால் இந்த உண்மைக் கதையை உலகத்திற்குச் சொல்ல முடியும். என்னால் முடியாது.’ ”
இது கோர்லே என்னும் ஆங்கிலேயர் எழுதிய புத்தகத்தின் தொடக்கம். இந்தப் புத்தகம் 1813இல் எழுதப்பட்டது. மருது பாண்டியரின் கதையைச் சொல்வது. (எனக்குத் தெரிந்த அளவில்) வரலாற்று ஆசிரியர்களின் பார்வையில் இன்றுவரைக்கும் படாதது. பதிப்பாளர் அகப்படாததால் (அல்லது பதிப்பிக்க மறுத்ததால்) அவராலேயே பதிப்பிக்கப்பட்டது.

புத்தகத்தின் பெயர்: Mahradu- An Indian Story of the Beginning of the Nineteenth Century – With Some Observations on the Present State of the British Empire and Chiefly of its Finance.. லண்டனில் பதிப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் விலை நான்கு ஷில்லிங்குகள்.
புத்தகம் எழுதப்பட்டிருக்கும் விதம் படிப்பவர்களையும் படிக்கத் தான் வேண்டுமா என்று யோசிக்கவைக்கும். நமது கழக எழுத்தாளர்களையே வியக்கவைக்கும் அளவிற்கு, ஒவ்வொரு வாக்கியமும் ஒரு பக்கத்திற்கு மேல். முதற்பகுதி மருது பாண்டியரைப் பற்றி. பின்பகுதி பிரித்தானியப் பேரரசின் வரவு செலவு விவகாரங்களைப் பற்றி.
உண்மையைச் சொல்ல வேண்டும், இதுவரை சொல்லாததைச் சொல்ல வேண்டும் என்னும் ஆசிரியரின் ஆர்வம் புத்தகத்தின் முதற்பகுதியில் வெளிப்படுகிறது. அவர் சொல்லும் உண்மை அதிரவைக்கும் உண்மை. இதுவரை வெளிவராத உண்மை. ஒரு அழித்தொழிப்பைப் பற்றிய உண்மை.
பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழகத்தைப் பற்றிப் பேசும் அனைவரும் மருது சகோதரர்களை வென்றது பற்றியும் அவர்கள் தூக்கிலிடப்பட்டது பற்றியும் குறிப்பிடத் தவறுவதில்லை. கர்னல் வெல்ஷ் தனது “இராணுவ நினைவுகள்” நூலில் மருது சகோதரர்களுடன் நடந்த போரைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார்.
கட்டபொம்மன் வெள்ளையரை எதிர்த்துப் போர் புரிந்ததற்குக் காரணம் இருந்தது. ஆனால் மருது போர் புரிந்ததற்குக் காரணம் ஏதும் இல்லை என்று சொல்லும் அவர், மருதுவின் வீரர்கள் பாஞ்சாலங்குறிச்சி வீரர்களைப் போலப் போர் புரியவில்லை என்கிறார்.
Indeed twenty thousand Panjalumcoorcheers would have been invincible in his country.
“இருபதாயிரம் பாஞ்சாலங் குறிச்சிக்காரர்கள் இவரது நாட்டில் இருந்திருந்தால், அவர்கள் வெல்ல முடியாதவர்களாக இருந்திருப்பார்கள்.”
தனக்கும் மருது சகோதரர்களுக்கும் உள்ள தோழமையைப் பற்றி வெல்ஷ் இவ்வாறு கூறுகிறார்.
“(இருவரில்) மூத்தவரின் பெயர் வெள்ளை மருது. இவருக்கும் அரசாளுவதற்கும் தொடர்பே கிடையாது. இவர் பெரிய வேட்டைக்காரர். வாழ்வு முழுவதையும் சுற்றித் திரிந்தே கழித்தவர். ஒப்பற்ற உடல் வலிமை கொண்ட இவர் ஆர்க்காட்டு ரூபாயைத் தனது விரல்களால் வளைக்கக்கூடியவர்.
ஐரோப்பியர்களால் மிகவும் மதிக்கப்பட்டவர். புலி வேட்டையில் முதலில் நின்று புலியைக் கொல்வது இவர்தான். இவரது தம்பி சின்ன மருது சிறுவயதிலிருந்து அரசாண்டவர். அவரது தலையசைப்பையே சட்டமாக மதித்தனர் அவரது மக்கள். அவரது அரண்மனையில் ஒரு காவலாளிகூடக் கிடையாது. யாரும் உள்ளே செல்லலாம், வெளியே வரலாம்.”
தனக்கு வேல் பிடிக்கவும் களரிக் கம்பு வீசவும் கற்றுக்கொடுத்தது சின்ன மருதுதான் என்று கூறும் வெல்ஷ், ஒரு மிருகத்தைப் போல அவர் வேட்டையாடப்பட்டதையும் தொடையில் காயப்பட்டு, காலொடிந்து சிறைப்பட்டதையும் சாதாரணக் குற்றவாளியைப் போலத் தூக்கிலிடப்பட்டதையும் மனவருத்தத்தோடு கூறுகிறார்.
வெல்ஷின் கூற்றுப்படி, சின்ன மருதுவின் கடைசி மகனைத் தவிர அவரது குடும்பத்தவர் அனைவரும் வெள்ளையரால் தூக்கிலிடப்பட்டனர். கடைசி மகன் துரைசாமிக்கு அப்போது வயது பதினைந்து. பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்.
“தூத்துக்குடியில் இருந்த இராணுவ அணிக்கு நான் தலைமை தாங்க அனுப்பப்பட்டேன். கலகத்தில் ஈடுபட்டதால் நாடுகடத்தல் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அங்குதான் இருந்தார்கள். அங்குதான் எனக்கு என் பழைய நண்பர் சின்ன மருதுவின் மகன் துரைசாமியின் விலங்குகளைத் தளர்த்தும் வாய்ப்பு – எனது நெஞ்சை உருகவைக்கும் வாய்ப்பு – கிடைத்தது. அவரது காவல் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்ததால், என்னால் அவரைத் தப்பவைக்க முடியவில்லை.”
உரிய மரியாதையுடன் அவரை நடத்த ஆணையிட்ட வெல்ஷ், பதினேழு வருடங்கள் கழித்து அவரைத் திரும்பப் பினாங்கில் மிகவும் தாழ்ந்த நிலையில் சந்தித்ததையும் தனது நினைவுகளில் குறிப்பிடுகிறார்.மருதுவின் குடும்பத்தினர் தூக்கிலிடப்பட்டதாகக் கூறும் வெல்ஷ் சிறுவர்கள் தூக்கிலிடப்பட்டதாகக் குறிப்பிடவில்லை.
ஊழலில் பிறந்து ஊழலிலேயே வளர்ந்ததாகக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசைக் குற்றஞ்சாட்டும் கோர்லே இவ்வாறு கூறுகிறார்;
“இது (இந்த அரசு) திறமையின் சாயலைக்கூட வெறுப்பது; ஏனென்றால் திறமை ஊழலின் எதிரி என்று அதற்குத் தெரியும். இந்த அரசு தாங்கிப் பிடிப்பது அதிகாரத்தை – வரைமுறையற்ற, கீழ்த்தரமான அதிகாரத்தை -ஏனென்றால் அதிகாரத்தால் மட்டுமே தன்னால் நிலைத்து நிற்க முடியும் என்று அதற்குத் தெரியும்.”
கோர்லே தனது புத்தகத்தில் மருதுவின் புகழ்பெற்ற திருவரங்கம் அறிக்கையை முழுவதுமாக வெளியிட்டிருக்கிறார். இந்த அறிக்கையைப் பற்றி நான் எனது ‘புலிநகக் கொன்றை’யில் குறிப்பிட்டிருக்கிறேன். விடுதலை வேண்டி அடிமனத்தின் ஆழத்திலிருந்து குரல் கொடுக்கும் இந்த அறிக்கை கோர்லேயையும் மிகவும் பாதித்திருக்கிறது.
இந்த அறிக்கையைக் கி பி முதல் நூற்றாண்டில் ஜூலியஸ் அக்ரிகோலாவின் தலைமையில் நிகழ்ந்த ரோமானியப் படையெடுப்பிற்கு எதிராகக் கால்ககஸ் (Calgacus/Galgacus) என்ற கலடோனியத் (வட ஸ்காட்லாந்து) தளபதி நிகழ்த்திய பேருரைக்குக் கோர்லே ஒப்பிடுகிறார்.
“மனித இயல்பு எங்கேயும் ஒன்றுதான். எங்கெங்கெல்லாம் இறைவனால் தன்மானம் சிறிதளவாவது அளிக்கப்பட்டிருக்கிறதோ அங்குள்ளவர்களின் உணர்வுகள் ஒன்றாக இருக்கும் – அவை காலங்களையும் எல்லைகளையும் கடந்தவை. மருதுவின் அறிக்கையின் நோக்கம் அவரை நசுக்குபவர்களைக் கொடுங்கோலர்களாகவும் கூலிப்படைகளாகவும் உண்மையான வீரர்களின் அடிப்படைத் தன்மைகளான பரந்த மனமும் உயர்ந்த உள்ளமும் அற்றவர்களாகவும் சித்தரிப்பதுதான். கால்ககஸின் நோக்கமும் அதுவே.”
மருதுவின் அறிக்கை ஆங்கிலேயர்மீது அவர்கள் இந்தியாவில் ஆட்சி செலுத்தும் முறைமீது மக்களின் ஆழ்மனங்களில் இருப்பதை வெளிப்படையாகக் கூறுகிறது என்று குறிப்பிடும் ஆசிரியர், இந்த அறிக்கை ஆங்கிலேயரின் மிகக் கீழ்த்தரமான பழிவாங்கும் எண்ணத்தை உசுப்பிவிட்டது என்கிறார். அவர் எழுதியதை ஆங்கிலத்திலேயே தருகிறேன்:
Instantly, on receipt of this paper, sedition! Rebellion! was the cry; and the willing mandate was speedily prepared, which consigned the unhappy Mahradu and every male branch of his family to dishonourable grave.
ஆசிரியரின் கூற்றுப்படி எல்லா ஆண்களும் கல்லறைக்குச் சென்றனர் – சிறுவர்களும்கூட.
கோர்லே கூறுகிறார்:
“பாளையக்காரர்மீது போர் அறிவிக்கப்பட்டது. அவரது பாளையத்திற்குத் தீவைத்து அழிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரையும் அவரது குடும்பத்தில் இருந்த ஆண் மக்கள் அனைவரையும் கைதுசெய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.
பிடிபட்ட அனைவரையும் ராணுவக் குழு ஒன்றின் மேற் பார்வையில் விசாரணை ஏதும் இன்றித் தூக்கிலிட ஆணை தரப்பட்டது, நான் கூறுவது வாசகர்களுக்குச் சந்தேகத்தைத் தரலாம். ஆனால் இந்த ஆணைகள் சிறிதுகூட மாற்றமின்றி, காலதாமதமின்றி நிறைவேற்றப்பட்டன.”
மருதுவும் அவரைச் சார்ந்தவர்களும் ஓர் அங்குலம் பரப்பளவைக்கூட விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டனர்.
1801ஆம் ஆண்டு மத்தியில் விதியால் வெல்லப்பட்ட மருதுவும் அவரது குடும்பத்தினரும் சிறைபிடிக்கப்பட்டனர். இரண்டு அல்லது மூன்று பேர்களாக இராணுவ மன்றத்தின்முன் கொணரப்பட்டு உடனே தூக்கிலிடப்பட்டனர். இந்தத் தண்டனையை நிறைவேற்றிய இராணுவக் கேப்டன் தனது நிலைமையை நன்றாக உணர்ந்திருந்தார்.
தான் செய்வது இதுதான் என்று எழுத்து மூலம் மேலிடத்திற்குத் தெரிவித்து எழுத்து மூலம் அனுமதி பெற்ற பிறகே அவர் தனது கடமையைச் செய்தார் என்று கோர்லே சொல்கிறார்.
“எல்லோராலும் மதிக்கப்பட்ட தலைவனுடன், அவனுடைய வயதான அண்ணனும் அழைத்துவரப்பட்டார். “Dummy” என்று அழைக்கப்பட்ட அவர் பிறவியிலேயே ஊமை. (ஆசிரியர் ஊமைத்துரையைக் குறிப்பிடுகிறார். ஊமைத்துரை மருதுவின் உறவினர் அல்ல என்பது ஆசிரியருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை).* இவர்களுடன் மருதுவின் மகன்களும் பேரன்களும் – பத்துப் பன்னிரெண்டு வயதுச் சிறுவர்கள் – தூக்கிலிடப்பட்டனர்.
மருது ராணுவ மன்றத்திடம் தனக்குத் தயை ஏதும் காட்ட வேண்டாம் என்று சொன்னார். ‘நான் என் நாட்டைக் காப்பதற்காகச் சண்டையிட்டுத் தோற்கடிக்கப்பட்டேன். என்னுடைய உயிரைப் பறிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்.
நான் அது பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்தச் சிறுவர்கள்? இவர்கள் என்ன தவறுசெய்தனர்? இவர்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்களா? இவர்களைப் பாருங்கள், இவர்களால் ஆயுதம் எடுக்க முடியுமா?’
மருதுவின் இந்தக் கோரிக்கை, மூழ்கும் மாலுமி கடலிடம் முறையிட்டதைப் போலத்தான்!”
எனக்கு “கேட்டனையாயின் வேட்டது செய்ம்மே” என்று முடியும் புறநானூற்று வரிகள் நினைவிற்குவருகின்றன. கோவூர்க்கிழார் மலையமான் மக்களை யானை இடறுவதிலிருந்து காப்பதற்காகப் பாடிய பாடலின் வரிகள். ஆங்கிலேயர்கள் கிள்ளிவளவன் அல்லர். வேட்டதையே செய்தனர்.
கோர்லே கூறுகிறார்:
நான் இந்த நிகழ்வுகளை நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் இவை ஆயிரக்கணக்கான கம்பெனி துருப்புகளின் முன்னிலையில் நிகழ்ந்தவை. அரசரின் 74, 77, 94 ரெஜிமெண்டுகளின் முன்னால் நிகழ்ந்தவை.
நான் இந்த நிகழ்வுகளை உங்கள் முன் கொண்டுவந்ததற்காக எந்தப் பாராட்டையும் கேட்கவில்லை. நீதியின் துணைவராக இருக்கும் – இருந்த – இந்த நாட்டின் கைகளில் இவற்றை ஒப்படைக்க வேண்டிய கடமை எனக்குக் கொடுக்கப்பட்டது. அதை நான் நிறைவேற்றிவிட்டேன்.”
இந்தப் புத்தகத்திற்கு வரவேற்பு எப்படி இருந்தது?
கோர்லேயின் புத்தகத்திலேயே ஒரு வரி இருக்கிறது. “Everything again favours the French Emperor”. 1813ஆம் ஆண்டில் நெப்போலியன் ஐரோப்பா முழுவதையும் ஆண்டுகொண்டிருந்தார். ஆங்கில மக்களின் பார்வை முழுவதும் ஐரோப்பா மீதிருந்தது. நெப்போலியனுக்கு எதிராக அமைத்த கூட்டணி 1813ஆம் ஆண்டு ட்ரெஸ்டனில் நடந்த போரில் படுதோல்வி அடைந்தது.
கூட்டணி 40,000 பேரை இழந்தது. 1805ஆம் ஆண்டிலிருந்து 1815 வரை நடந்த போர்களில் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலைமையில் பத்து, பதினைந்து சிவகங்கைச் சீமைச் சிறுவர்களைப் பற்றி நினைக்க ஆங்கில அரசிற்கோ வாசகர்களுக்கோ நேரம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.
ஆனாலும் இந்தப் புத்தகத்திற்கு ஒரு மதிப்புரை வந்தது. லே ஹண்ட் (Leigh Hunt) என்னும் மிகப் புகழ் பெற்ற கட்டுரையாளர் இந்தப் புத்தகத்திற்குத் தன்னுடைய The Examiner என்னும் பத்திரிகையில் மதிப்புரை எழுதினார். ஹண்ட் தன்மானம் மிக்க பத்திரிகையாளர்.
கீட்ஸ், ஷெல்லி போன்ற கவிஞர்களின் நண்பர். மன்னர் மூன்றாம் ஜார்ஜின் மகன் (பின்னால் நான்காம் ஜார்ஜாகப் பதவி ஏற்றவர்) பற்றி எழுதிய கட்டுரை ஒன்றிற்காக (1813இல் எழுதிய கட்டுரை!) இரண்டு வருடம் சிறை சென்றவர்.
இந்த மதிப்புரையில் (மதிப்புரையின் சில முக்கியமான வரிகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கின்றன) அவர் கூறுவது இது: For if the story is true -which we cannot but doubt until better evidence be adduced -it is one of the most disgraceful and diabolical proceedings that have occurred in the present age.
இது உண்மைக் கதையாக இருந்தால் – உண்மையா என்பது தக்க சான்றுகள் வரும்வரை சந்தேகத்திற்கு உரியது – இது இக்காலத்தின் நடந்த மிக அவமானகரமான, பயங்கரமான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும்.
இந்த அழித்தொழிப்பு நிகழ்ந்ததற்கு வேறு சான்றுகள் இருக்கின்றனவா? நான் அறிந்த அளவில் இதைப் பற்றி எந்த வரலாற்று ஆசிரியரும் குறிப்பிட்டதில்லை என்று எண்ணுகிறேன். நான் அறிந்தது அதிகம் இல்லை. நான் வரலாற்று வல்லுநன் அல்ல.
இவரது கூற்று வெல்ஷ் எழுதியதற்கு மாறாக இருக்கிறது. மருது குடும்பத்தினர் அனைவரையும் அழித்தொழிக்க முடிவு எடுத்திருந்தால், துரைசாமி மட்டும் எவ்வாறு நாடு கடத்தப்பட்டார்? ஒருவேளை அவர் யார் என்பது அடையாளம் கண்டுகொள்ளப்படாததால் அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.
வெல்ஷ்கூட மேற்கூறியபடி துரைசாமியைத் தூத்துக்குடியில் மற்ற கைதிகளுக்கு மத்தியில் தான் பார்த்ததாகக் குறிப்பிடுகிறார். அவர் இளவரசர் என்பதே மற்றவர்களுக்குத் தெரியவில்லை.
கோர்லேயின் புத்தகத்தில் தகவற் பிழைகள் பல இருக்கின்றன. ஆனால் அதனால் மட்டும் அவர் கூறுவதில் உண்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது. மேலும் கேட்டதையே புத்தகமாக எழுதுவதாக அவரே குறிப்பிடுகிறார். அவருக்கு இந்தப் புத்தகத்தால் ஆதாயம் ஏதும் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை.
மாறாகத் தன்னுடைய பணத்தைச் செலவழித்துப் புத்தகத்தைப் பதிப்பித்திருக்கிறார். எனவே அவருக்குப் பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. நீதி கிடைக்க வேண்டும் என்ற உந்துதலால் எழுதப்பட்ட புத்தகம் அது என்பது அதைப் படித்தாலே தெரியும்
அழித்தொழிப்பு நடந்திருக்கக்கூடும் என்பதற்கு மறைமுகச் சான்று ஒன்று இருக்கிறது.
1841ஆம் ஆண்டு பிரித்தானிய பார்லிமெண்டின் மேலவை (The House of Lords) பிரிட்டிஷ் காலனிகளில் நடைமுறையில் இருக்கும் (இருந்த) அடிமை முறையைப் பற்றி ஓர் அறிக்கை கொண்டுவந்தது. அந்த அறிக்கையில் 1806ஆம் ஆண்டு Southern Court of Appeal திருச்சிராப் பள்ளி கொடுத்த இரண்டு தீர்ப்புகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது
சிவகங்கை ஜமீன்தார் இரண்டு விதவைகளுக்கு எதிராகத் தொடுத்த வழக்குகளை விசாரித்து முறையீட்டு மன்றம் வழங்கிய தீர்ப்புகள் அவை. சிவகங்கை ஜமீன்தார் உடையத் தேவர் என்று எண்ணுகிறேன். இவர் ஆங்கிலேயருடன் சேர்ந்துகொண்டு மருது சகோதரர்களுக்கு எதிராக இயங்கியதைப் பற்றி வெல்ஷ் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
ஜமீன்தார் பட்டம் விசுவாசத்திற்கு அளிக்கப்பட்ட பரிசு என்பதையும் அவர் சொல்கிறார். அவரது பட்ட மளிப்பு விழாவில், படைத் தளபதி கர்னல் அக்னியூவின் கால்களைக் கட்டிக்கொண்டு கண்ணீர்விட்டு நன்றி தெரிவித்ததையும் வெல்ஷ் குறிப்பிடத் தவறவில்லை.
இந்த விதவைகள் யார்?
முதல் விதவையின் பெயர் மீனம்மாள், சிவஞானம் என்பவரின் மனைவி; மருது சேர்வைக்காரரின் மருமகள். இரண்டாம் விதவையின் பெயர் வீராயி ஆத்தாள். மருது சேர்வைக்காரரின் மனைவி. இவர்கள் இருவருக்கும் சாதகமாக ஜில்லா கோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துத் தொடங்கப்பட்ட வழக்குகள் இவை.
1801இல் மீனம்மாள் தன்னுடைய நகைகளைத் தன் வேலைக்காரர் அழகு என்பவரிடம் கொடுத்துவைத்திருந்தார். அவரிடமிருந்து நகைகளைச் சிவகங்கை ஜமீன்தார் பறித்துக்கொண்டார். வீராயி ஆத்தாளின் கதை வேறு. அவர் ஒளித்துவைத்திருந்த நகைகளை ஜமீன்தார் கண்டுபிடித்துத் தனதாக்கிக்கொண்டார்.
நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 6,600 நட்சத்திரப் பகோடாக்கள் (1 நட்சத்திரப் பகோடா = சுமார் 4 கம்பெனி ரூபாய்கள் – இன்றைய விலையில் நகைகளின் பெருமானம் பல கோடி ரூபாய்கள் இருக்கும்). ஜமீன்தார் இந்த நகைகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று ஜில்லா நீதிமன்றத்தில் தீர்ப்பாகியிருந்தது. இந்தத் தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்து, முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்புகளின் சுருக்கம் இது:
அரசு அறிக்கை 6 ஜூன் 1801இன்படி மருது சேர்வைக்காரரும் அவரது குடும்பமும் நெல்குடி (சிவகங்கை ஜமீன்தார்) வம்சத்திற்கு அடிமைகள். அடிமைக்குச் சொத்து கிடையாது. அப்படி அடிமை ஏதாவது சொத்துச் சேர்க்க நேர்ந்தால் அந்தச் சொத்து அடிமையின் சொந்தக்காரரைச் சென்றடையும். மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகளாகப் பிறக்கவில்லை.
இருப்பினும் “ஸ்மிருதி சந்திரிகை”யின்படி அடிமைகளின் மனைவிகளும் அடிமைகளாகக் கருதப்படுவர். (1864க்கு முன்னால் நீதிமன்றங்களில் பண்டிதர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்து தர்ம சாத்திரங்கள் என்ன கூறுகின்றன என்பதை நீதிபதிகளுக்கு அவர்கள் தான் அறிவுறுத்தினர்.)
அதனால் மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகள். அவர்களுக்கு நகைகள் போன்ற சொத்துகளை வைத்துக்கொள்ளும் உரிமை கிடையாது. அவர்களது நகைகள் சிவகங்கை ஜமீன்தாருக்குச் சொந்தம்.
இந்தத் தீர்ப்புகள் பல கோணங்களிலிருந்து ஆராயப்பட வேண்டியவை என்பதில் ஐயம் இல்லை. ஆனால் நமக்கு இவற்றிலிருந்து ஒரு சான்று கிடைக்கிறது. இரண்டு விதவைகளுக்கும் ஆண் வாரிசுகள் ஏதும் இல்லை என்பது தீர்ப்பிலிருந்து தெரிகிறது.
ஆண் வாரிசுகள் இருந்திருந்தால் அவர்களைப் பற்றிப் பேசப்பட்டிருக்கும். மருதுவின் குலம் அழித்தொழிக்கப்பட்டது என்பதற்கு இந்தச் சான்று முக்கியமான ஒன்று என நான் எண்ணுகிறேன்.
தேடினால் பல சான்றுகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
மருதுவிற்கு நீதி கேட்க இருநூறு வருடங்களுக்கு முன்னால் ஓர் ஆங்கிலேயர் முன்வந்திருக்கிறார். தமிழர்கள் அனைவரும் அவருக்கு நன்றிசெலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
பிற்குறிப்பு: இந்தப் புத்தகங்களை எனக்குத் தேடித் தந்தது கூகிள். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பாட்லியன் நூலகமே நமது ஒரு சொடுக்கிற்குக் காத்திருக்கிறது.
மற்றொரு குறிப்பு: Gourlay என்னும் பெயர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பெயர். எனவே அவரை ஆங்கிலேயர் எனச் சொல்வதைவிட ஸ்காட்லாந்தியர் எனச் சொல்வதே சரியாக இருக்கும். இவர்களுக்கும் இங்கிலாந்தியருக்கும் எப்போதுமே உரசல்கள் இருந்திருக்கின்றன. Gourlay என்னும் பெயரை காவ்ர்லே என உச்சரிக்க வேண்டும் எனச் சிலர் சொல்கிறார்கள்.
நமக்கு கோர்லே என்பது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆசிரியர் கோர்லே பற்றி விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. Biographical Dictionary of Living Authors of Great Britain என்னும் புத்தகம் – 1816இல் வந்தது – இவரது பெயரைக் குறிப்பிடுகிறது. ஆனால் இந்தப் புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை.
* பெரிய மருதுவைப் பற்றியும் கோர்லே குறிப்பிடவில்லை,
கட்டுரையை எழுத உதவிய நூற்கள்:
1. Mahradu – An Indian Story of the Beginning of the Nineteenth Century – 1813 London
2. Military Reminiscences – James Welsh 1830 London
3. The Examiner 1813 Collection – Leigh Hunt
4. The Sessional Papers on Slavery Printed by the Order of the House of Lords – 1841, London
நன்றி : இந்த கட்டுரையை வழங்கிய ‘காலச்சுவடு’ இணையதளத்திற்கும் மற்றும் இந்த கட்டுரையை எழுதிய ஆசிரியர் ‘பி.ஏ. கிருஷ்ணன்’ அவர்களுக்கும் எங்களது நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்.

 

முக்குலத்து வீரன் அழகு முத்துக்கோன் சேர்வை

(இந்த பதிவு நீண்ட பெரிய பதிவாக இருக்கலாம்.ஆனால், இங்கே சொல்லப்பட்டு இருக்கிற அனைத்து கருத்
துகளும் மிக அரிய தகவல்கள்,அதனால்தான் எங்களால் எதையும் சுருக்கி பதிவேற்ற முடியவில்லை.காலம் கருதாமல் பொறுமையாக படித்து உணரவும் மறைக்கப்படும் வரலாற்று உண்மைகளை.
கோயில் = கோ+இல்; கோ – அரசு , இல் – இல்லம். அதுபோல, கோன் என்பது அரசன் என்ற பதத்தை குறிக்கும் சொல்.அழகு முத்து கோன் என்ற முக்குலத்து மாவீரனை கோனாராக்கி வேடிக்கை பார்ப்பதை உங்களுக்கு அறிய தரவே இந்த பதிவு. ) தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய முக்குலத்து மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை, அவனது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது.
அவனைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு அவனது ஆறு துணைத் தளபதிகளும் 248 வீரர்களும் நிறுத்தப்பட்டார்கள். எங்களை எதிர்ப்போர்க்கு இதுதான் கதி என்று கும்பினிப்படை எக்காளமிட்டபடி அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. `ம்’ என்றால் பீரங்கிகள் முழங்கும். வீரன் அழகு முத்துக்கோனும் அவனது வீரர்களும் உடல் சிதறிப் போவார்கள். அதைப் பொறுக்கமாட்டாமல்தான் அன்றைய நடுக்காட்டுச் சீமை பாளம்பாளமாய் வெடித்து சுட்டு எரித்துக்கொண்டிருந்தது.

“மன்னிப்புக் கேட்டால் இக்கணமே விடுதலை; வரி கொடுக்க சம்மதித்தால் உயிர் மிஞ்சும்” என்று கும்பினிப்படை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், “தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார் ” என்ற வீரன் அழகுமுத்துக் கோனின் கர்ஜனையைக் கேட்டு கும்பினிப்படை அதிர்ந்தது.
ஆத்திரம் கொண்டது.இருநூற்று நாற்பத்தெட்டு வீரர்களின் தோள்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும் வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில் வீரன் அழகுமுத்துக்கோனையும் நிறுத்தினார்கள். பீரங்கிகள் வெடித்துச் சிதறின. வீர மைந்தர்களின் ரத்தத்தால் நனைந்தது நடுக்காட்டுச் சீமை.இந்தியாவின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் பக்கத்தில் இடம்பிடித்துக் கொண்டார் வீரன் அழகுமுத்துக்கோன்.தாய்மண்ணை அடிமைப்படுத்த நினைத்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராக சுதந்திர முழக்கமிட்ட மற்றுமொரு வீரனைத்  தேவர் சமூகம் தந்தது என்பது மறுக்கவும், மறைக்கவும் முடியாத வரலாறு.
ஆனால், அப்படிப்பட்ட முக்குலத்தை சேர்ந்த மாவீரனை வேறு யாரெல்லாமோ இன்று உரிமை கொண்டாடுவதை எண்ணி, உண்மையை உலகறிய செய்ய வெளிவந்த நூலை இங்கே தேவர் முக்குலத்தோர் தளத்தின் மூலமாக அறிய தருகிறோம்.படித்து தெளிவுறுக.
வீரன் அழகுமுத்து சேர்வை

நூல்             :  மறவர் குல மன்னன் வீரன் அழகுமுத்து சேர்வை
ஆசிரியர்    :  சேவாரத்னா நெல்லை மா. சேதுராமபாண்டியன்
வெளியீடு  :  அகில இந்திய தேவர் முன்னேற்றக் கழகம்,
44-A, மேல ரத வீதி, சி.என்.கிராம,
திருநெல்வேலி – 627 001
நுழைவாயில்:
எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமே அல்லாது வேறொன்றும் அறியேன் பராபரமே.
அன்புடையீர்! வணக்கம்! நலம் வாழ்க! ஒரு பொருளை உரிமை கொண்டாடும் பொது, அது தனக்கு உரியது தான் என்பதற்கான சான்று அல்லது சாட்சி அல்லது மனசாட்சி வேண்டும். தனக்கு பொருள் ஏதும் இல்லை என்பதற்காக இன்னொருவர் வைத்திருக்கும் பல பொருள்களில் ஒன்றை தெரிந்தோ, தெரியாமலோ எடுத்து வைத்துக் கொண்டு அதற்கு சொந்தம் கொண்டாடுவது, எந்த வகையில் நியாயம்? எந்த வகையிலும் சொந்தம் கொண்டாடத் தகுதி இல்லாத போது, தவறாக சொந்தங் கொண்டாடி போலி பெருமை தேடுவது, சொந்தம் கொண்டாடுவோரின் தன்மானத்தின் மீது சந்தேகம் உருவாக வழி வகுக்காதா? இந்த சிந்தனையோடு, எழுதப்பட்டது தான் “வீரன் அழகுமுத்து சேர்வை மறவர் குல மன்னன்” என்ற இந்தச் சிறு நூலாகும்.
மற்றவர் பெருமையை அபகரித்து, போலி பெருமை தேடும் அளவுக்கு எங்கள்(முக்குலத்தோர்) சமூகம் இல்லை. ஏனெனில் எங்களுக்குள்ள வரலாற்றுப் பெருமைகள் வேறு எவருக்கும் இல்லை என்பது உலகறிந்த உண்மை. அதற்காக எங்கள் பெருமைகளில் ஒன்று திருடப்பட்டால் நமக்குத்தான் வேறு பல பெருமைகள் உள்ளனவே, இது ஒன்று போனால் போகட்டும் என்று விட்டு விட முடியாது. கூடாது. விட்டு விடுவது அல்லது விட்டுக் கொடுப்பது எங்களுக்குப் பெருமை தாராது. எங்கள் புகழ் அனைத்தையும் பேணிக்காக்கும் கடமையும், உரிமையும் எங்களுக்கு உண்டு.
இந்த நல்லெண்ணத்துடன் தான், மாவீரன் அழகுமுத்து சேர்வையை, அழகுமுத்து கோனாராக்கிப் பெருமைப் படுத்துவது சரியல்ல என்பதை எடுத்துக் கூறத்தான் இப்படைப்பு.நூலை மிக அடக்கத்துடன் எழுதியுள்ளேன்(ஆசிரியர்). எங்கள் வரலாற்றில் திரிபு திணிக்கப்படுவதை வரலாற்றுக்கு சொந்தக்காரர்களாகிய நாங்கள் வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல என்பது பொதுவான கருத்தாகும்.
வீரன் அழகுமுத்து சேர்வை என்ற பெயருடைய எங்கள் வீட்டில் பிறந்த வீரமகனை யாவரும் மரியாதையுடன் உறவாடலாம்! ஆனால் களவாடக் கூடாதல்லவா! களவாடுவதை தடுப்பது, அந்த வீரப் பிள்ளை பிறந்த தேவர்குலத்தாரின் தார்மீகக் கடமை அல்லவா! அந்தக் கடமையை இந்த சிறுநூல் மூலம் ஓரளவு செய்துள்ளதாக நம்புகிறேன்.
இதனை நடுநிலைமையுடன் சிந்திப்பவர்கள் அனைவரும், வீரன் அழகுமுத்து சேர்வை தேவர்குலத்து சிங்கம் என்பதை ஒப்புக் கொள்வார்கள்! வீரன் அழகுமுத்துக் கோன்(அரசன்) கோனார் அல்ல என்பதை புரிந்து அவருக்கு ரத்த வழி சொந்தம் கொண்டாட எங்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்பதை ஒப்புக் கொள்வதுதான், அவர்கள் தங்கள் மனசாட்சியை மதிப்பதற்கு அழகாகும். போலிப் பெருமைக்கு தங்களை ஆளாக்கிக் கொண்டிருப்பவர்களில் பலருக்கு மாவீரன் அழகுமுத்து தேவர் குலத்தவர் என்பது தெரியும். ஆனாலும் இயன்றமட்டும் சாதித்துப் பார்ப்போம் என்ற உள்ளுணர்வுடன் செயல்படுகிறார்கள். வீண் முயற்சியில் அவர்கள் இன்னமும் ஈடுபடுவது, அவர்களுக்கு நல்லது அல்ல.
நான் எல்லோரையும் மதிப்பவன்(ஆசிரியர்). மனித நேயத்துடன் பழகுபவன். ஆனால் எங்கள் உரிமையிலோ, பெருமையிலோ வீணாகக் குறுக்கிடுவோரை எண்ணி வருத்துப்படுகிறவன். எங்களது விலை மதிப்பற்ற பொருளை கவர்ந்து கொண்டதாக எண்ணி, உள்ளுக்குள் மகிழ்ச்சி கொள்ளாதீர்கள். அது நீடிக்காது. இந்தச் சிறுநூல் ஒரு மாவீரன் பிறந்த குலத்தின் பெருமையை பாதுகாக்கப் புறப்பட்ட படைக்கலன்களில் ஒன்று தான். நான் சமூக நல்லிணக்கத்தை உருவாக்கிட உழைப்பவன். யாரையும் புண்படுத்திடக்கூடாது; மனித நேயமே அமைதிக்கும், நல்வாழ்வுக்கும் துணை புரியும் என்ற நம்பிக்கை கொண்டவன். இந்த மனநிலையில் இருந்துதான் இச்சிறு நூலை, உண்மையை வெளிச்சமிட்டுக் காட்டிடும் வரலாற்று உணர்வுடன் எழுதினேன்.
எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் – மக்கள்
தனை ஈன்ற தமிழ்நாடு தனக்கும் – என்னால்
திணை அளவு நலமேனும் கிடைக்குமாயின், நான்
செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாகும்.
உன்னை ஒன்று வேண்டுகிறேன் – என்னால்
ஆவதொன்று உண்டாயின் அதற்கெந்தன்
உயிர் உண்டு!
(- பாவேந்தர் பாரதிதாசன்.)
அன்புள்ள சேவாரத்னா நெல்லை மா. சேதுராமபாண்டியன்.
வரலாறைத் தேடி

வரப் புயர நீர் உயரும்!
நீர் உயர நெல் உயரும்!
நெல் உயர கோன் உயரும்!
கோன் உயரக் குடி உயரும்! – அவ்வையார்.
இந்த வாழ்த்துப் பாடலில் “கோன்” என்ற சொல், அரசன், மன்னன் என்ற பொருளைக் கொண்டதாகும்! அவ்வையார் ஒரு மன்னனை வரப்புயர வாழ்க என்று வாழ்த்தினார். அதன் விரிந்த பொருளை பாடிக்காட்டினார். அது தான் மேற்கண்ட பாடல்.இந்தப் பாடலில் இடம் பெற்ற கோன் என்ற சொல்லை வைத்துக் கொண்டு எங்கள் சமுதாயத்தை தான் அவ்வையார் கோனார் என்று குறிப்பிட்டுள்ளார் என்று எவரும் கூறிடார்! வாதிடார்!
கோன்” என்ற சொல்லை கோனார் என்று நினைத்துக் கொண்டு, மாவீரன் அழகுமுத்துக் கோன் (அரசன்) என்ற அழகுமுத்து சேர்வையை தனது சமூகத்தைச் சேர்ந்தவர் என்று சொந்தம் கொண்டாடுவது வேடிக்கையானது.சேர்வைக்காரன் அல்லது சேர்வை என்ற சொல், சேர்த்து வைத்தவன் அல்லது சேர்ந்திருப்போர்க்குத் தலைவன் என்ற பொருளைக் குறிக்கும் சொல்லாகும்.
முக்குலத்தோர் என்று அழைக்கப்படும் கள்ளர், மறவர், அகம்படியர் என்ற முக்கிய 3 பிரிவுகளும் தேவர் என்ற ஒரு சமுதாயத்திற்குள் உள்ள உட்பிரிவுகளாகும்.இந்த முக்கிய 3 பிரிவுகளுக்குள்ளே சேர்வை, அம்பலம், தொண்டைமான், வாண்டையார் உள்ளிட்ட 34 கிளைப் பிரிவினர் உள்ளனர்.
அனைவரும் மறவர். நெல்லை மாவட்ட முன்னாள் ஆட்சித் தலைவர் பாஸ்கரத் தொண்டைமான் ஐ.ஏ.எஸ்., அவர்கள் “மறவர் சரித்திரம்” என்ற ஆய்வு நூலை விரிவாக எழுதி வெளியிட்டார். அதன் விளக்கம் காணலாம். சேர்வை என்ற பிரிவில்தான், மாவீரர்களான சிவகங்கை மன்னர்கள் – மருதுபாண்டியர்கள் வருகிறார்கள். அந்த மாமன்னர்களின் மானமிகு வீரமிகு தியாகத்தால் மேலும் பெருமை பெற்றது தேவர் சமுதாயம்.
வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது!
வேலும் வாழும் தங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது!
எக்குலத் தோரும் ஏற்றிப்புகழ்வது எங்கள் பெருமையடா!
எம் முக்குலத்தோர்க்கே உலகில் உவமை காண்பது அருமையடா!
- என்று முகவை மண்ணின் மைந்தன் கவியரசு கண்ணதாசன் ‘சிவகங்கை சீமை’ திரைப்படத்தில் மருதுபாண்டியர்களை மனதில் நிறுத்தி எழுதிய பாடல் வரிகள் இவை. தேவர் இன வரலாற்றை சங்க இலக்கியங்களை ஆய்வு செய்தும், தமிழக கிராமங்களில் ஆய்வு செய்தும் எழுதி, எக்காலமும் போற்றப்படும் எழில்மிக்க ஏற்றமிக்க நூலாக வெளியிடுமாறு, முனைவர் நாவுக்கரசு கா.காளிமுத்து அவர்களை கேட்டு, 29.06.2003ல் மதுரையில் நடந்த அகில இந்திய தேவர் முன்னேற்றக் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். காரணம், தேவர் சமுதாய மன்னர்களை, மாவீரர்களை, மாபெரும் தியாகிகளை, வேறு சமுதாயத்தினர் சொந்தம் கொண்டாடி, வரலாற்றுப் பிழை செய்ய முற்படுகின்றனர்.
தேவர் சமுதாயத்திற்கே உரிய பாண்டியர் என்ற சீர்மிகு அடைமொழியை யார் யாரெல்லாம் தங்கள் பெயருக்கு பின்னால் சேர்த்துப் போலி பெருமை தேடுகிறார்கள்! வரிப்புலியை போல் உடலில் சூடு பதித்துக் கொள்கிற காட்டுப் பூனைகளை வரிப்புலிகள் என்று வரலாறு அறிந்தோர் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். தேவர் வீட்டில் ஆண் மகவு பிறந்தால் “என்ன பாண்டியன் பிறந்திருக்கிறாராமே” என்றும், பெண் மகவு பிறந்தால் “என்ன நாச்சியார் பிறந்துள்ளாரா? நல்லா இருக்கிறாரா?”
என்றும் விசாரிக்கும் வழக்கம் இன்றளவும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் வழங்கி வருகிறது. ஆகவே, பிறவிப் பாண்டியர்களாக தேவர் இனம் பண்டைப் புகழ் தாங்கி விளங்குவதை காழ்ப்புணர்வுகளால் பொறுக்க இயலாமல் போவது இயல்புதான். சிலர் நன்றிக்காக தனது பெயரோடு அல்லது தங்கள் மகன்கள் பெயரோடு பாண்டியன் என்ற சாதிப் பெருமைக் குறியை சேர்த்து வைத்துக் கொள்வதையும் காணலாம். இறைவனுக்கு நிகராக ஆம்! அந்த தேவாதி தேவனுக்கு நிகராக விளங்கி நாட்டை ஆண்டவர்கள் தேவர் எனப்பட்டனர். அவர்கள் வீரமிகுந்தவர்களாக விளங்கி, போரிட்டு நாட்டைக் காத்தமையால் மறவர் ஆயினர். விவேகத்துடன் சங்கம் வைத்துத் தமிழ் வளர்க்கும் அளவுக்கு அவர்கள் பாண்டித்துவம் பெற்றிருந்ததால், அவர்கள் பாண்டியர் எனப் போற்றப்பட்டனர்.
தேவர், மறவன், பாண்டியன் என்று 3 சொற்களால் குறிப்பிடப்படுபவர்களும் தேவர் சமுதாயத்தினர் தான். இவையும் செய்த தொழிலை வைத்து வைக்கப்பட்ட பெயர்கள் தான் என்பதை நாங்கள் மறைப்பதற்கு இல்லை. பொதுவாக சாதிப் பெயர்கள் பலவும் அவர்கள் செய்த தொழிலை குறிக்கும்படியாக குறிக்கப்பட்டது.
செப்பேடு:

“எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பதறிவு”
என்ற வான்புகழ் வள்ளுவனின் தேமதுர அறிவுரையே இந்தக் குறள்பா. யார் என்ன சொன்னாலும், அதன் உண்மைப் பொருளை உணர்வது தான் அறிவு. ஆனால் அதற்கேற்ற மூளைப் பலம், ஆய்வுத் திறன், நடுநிலை சிந்தனை, பொறுமை, நிதானம், சாதிமத உணர்ச்சி வசப்படாமை தேவை.
இவை இல்லாதார்தான் எடுப்பார் கைப்பிள்ளைகளாக மாறி, உண்மை எது எனத் தெரியாமல் நுனிப்புல் மேய்ந்து, நுண்ணறிவை பயன்படுத்தாமல் சுயநலவாதிகளின் சூழ்ச்சி வலையில் விழுந்து வீண் வம்புகளை விதைக்க துணை நிற்கின்றனர். வீரன் அழகுமுத்து சேர்வைக்காரனை அவனது வீரம், ஆளுமைத் திறன் எண்ணி “கோன்” அதாவது மன்னன் என்ற அடைமொழி கூட்டி அழகுமுத்துக் கோன் என்று வழங்கினர். அழகுமுத்து பிறப்பால் சேர்வை (மறவர்) சிறப்பால் கோன்(அரசன், மன்னன்,ராஜா).
வீரன் அழகுமுத்து சேர்வையின் வாரிசுகள் சிலர் ,கட்டாலங்குளத்தில் தற்போதும் வாழ்கிறார்கள். சிலர், பிழைப்பு-தொழில் நாடி வேறு ஊர்களுக்கு சென்று வாழ்கின்றனர்.பத்திரங்கள் நடைமுறைக்கு வராத காலத்தில், தாள் உருவாகாத நிலையில் பத்திரங்களை செப்புத் தகடுகளில் எழுதிக் கொடுப்பது வழக்கமாக இருந்துள்ளது. வரலாற்றுக் குறிப்புகளை கற்களில் பொரித்து வைத்தனர்.
சிலைகள் வடிவில் செதுக்கி வைத்தனர்.செப்புத் தகடுகளில் எழுதித் தரப்பட்டவை பட்டயம் என வழங்கப்படுகிறது. வீரன் அழகுமுத்து சேர்வைக்காரனுக்கு, காசி கோத்திரம் விஸ்வநாத நாயக்கரவர்கள் புத்திரன் பெரிய வீரப்ப நாயக்கன் அவர்கள் கிருஷ்ணா கோத்திரம் கோபால வம்சம் அழகுமுத்து சேர்வைக்காரன் புத்திரன் அழகுமுத்து சேர்வைக்காரனுக்கு எழுதிக் கொடுத்த செப்புப் பட்டயத்தின் ஒரு பகுதி நகல் இங்கே அப்படியே தரப்பட்டுள்ளது.

செப்புப்பட்டயம்:



மேற்கண்ட செப்புப்பட்டயத்தில் எழுதப்பட்டிருப்பதவாது:
இன்னான் கொல்கைக் குட்பட்ட நிலமும் மாத்தானம்பட்டி கிழக்கு மால் வைப்பாற்று எல்கைக்கு மேற்கு, தேற்குமால் குளத்தூர் எல்கைக்கு வடக்கு மேற்கு மால் செங்கப்படை எல்கைக்கு கிழக்கு, வடக்குமால் மந்திக்குலம் எல்கைக்கும் பெருமாள் கோவிலுக்கும் தெற்கு, இந்த நான்கு எல்கைக் குள்பட்ட நிலமும், இதில் கட்டாலங்குளம் சோழபுரம் வாலனம்பட்டி மாக்காலம்பட்டி ஆகக் கிராமம் நாளும் தனக்கு அமரமாகவும் தீத்தான்பட்டி குருவி நத்தம் கிராமம் இரண்டும் அழகப்பன் சேர்வைக்காரன் பாட்டாத்தார்க்கு தந்த மானியமாகவும் விட்டுக் குடுத்த படியினாலே ஆகக் கிராமம் ஆறு மதில்சேர்ந்த பட்டியும் இதிலுள்ள நஞ்சை புஞ்சை நிகி நிட்சேபமும் சிவதரு பாசானம் அச்சானிய ஆகாமியம் சித்த சாத்தியம் களெங்கிர அட்ட யோகா தேசாக்காரியங்களும் உன்னுடைய புத்திர பவுதிய பாரம்பரியமாக நயந்திரார்க்கு மாகக் தனாதி வினியவிக்கிரம யோக்கியமாகவும் ஆண்டனுபவித்துக் கொண்டு சுகமயிருக்கவும் இந்தப் படிக்குக் காசிப கோத்திரம் விசுவநாத நாயக்கரவர்கள் புத்திரன் கிருஷ்ணப்ப நாயக்கரவர்கள் புத்திரன் பெரிய வீரப்ப நாயக்கரவர்கள் கிருஷ்டினக் கோத்திரம் கோபால வம்சம் அழகுமுத்து சேர்வைக்காரனுக்கு எழுதிக் கொடுத்த பட்டையம் உ.மீனாட்சியம்மாள் துணை. இதிலுருந்து அழகுமுத்து சேர்வைக்காரன் மகன் அழகுமுத்து சேர்வைக்காரன் என்பது விளங்கும். அதாவது, அழகுமுத்து செர்வைக்காரனின் தந்தையார் பெயரும் அழகுமுத்து சேர்வைக்காரன் என்பது தெரிகிறது. வீரன் அழகுமுத்து சேர்வைக்காரன் என்பதில் மட்டுமல்ல அவனது தந்தையின் பெயரில் கோனார் என்ற சாதிச் சொல் இடம் பெறவில்லை என்பதை சற்று ஊன்றிக் கவனித்தால் புரியும்.
இப்போது திரைப்படத் துறையில் கிராமிய இசையால் புகழ் பெற்று வருகிறவர் பரவை முனியம்மாள். “தூள்” படத்தின் மூலம் வெளி உலகுக்கு அறிமுகமாகி இப்போது “என புருஷன்”, “எதிர் வீட்டுக்காரன்” உள்ளிட்ட பல படங்களில் பாடி நடித்து வருவதோடு, சின்னத்திரையிலும் மின்னி வருகிறார் இவர்.
இவரது தந்தை வாடிப்பட்டி பக்கம் உள்ள செல்வகுலம் பெருமாள்பட்டியை சேர்ந்த கருப்பயா சேர்வை என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் படுகொலை செய்யப்பட்டாரே தா.கிருட்டிணன் இவரும் சேர்வை. சேர்வைக்காரன் என்ற சொல், சேர்வை சாதியில் பிரபலமானவரைக் குறிக்கும் சொல்லாகும். மேற்கண்ட பட்டயத்தில் இடம்பெற்றுள்ள கோபால வம்சம், கிருஷ்ண கோத்திரம் என்ற சொற்களைப் பற்றிக்கொண்டு தான், வீரன் அழகுமுத்து சேர்வையை கோனார் என்று கூறி சாதிசாயம் பூசி சிலை எடுத்தார்கள், விழா நடத்தினார்கள்.கோபால வம்சம் என்பது பிராமணர்களின் ஒரு பிரிவினரையும், வேறு மேல்சாதியரில் சில பிரிவுகளையும் குறிப்பிடும் சொல்லாக உள்ளது.
கோபாலன் என்ற பெருமாளை-நாராயணனை தலைமுறை தலைமுறையாக வழிபாடும் சமூகத்தின் சில பிரிவினர் கோபாலவம்சமாகத் தங்களை கூறி வருவது எல்லோரும் அறிந்ததே. கிருஷ்ண கோத்திரம் என்பது, கிருஷ்ணனாகிய கோபாலனை குல தெய்வமாக நீண்ட காலமாக வழிபடுவோரை குறிக்கும் சொல்லாக உள்ளது. இவ்வாறு வழிபடுவோர் விபூதியை நெற்றியின் மேல் நோக்கி நாமம் போல் பூசுகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள தேவர் சமூகத்தினர் நாராயணனை குல தெய்வமாக வழிபடுகின்றனர். இவர்கள் எல்லாம் தங்களை “கிருஷ்ணகோத்திரம்” என்று கூறிகிறார்கள். குலம் என்பது சாதியை குறிக்கிறது. முக்குலத்தோர், கோனார் குலத்தோர், பிராமணகுலத்தோர் என, என்ன சதியோ அந்த சாதியை ஒருங்கிணைத்துக் கூறும் சொல் ‘குலம்’ என்பதாக உள்ளது.
அனைத்து தமிழ் நாட்டையும் சேர்த்துக் குறிப்பிடும் போது ‘தமிழ்க்குலம்’ என்கிறோம். ஆகவே, கோபால வம்சம், கிருஷ்ண கோத்திரம் என்பது பரம்பரை வழிபாடு முறையை வைத்து பல சமூகத்தார்களின் உட்பிரிவினர் பலரை குறிக்கும் சொல்லாகும்.
சாதிகளில் நடுசாதியாகிய கோனார் என்ற இடையர் குலம் விளங்குகிறது. நெல்லை மாவட்டத்திலுள்ள கிராமங்கள் பலவற்றிலும் மறவனும்-இடையனும் ஒன்று. கொண்டை வைத்தவன் ‘மறவன்’. ‘கோ” வைத்தவன் இடையன் என்று கூறுவது வழக்கு மொழியாக உள்ளது. இதிலிருந்து கோபாலவம்சம் கிருஷன் கோத்திரம் என்பது பல சாதிப் பிரிவுகள் பயன்படுத்தும் சொற்களே தவிர குறிப்பிட்ட ஒரு சாதியை அடையாளம் காட்டும் சொற்கள் அல்ல என்பது தெளிவாகிறது.அதுமட்டுமல்ல, இதே பட்டயத்தில் ‘காசிப கோத்திரம் விஸ்வநாத நாயக்கர் அவர்கள் புத்திரன் கிருஷ்ணப்ப நாயக்கர் அவர்கள் புத்திரன் வீரப்ப நாயக்கர் அவர்கள்’ என்ற வாக்கியமும் இடம் பெற்றுள்ளது.
காசிப கோத்திரம் என்றால், காசி விஸ்வநாதக் கடவுளாகிய சிவபெருமானை வழிபாடும் வழக்கம் கொண்டவர் என்பது பொருள். நாயக்கர்கள் எல்லாம் காசிப கோத்திரம் அல்லர். வீரபாண்டிய கட்டபொம்மன் ஜக்கம்மாள் என்ற பராசக்தியை வழிபட்டு வந்த சக்தி கோத்திரத்தை சார்ந்த நாயக்கர்.
ஆகவே காசிப கோத்திரம் காசி விஸ்வநாதக் கடவுளைக் குலதெய்வமாக பரம்பரையாக வழிபாடும் குலத்தாரை அல்லது குலத்தின் உட்பிரிவாளரைக் குறிக்கும் என்பதையும் தெளிதல் நன்று. பொதுவில் தனது சாதிக்குக் ஒரு அடையாளம் தேவையென விரும்புவது, ஆசைப்படுவது சாதியத்தை வளர்த்து அதன் மூலம் சுயலாபவேட்டையில் ஈடுபடுவோரின் செயலாக மாறியது ஏன்? ஓட்டுக்காகப் பூசப்படும் போலிப் பூச்சுக்களும், பொய் விளம்பரங்களும் அடிப்படையை தகர்க்க முடியுமா? நீருக்குள் விடும் காற்று வெளியே வந்து தானே தீரும்!
இந்த சுதந்திரப் போருக்கு முதல் முழக்கமிட்ட மான மறவன் – மாவீரன் மன்னன் பூலித்தேவனுக்கு நெற்கட்டான் செவ்வல், வாசுதேவ நல்லூர், ராஜபாளையம் ஆகிய 3 இடங்களில் கோட்டைகள் இருந்தன! அவனது படை வரிசைகள் பல. அவற்றுக்குத் தளபதிகள் பலர். அவர்களுள் ஒருவன் ஒண்டி வீரன். இவன் பகடை சமுதாயத்தைச் சேர்ந்தவன்! துப்புரவுத் தொழிலார்கள் தங்கள் குலத்தின் அடையாளமாக ஒண்டி வீரனை எண்ணிப் போற்றி புகழ்வதில் பொருள் உண்டு! நியாயம் உள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனின் தலைமகனாக தலைமைத் தளபதியாக விளங்கி, போர்க்களத்தில் வெள்ளையரின் துப்பாக்கி குண்டுக்கு மார்புகாட்டி மடிந்த மாவீரன் பகதூர் வெள்ளையத்தேவன்.
அவனுக்கு அடுத்த நிலையில் இருந்த தளபதிகளில் வீரன் சுந்தரலிங்கம் ஒருவன். அவன் தாழ்த்தப்பட்ட சமூத்தின் அடையாள புருஷனாக போற்றப்படுவதில் பொருள் உண்டு. நியாயம் உள்ளது. ஆனால் மன்னர் பாஸ்கர சேதுபதியையோ, வீரமங்கை வேலுநாச்சியாரையோ, மாமன்னர் பூலித்தேவனையோ, கட்டாலங்குளம் அழகுமுத்து சேர்வைக்காரனையோ தேவர் குலத்தில் இருந்து, ஆம் வீரமறவர் குலத்தில் இருந்து பிரித்துக் கொண்டு போய் யாரும் சொந்தம் கொண்டாட நினைப்பது அல்லது சொந்தங் கொண்டாடுவது வரலாற்றை பிழை படுத்துவதாக அமையாதா? அன்றைய கால கட்டத்தில் ஆளும் பொறுப்பில் பரவலாக தேவர்களும் இருந்ததற்கு, மனித லட்சன ஆராய்ச்சி அறிஞர்கள் செய்து வைத்த கபடமற்ற ஏற்பாடே காரணம்.
இன்ன லட்சணம் உடையவன் இன்ன தொழிலையே செய்வதற்கு ஏற்றவன் என ஆய்ந்தறிந்து தொழில் ரீதியில் சாதி பிரிவு ஏற்படுத்தப்பட்ட போது, மறவர் குலம் என்ற பாண்டியர் குலம் ஆட்சிப் பொறுப்புக்கு – காவல் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டது. அதன் படியே ஆட்சி அமைப்புகள், காவல் அமைப்புகள் உருவாயின. மறவர் குலத்தில் 34 பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் சேர்வை. இந்த சேர்வை குலத்தவன் தான் கட்டாலங்குளம் ஜாமீன் அழகுமுத்து சேர்வைக்காரன் என்பதை உறுதிப்படுத்த எத்தனையோ சான்றுகள் உள்ளன.
அவற்றில் ஒன்று நாயக்க மன்னர் அழகுமுத்து சேர்வைக்காரனுக்கு பட்டியம் எழுதிக் கொடுத்ததைக் குறிப்பிடும் பழங்கால கல்வெட்டு ஒன்று. இது பாண்டிய மன்னர் வைத்த கல்வெட்டாகும். இந்தக் கல்வெட்டிலும் சேர்வை என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும் சரியான சான்று. இதோ அந்தக் கல்வெட்டு.
ஆவணங்கள் இன்றியமையாதன என்பதை நாம் அறிவோம். ஆனால் அது பற்றி நாம் அடிக்கடி சிந்திப்பதில்லை. ஆவணங்கள் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இடம் பெறுகின்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இரயிலிலோ, பேருந்துகளிலோ, விமானத்திலோ பயணம் செய்யும் ஒரு நபர் அந்தப் பயணத்தை அவர் தொடர்ந்து நீடிக்கவும், தாம் போய்ச் சேரவேண்டிய இடத்தை அடையவும், அவரால் பெறப்பட்ட பயணச்சீட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.
வழக்குகளும் ஆவணங்களும்:

நீதி மன்றங்களில் வழக்குகள் உருவாகின்றன என்றால், அவைகளுக்கு போது மக்களோ அல்லது அதிகாரிகளோ காரணமாவர். அவர்கள் தொடுக்கும் வழக்குகளுக்கும், போலிஸ் தொடரும் பொதுநலம் சார்ந்த வழக்குகளுக்கும் அடிப்படை தேவை ஆவணங்களே. பல்வேறு வழக்குளுக்கு முதல் தகவல் அறிக்கை (FIR) என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிவோம். அதுவே வழக்கின் அடிப்படை ஆவணமாகிறது. சில வழக்குகள் தொடர ஆவணங்கள் கிடைக்காமல், நீதியை பெறமுடியாமல் வழக்கறிஞர்களும், பொதுமக்களும், ஏன் நீதிபதிகளும் ஆதங்கப்படும் நிலைகளும் உண்டு.
ஒரு சில நேரங்களில் நீதிபதிகள் அதிர்ச்சி அடையும் வகையில் முக்கிய வழக்குகளில் திடீரென ஆவணங்கள் கிடைத்து, வழக்கின் உச்சகட்டத்தை ஏற்படுத்துகின்றன அல்லது யாராவது ஒருவர் வந்து தன்னிடம் ஆதாரம் இருப்பதாக கூறி ஆவணங்கள் சிலவற்றை நேரிலோ, வழக்கறிஞர்கள் மூலமாகவோ அளித்து வழக்கை திசை திருப்பி எல்லோரையும் பிரமிக்கச் செய்து விடுவதும் உண்டு.
சில நேரங்களில் நீதிபதிகளுக்கு அஞ்சலில் ஒரு தகவல் வந்ததாக தெரிவித்து, அதை ஒரு ஆவணமாகக் கருதி அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு அதன் மூலம் தீர்ப்புகள் உருவாவதும் உண்டு. இப்படி உருவாகும் பல்வேறு நீதிமன்ற ஆவணங்கள் அந்தந்த கால கட்டங்களில் உள்ள மக்களின் சமூக வாழ்க்கையினை பிரதிபலிக்கின்றன.
ஆவணங்களில் இந்திய கலாசார அடிப்படைகள்:
இந்தியக் கலாச்சாரத் தொன்மை பற்றிய ஆய்வுகள் யாவும் இன்னும் நடந்து கொண்டே இருக்கின்றன. அதற்கான ஆவணங்கள்/தகவல்கள் யாவும் புதை பொருட்களிலிருந்தும், கல்வெட்டுக்களிலிருந்தும், பழங்கால குகை ஓவியங்கள், நாணயங்கள் போன்றவற்றிலிருந்தும் ஆதாரங்களைச் சேகரித்த வண்ணமாகவே இருக்கிறோம். இது முடிவடையாத ஒன்று.
வீரன் அழகுமுத்து ‘சேர்வை’ (மறவர்) குலத்தவன் என்பதற்கு மேலே கண்ட பட்டய நகலும், கல்வெட்டு நகலும் வரலாற்று ஆவணங்கள்-அடிப்படை ஆதாரங்கள் அல்லவே? இன்னமுள்ள ஆதாரங்களை அடுத்து பார்ப்போம். சூடேற்றிக் கொள்வோம்:


அத்தோடு நமது குலகொழுந்தை சொந்தம் கொண்டாட வருவோரை வரவேற்போம். வீரர்களையும் தியாகிகளையும், யார் போற்றினாலும், துதித்தாலும் நாமும் அவர்களோடு இணைந்து செயல்படுவோம். ஆனால், நமது உறவை தனது உறவாக்க விபரம் தெரியாமல் யார் முற்பட்டாலும் அவருக்கு புரிய வைத்திடவும், நமது உறவை பாதுகாத்திடவும் நமக்கு உரிமை உண்டு. ஆகவே தான் இந்த சிறுநூல் உருவானது.
சங்கரதாஸ் சுவாமிகள நாடகக்கலையின் தந்தை என போற்றப்படுகிறார். அவர் மறவர் இனத்தின் ஒப்பற்ற கலை மைந்தர் ஆவார். அவரது பெயரில் ‘தாஸ்’ இருப்பதால் அவரை கோனார் என்று எண்ணி சொந்தம் கொண்டாட யாரும் முற்பட்டு விடக்கூடாது என்பது நமது கவலை. தியாகி விஸ்வநாத தாஸ் அவர்கள் நாவிதர் (மருத்துவர்) குலத்தை சேர்ந்த மாமனிதர்.
அவருடைய பெயரில் தாஸ் இருப்பதால் அவரையும் எதிகாலத்தில் கோனார் என்று கூறி யாரும் சொந்தம் கொண்டாட வந்துவிடக் கூடாது என்பதும் நமது கவலை. ஆனால் அப்படி நடக்காது என்று நம்புகிறோம். நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே வன்னிக்கோனேந்தல் என்ற கிராமம் உள்ளது.
அதாவது வன்னிக்கோன் ஏந்தல் என்பது அந்த ஊரின் பெயர். அந்தப் பகுதியை ஆண்ட மன்னனின் பெயர் வன்மையன். வன்மையன் என்றால் வன்மை மிக்கவன் என்பது பொருள். மன்னன் என்றால் கோன் என்பது பொருள். ஆகவே மன்னன் வன்மையன், வன்மையக்கொன் என்று அழைக்கப்பட்டான். அவன் சீர்மிகுந்த ஆற்றலும், சிந்தனையும் கொண்டிருந்ததால் ‘ஏந்தல்’ என்று போற்றப்பட்டான். ஆகவே அவன் ஆண்ட பகுதி வன்மையகோன் ஏந்தல் என்று வழங்கலாயிற்று.
அதுவே பிற்காலத்தில் மருவி வன்னிக்கோனேந்தல் என்று மாறியது. ஆகவே, இந்த ஊர் பெயரில் கோன் என்று இருப்பதை வைத்துக்கொண்டு வன்மையக்கோன், கோனார் குலத்தைச் சேர்ந்தவர் என்று இதுவரை யாரும் சொந்தம் கொண்டாடவில்லை.
அவ்வாறு சொந்தம் கொண்டாடி இருந்தால் வீரன் அழகுமுத்து மறவர் குலத்தை சேர்ந்தவன் என்று இன்று நாம் சான்றாவணங்கலோடு நிரூபிப்பது போன்ற மற்றொரு நிலை எழுந்திருக்கும். பிற்காலத்தில் இந்தப் பகுதி ஊத்துமலை மன்னரின் ஆளுகைக்கு வந்தது. ஊத்துமலை மன்னரும் மறவர் குல மாணிக்கமே என்பது உலகறிந்த உண்மை. பரம்பரை ரத்தம் உடம்பிலே முறுக்கேறி
ஓடும் அறம் காத்த சமுதாயமே!
ஆன்மிகம் வளர – நிலைக்க ஆலயங்கள்
பல அமைத்த அரசகுலத் தோன்றல்களே!
வரிப்புலிகளை கண்டு தறிகெட்டு ஓடிய பூனைகள்
தங்கள் உடலிலே சூடு போட்டுக் கொள்வதாலேயே
பூனைகள் புலிகள் என்று எவரும் கருதிடார்!
ஆனால் தேவைப்படும் நேரத்தில் கூட பாயாமல் பதுங்கும் குணம் கொண்டோரின் பிறவியிலேயே சந்தேகம் வரும்! ஆகவே சந்தேகத்திற்கு என்றும் இடமளிக்காமல் உள்ளத்துள் உத்வேகம் கொண்ட முத்தமிழ் வளர்த்த முக்குலத்துச் சிங்கங்களே – முக்குலம் எனில் கள்ளர், மறவர், அகமுடையார் என மூன்று பிரிவுகளைக் கொண்ட நாம்! நமது மூதாதையராம் சேர,சோழ,பாண்டிய மன்னர்களின் நீதி வலுவா ஆட்சியில், “கள்ளர்” என்பது மறைந்திருந்து பகை மூலத்தையும், நாடு நடப்புகளையும், உள்ளூர் துரோகிகளையும் அறிந்து அரசர்களுக்கு ரகசியமாகக் கூறும் ஒற்றர் படையைக் குறிக்கும் சொல்லாகும்.
“மறவர்” என்பது களத்தில் எதிரிகளை நேருக்கு நேர் சந்தித்து புறமுதுகு காட்டாமல், வீரப் போர் புரிந்து, நாட்டை காத்தோரைக் குறிக்கும் சொல்லாகும்.
“அகமுடையார்” என்பது கோட்டைக்குள் (அகத்தில்) இருந்த படைப்பிரிவினர். இவர்கள் கோட்டையை உள்ளேயும், வெளியேயும் காத்து நின்றோர். கோட்டைக்குள் புகுந்த எதிரிப்படைகளுடன் மோதி, அவர்களை அழிக்கும் வல்லமை வாய்ந்தவர்கள். இது அகமுடையார் பணியாக இருந்தது.
நமது மன்னர்கள் இந்த முக்குலத்தின் ஏக பிரதிநிதிகளாக, முக்குலத்தின் ஒப்பற்ற வீரமும் விவேகமும் கூடிய ஏந்தல்களாக இருந்தனர். மூன்று பிரிவுகளும் சமநிலை உடைய ஆட்சிப்பிரிவுகள். இந்த வரலாற்று உண்மையை நெஞ்சில் பதிய வைப்போம். யாவருக்கும் புரிய வைப்போம்.
இந்திய விடுதலைப் போரில் முதல் பலியானவர்கள் நாம்! ஆங்கில ஏகாதிபத்தியதிற்கு பேராபத்தை விளைவித்தவர்கள் நாம்! ஆட்சியை இழந்தோம்! உறவினர்களை பலி கொடுத்தோம்! உடமைகளை இழந்தோம்! ஆனால் தூக்குக் கையிற்றை முத்தமிட்ட போதும் மானத்தை இழக்காமல், மரணத்தை அணைத்தோம். இந்த வரலாறுகளை நினைவு கூர்ந்து நெஞ்சில் சூடேற்றிக் கொள்வோம். வெள்ளை ஏகாதிபத்திய ஏஜென்ட் கமாண்ட்டெண்ட் கான்சாகிப் பீரங்கிப் படைக்கு தன்னையும், தனது படை வீரகளையும் இந்த மண்ணின் விடுதலைக்காக பலி கொடுத்தவர் கட்டாலங்குளம் மன்னன் மாவீரன் மானமறவன் அழகுமுத்து சேர்வைக்காரன். அந்த மாவீரனின் நேரடி வழித் தோன்றல்களான லெஷ்மிராஜவிடம் இருந்து பல்வேறு தகவல்கள், வீரன் அழகுமுத்து சேர்வைக்காரர் பற்றி கிடைத்தது.
அழகுமுத்து சேர்வைக்காரனின் தந்தை அழகுமுத்து சேர்வைக்காரர் கட்டாலங்குளம் பகுதியை அரசாலும் உரிமையை, மதுரையை ஆண்ட மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் குமாரர் பெரிய வீரப்ப நாயக்கர் அவர்களிடம் ஒரு செப்பேட்டின் மூலம் பட்டயம் பெற்று அரசாண்டார். அந்தப் பட்டயத்தில் அழகுமுத்து சேர்வைக்காரன் புத்திரன் அழகுமுத்து சேர்வைக்காரன் எனக் குறிப்பிடப் பட்டுள்ளதை அறிந்தோம்.
அழகுமுத்து சேர்வைக்காரன் கான்சாகிப்பை எதிர்த்து பெத்தநாயக்கனூர் கோட்டையில் போரிட்டதாகக் கிடைத்திருக்கும் ஆதார நூல் வம்சமணி தீபிகை. இது எட்டையாபுரம் சமஸ்தானத்தில் வேலை செய்த சுவாமி தீட்சிதர் என்பவரால் எழுதப் பட்டது. அதில் அழகுமுத்து சேர்வைக்காரன் மற்றும் 5 படைத்தளபதிகளும் பீரங்கி வாயில் வைத்து சுடப்பட்டதாக குறிப்பிடப் பட்டுள்ளது. எட்டயாபுரம் “ஃபாஸ்ட் அண்ட் பிரசண்ட்” என்ற ஆங்கில நூலை டபிள்யு. இ. கணபதிப்பிள்ளை என்பவர் எழுதியுள்ளார். அதிலும் வம்சமணி தீபிகையில் கூறியுள்ளபடியே சொல்லப்பட்டுள்ளது.
இந்த நூல் தான் தற்பொழுது அழகுமுத்து சேர்வைக்காரர் கான்சாகிப்பை எதிர்த்து போர் புரிந்தார் என்று சான்று காட்டுவதற்கு சிறந்த அடிப்படை நூலாக தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் உள்ளது. அந்த நூலில் அரசர் கொடுத்த பட்டயம் பற்றியும் தகவல் உள்ளது. அதிலும் அழகுமுத்து சேர்வைக்காரன் என்று தான் உள்ளது. 1932 ம் ஆண்டு அழகுமுத்து சேர்வைக்காரரின் வாரிசுதாரர்கள், அவர்களின் கார்டியன் பாக்கியத்தாய் அம்மாள் மூலம் தனது ஜாமீன் சொத்துக்களைப் பாகவிஸ்தி மூலம் பெறுகிறார்கள். சொத்தைப் பெற்றவர்கள் விபரம் கீழ்க்கண்டபடி குறிப்பிடப்பட்டுள்ளது.
1) அழகுமுத்து என்ற துரைச்சாமி சேர்வைக்காரர் இந்து ராயர்.
2) சின்னச்சாமி என்ற குமாரெட்டு சேர்வைக்காரர்
3) இவர்கள் இருவரின் மூத்த மகன்களுக்கு தனது இரண்டு மகள்களை பெண் கொடுத்த அப்பாவு அய்யா சேர்வைக்காரர் என்றே உள்ளது.
அவர் பத்திரத்தில் சாட்சியாகவும் ஜாமீன் மேனேஜராகவும் வருகிறார்.அந்த இரண்டு வாரிசுகள் தான் அழகுமுத்து சேர்வைக்காரரின் நேரடி வாரிசுகள், தற்போதும் வாழ்கிறார்கள்.
மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆட்சித் தலைவர்களுக்கும் ஆதரங்களோடு பலரால் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜமீன் ஒழிப்பின் போது இந்திய அரசால் (எஸ்டேட் அபாலிசன் ஆக்ட் படி) நஷ்ட ஈடு பெற்றவர்களின் சான்று ஆவணம் இன்றும் தமிழ்நாடு அரசு செட்டில்மென்ட் டிபார்ட்மெண்டில் உள்ளது.
அதில்
1) அழகுமுத்து என்ற துரைச்சாமி
சேர்வைக்காரனின் புத்திரர்
காசிச்சாமி சேர்வைக்காரர் (சிவத்தசாமி அவர்களின் தந்தை)
2) சின்னச்சாமி என்ற குமாரெட்டு சேர்வைக்காரர் மற்றும் அவர்களின் புதல்வர்கள்:- அ ) சின்னச்சாமி என்ற குமாரெட்டு சேர்வைக்காரர்
ஆ) சுந்தரராஜ சேர்வைக்காரர் வாரிசுதாரர் லக்ஷ்மிராஜா
இ) துரைராஜா சேர்வைக்காரர்
ஈ) பால்துரை சேர்வைக்காரர்
உ) செல்லச்சாமி சேர்வைக்காரர் என்றே உள்ளது.
இது 1955 க்குப் பின்னர் உள்ள ஆவணமாகும்.
இந்த உண்மையை நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக தேவர் குல மக்களுக்கும், கோனார் குல மக்களுக்கும் தெரியப்படுத்துகின்ற நோக்கத்தில் இச்சிறுநூல் எழுதப்பட்டது.
கட்டாலங்குளத்திற்கான வருவாய்த்துறை ஆவணங்கள், ஊராட்சி ஆவணங்கள், வாக்களர் பட்டியல் இவற்றைப் பார்வையிட்டால், இப்பொழுது கூட ஒரு கோனார் வீடு கூட அங்கு இல்லை என்பதை அறியலாம்.
தற்போது, கட்டாலங்குளம் ஊராட்சித் தலைவராக இருப்பவர் திரு. இரா.கருப்பசாமி பாண்டியன் அவர்கள் என்பது குறிப்படத் தக்கது.
ஆகவே காயங்களை நியாயப்படுத்தக் கூடாது. நியாயங்களை காயப்படுத்தவும் கூடாது. வரலாற்றினைப் பேணுவோம்! மாவீரன் அழகுமுத்து சேர்வையைப் போற்றுவோரை போற்றுவோம். பொதுவில் தியாகிகள் அனைவரையும் போற்றுவோம்.அவர்களது வரலாற்றை நமது வாரிசுகளுக்கு பாடம் சொல்லுவோம்.
“சீறி வந்த புலியதனை முறத்தினாலே சிங்காரத் தமிழ் மறத்தி துரத்தினாளே”
இது நமது அன்னையின் பெருமை. இந்தப் பெருமையை காப்போம்.
இச்சிறுநூல் யாரையும் எள்ளளவும் ம

Tuesday, 30 August 2011

திருக்குன்றக்குடி 1

பாகம் 1
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்

டாக்டர் எஸ்.ஜெயபாரதி


குன்றக்குடி

                    குன்றக்குடி என்னும் ஊர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள முருகன்   ஸ்தலங்களில் ஒன்று. திருப்புத்தூரிலிருந்து காரைக்குடி செல்லும் சாலையின்மீது அது இருக்கிறது. மதுரையிலிருந்து 80 கீலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இதன் மிக அருகில் - சுமார் ஐந்து கீலோமீட்டர் தூரத்தில் பிள்ளையார்பட்டி இருக்கிறது. இந்த வட்டாரத்தில் மிகப்புராதனமான கோயில்களும் ஊர்களும் உண்டு.
                    குன்றக்குடி என்னும் பெயரால் விளங்கும் ஒரு சிறு குன்றின் அடிவாரத்தில் அமைந்த ஊர் குன்றக்குடி. குன்றக்குடி குன்றுக்கு 'மயில் மலை' என்றும் 'மயூரகிரி', 'சிகண்டிமலை'  என்றும் பெயர்கள் உண்டு.  சிகண்டி என்பது மயிலையும் குறிக்கும்.
                    அந்தக் குன்றின் உச்சியில் கோட்டை போன்ற அமைப்புடன் பாதுகாப்பாக விளங்குவது குன்றக்குடி ஸ்ரீஷண்முகநாதன் ஆலயம். வள்ளி தேவசேனா சமேதரராக ஆறுதிருமாமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் பெற்று விளங்கும் திருக்கோலத்தில் இறைவன் தம் திருத்தேவியர்களுடன் எழுந்தருளியிருக்கின்றனர்.
                    'தேனாறு' என்னும் ஆற்றால் வளம்பெற்ற புராதனமான ஊர்.

                    குன்றக்குடி மிகவும் தொன்மையானதோர் ஊர்.

                    பழங்காலத்தில் அது 'தேனாற்றுப் போக்கு திருகுன்றக்குடி' என்ற பெயர் பெற்றிருந்தது. குன்றக்குடி குன்றின் அடிவாரத்தில் ஒரு குடைவரைக் கோயில் இருக்கிறது.
                    அந்த மலையின்மீது சமணர்களின் கற்படுக்கைகள் இருக்கின்றன. பிராம்மி எழுத்துக்களால் ஆன கல்வெட்டும் உண்டு. இவை சங்க காலத்தைச் சேர்ந்தவை.
                    குன்றின் அடிவாரத்தில் உள்ள குடைவரைக் கோயிலை தேனாற்றீசர் அல்லது தேனாற்றீஸ்வரர் கோயில் என்று அழைப்பார்கள். இதில் சில அழகிய சிற்பங்கள் உண்டு. இந்தக் கோயில் ஆயிரத்தெழுநூறு ஆண்டுகளுக்கும் முற்பட்ட கோயில். அதற்கும் முன்பே இங்கு சிவன் கோயில் இருந்திருக்கலாம்.

                    தேனாற்றீஸ்வரமுடைய நாயனார் என்று அக்கோயிலின் குடிகொண்டுள்ள சிவபெருமான் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகிறார். இப்போது அது நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்குச் சொந்தமான கோயிலாக இருக்கிறது. அங்குதான் ஒரு மிகக் கசப்பான அனுபவம் எனக்கு ஏற்பட்டது. ஜாதி வித்தியாசம் ஏற்றத்தாழ்வுகள் இல்லையென்று சொல்கிறார்கள். சொல்லளவில்மட்டும்தான். உண்மை நிலை?

                    'திருக்குன்றக்குடி' என்னும்போது அது பாடல்பெற்ற ஸ்தலமாகத்தான் இருக்கவேண்டும். பிற்காலத்தில் அருணகிரிநாதர் பாடியிருக்கிறார்.
                    ஆனால் அதற்கும் முற்காலத்தில் அது ஏதாவது தேவாரம் பெற்ற ஸ்தலமாக இருந்திருக்கக்கூடும். 'திரு' என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

                    பாண்டிய நாடு முழுமைக்கும் பதினான்கே பதினான்கு பாடல் பெற்ற தலங்கள்மட்டும்தான் இருக்கின்றன என்பது சற்று யோசிக்கவேண்டிய விஷயம்.
                    தில்லையில் கூத்தனாக விளங்கும் தென்பாண்டிநாட்டான் அவ்வாறு விட்டிருப்பானா என்பதும் யோசிக்கவேண்டிய விஷயம்தான்.

                    பதினாறாயிரம், நாற்பதாயிரம் என்று பாடப்பட்ட தேவாரப் பாடல்களில் வெறும் மூவாயிரம், ஆயிரம் பாடல்கள் மட்டுமே எஞ்சின; மற்றவை அழிந்துவிட்டன என்று சொல்லப்பட்டிருப்பதையும் கருத்தில் வலுவாக இருத்திக் கொள்ளவேண்டும்.
                    பல ஸ்தலங்கள் பாடப்பட்டு அவற்றிற்குரிய பாடல்கள் மறைந்திருக்கலாம்.
                    நியமம் என்னும் நாட்டுப்பிரிவில் திருக்குன்றக்குடி இருந்தது. பழங்காலத்தில் ஒரு நாட்டை மண்டலம், வளநாடு, நாடு, ஊர், நகரம், பட்டினம், கிராமம் என்று பிரிவுகளாகவும் உட்பிரிவுகளாகவும் பிரித்திருந்தார்கள். நிர்வாகம், பாதுகாப்பு, வரிவிதிப்பு, நில அளவை போன்ற காரியங்களுக்காக அவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தன.
                    குன்றக்குடி பாண்டிமண்டலத்திலுள்ள கேரளசிங்கவளநாட்டின் உட்பிரிவாகிய கான நாட்டிலுள்ள தேனாற்றுப்போக்கு-நியமம் நாட்டில் இருந்தது. நியமத்தை காங்கேயன் என்னும் சிற்றரசர் பரம்பரை ஆண்டுவந்தது. கங்கை நதிக்கரையிலிருந்து மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டுக்கு வந்த காராளர் குடியைச் சேர்ந்தவர்கள் அந்த பரம்பரையினர்.
                    கேரளசிங்க வளநாடு, கான நாடு, கோனாடு முதலியவை அனைத்தும் இப்போது செட்டிநாடு என்று அழைக்கப்படும் பிரதேசத்தில் இருக்கின்றன. சிவகங்கைச் சீமை, புதுக்கோட்டைச் சீமை ஆகியவற்றில் செட்டிநாடு விளங்குகிறது. குன்றக்குடி சிவகங்கைச் சீமையைச் சேர்ந்ததுதான்.
                    நாட்டுப் பிரிவுகளும் அவற்றின் பெயர்களும் எல்லைகளும் பரப்பளவுகளும் காலப்போக்கில் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன.
                    மிகவும் வளமுடன் இருந்துவந்த குன்றக்குடி இருநூற்றைம்பது  ஆண்டுகளுக்கு முன்னர் க்ஷ£ணித்த நிலையை அடைந்தது.
   
                    அதன் பின்னர் மருது சேர்வைக்காரர்களால் அது மிகவும் பசுமையும் வளமும் கொண்ட இடமாக மாறியது.
                    அதற்கு ஓர் உண்மையான வரலாற்றுக் கதையைச் சொல்ல வேண்டும்.

                    சொல்கிறேன்........

Wednesday, 3 August 2011

தூசு தட்டப்படும் தா.கிருஷ்ணன் வழக்கு. கருணாநிதி விசாரிக்கப்படுவாரா?

கடந்த 2003-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அதிகாலையில் வாக்கிங் சென்ற தா.கிருட்டிணன், நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்டார். மு.க.அழகிரி உள்ளிட்ட 13 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தது போலீஸ். தி.மு.க. ஆட்சியில் இந்த வழக்கின் போக்கு திசை மாறியதால், வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரியது அ.தி.மு.க. அதன்படி, ஆந்திர மாநிலம் சித்தூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
ஆனால், குற்றம் சாட்டப்பட்ட 13 நபர்களையும் நிரபராதிகளாக்கி, விடுதலை செய்தது சித்தூர் நீதிமன்றம். இதை எதிர்த்து தி.மு.க. அரசு மேல்முறையீடு செய்யவில்லை. இந்த நிலையில், 'அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தா.கிருட்டிணன் கொலை வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்!’ என வாக்குறுதி கொடுத்திருந்தார் ஜெயலலிதா. ''தா.கி. வழக்கு மீண்டும் உயிர்பெறும்'' என்கிறார்கள் மதுரையில்! 

'உன்னை வீழ்த்தியவர்கள் இன்று தெய்வத்தின் தண்டனை​யால் வீழ்ந்துவிட்டார்கள். அம்மா ஆட்சியில் உண்மைக் குற்றவாளிகளுக்குச் சட்டப்படி தண்டனை உறுதி!’ என மதுரையில் அ.தி.மு.க. தொண்டர்கள், தா.கி-யின் புகைப்படத்துடன் மெகா சைஸ் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார்கள்.
மே 20-ம் தேதி தா.கிருட்டிணனுக்கு எட்டாம் ஆண்டு நினைவு தினம். இதற்காக மதுரையில் அகமுடையார் இளைஞர் பேரவையினர் நடத்திய தா.கிருட்டிணன் படத் திறப்பு நிகழ்ச்சியிலும் அனல் பறந்தது.
மூவேந்தர் பண்பாட்டுக் கழகத் தலைவர் பரங்குன்றம், ''தா.கி. கொலை வழக்கை சரியானபடி நடத்தவில்லை. அதனால், எல்லோரும் விடுதலையாகிவிட்டார்கள். அப்படி என்றால், தா.கி-யை யார்தான் கொன்னது? நாவரசு கொலை வழக்கில் அப்பீலுக்குப் போன அரசு, தா.கி. கொலை வழக்கில் ஏன் அப்பீலுக்குப் போகவில்லை?'' என்றார் காட்டமாக.

தா.கி. கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வலியுறுத்தி, அவர் கொலையுண்டுகிடந்த இடத்தில் ஜூன் 10-ம் தேதி அகமுடையார் அமைப்புகளைத் திரட்டி உண்ணாவிரதம் இருக்கும் தீர்மானத்தை நிறைவேற்றிப் பேசிய அகமுடையார் இளைஞர் பேரவையின் மாநிலத் தலைவர் ஜெயமணி, ''விதி வலியதுன்னு சொல்வாங்க.
எட்டு வருஷத்துக்கு முந்தி இதே தேதியில்தான் தா.கி-யாரை வெட்டிக் கொன்றார்கள். இப்போது அதே தேதியில், கருணாநிதியின் மகள் கனிமொழி திகார் ஜெயிலுக்குப் போயிருக்கிறார். பெத்தவங்க செஞ்ச பாவம் பிள்ளைகளுக்கு. அது மாதிரி தா.கி-க்குக் கருணாநிதி செய்த கொடுமைக்கு, இப்போது அவர் மகள் கம்பி எண்ணுகிறார்!'' என்றார்.


தேவர் பொலிட் பீரோ உறுப்பினர் அரப்பா பேசுகையில், ''துக்கம் கேட்கக்கூட தா.கி. வீட்டுக்கு கருணாநிதி வரவில்லை. கொலையைக் கண்டித்தோ, இரங்கல் தெரிவித்தோ... பொதுக் குழுத் தீர்மானம்கூட போடவில்லை. அதனால்தான், தா.கி. கொலையின் பின்னணியில் கருணாநிதியும் இருக்கிறார் என்று சொல்கிறோம்.
அவருக்கு இந்தக் கொலையின் ரகசியங்கள் நன்றாகவே தெரியும். அதனால், போலீஸ் மறு விசாரணையை அவரிடம் இருந்து தொடங்க வேண்டும். இப்போது ஸ்பெக்ட்ரம் சதியில் கனிமொழி எப்படி குற்றம் சாட்டப்பட்டுள்ளாரோ, அதுபோல தா.கி. கொலை வழக்கில் கருணாநிதி மீதும் குற்றம் சாட்டப்பட வேண்டும்!'' என்றார்.


இந்த வழக்குபற்றி பரபரப்பான அறிக்கைகளை வெளியிட்டு வரும்  வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், ''மகனைக் காப்பாற்றுவதற்காக கருணாநிதி தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தினார். இன்றைய தமிழக அரசு முறையீடு செய்தால், நீதிமன்றம், மறு விசாரணைக்கும் அப்பீலுக்கும் கட்டாயம் அனுமதி கொடுக்கும். இந்த வழக்கில் இருந்து விடுதலையான சிலர், அப்ரூவராக மாறத் தயாராக இருப்பதாக எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது.
எனவே மறு விசாரணை நடத்தினால்,  அச்சுறுத்தலுக்குப் பயந்து பிறழ் சாட்சியம் அளித்தவர்கள், இப்போது மனசாட்சிப்படி உண்மையைச் சொல்வார்கள். இந்த வழக்கு அப்பீலுக்கு உகந்தது இல்லை என்று ஆந்திர அரசு வழக்கறிஞர் சொன்னதாகச் சொல்கிறார் கருணாநிதி. அவரிடம் யார், எப்போது கருத்துக் கேட்டார்கள் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் நான் கேட்டதற்கு, கடைசி வரை கருணாநிதி அரசு பதில் சொல்லவே இல்லை!
மேலும் இந்த வழக்கில் தா.கி. எழுதிய கடிதங்கள் உள்பட முக்கியமான ஆவணங்களை போலீஸ் மறைத்துவிட்டது. தா.கி-யின் மனைவியை கடைசி வரை நீதிமன்றத்தில் சாட்சி சொல்லவைக்கவில்லை. தா.கி-யின் தம்பி ராமையா, இவர் மகன் நெடுஞ்செழியன் ஆகியோர் பிறழ் சாட்சியம் அளித்ததன் ரகசியம் என்ன? தா.கி-யின் இன்னொரு தம்பிக்கு தி.மு.க. அரசில் முக்கியப் பதவி கொடுத்தது ஏன் என்பதையும் இன்றைய அரசு விசாரிக்க வேண்டும்!'' என்றார்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தடதடக்கப்போகிறது தா.கி. வழக்கு!

வரலாற்றைச் சொல் ! தலைமுறையை உருவாக்கு !!

மருது பாண்டியர் வீர வணக்கம்

Tuesday, 21 June 2011

மருது பாண்டியர்களின் வீரவரலாறு 20

மருது சகோதரர்களின் ஆக்க நிலையான அரசியல் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க, மற்றொன்று கூட்டமைப்புகளை அவர்கள் பல்வேறு கூட்டமைப்புகளை கூட்டிணைவுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகும். கட்டபொம்மன் தலைமையிலான திருநெல்வேலி கூட்டிணைவு விருப்பாச்சிப்பாளைய மன்னர் கோபால நாயக்கர் தலைமையிலான திண்டுக்கல் கூட்டிணைவு, கேரள வர்மன் தலைமையில் அமைந்த மலபார்க் கூட்டிணைவு, துந்தாஜிவாத் தலைமையிலமைந்த மராட்டியக் கூட்டிணைவு, கானிஜகான் தலைமையிலமைந்த கோயம்புத்தூர் கூட்டிணைவு ஆகிய அனைத்தையும் ஒன்றாக இணைத்தனர். ஆங்கில ஆட்சிக்கு எதிராக ஒருமுகப்படுத்தினர். ஆனால் துரதிஷ்டமான இக்கூட்டிணைவுகள் ஒருங்கிணைந்து செயலாற்றத் தொடங்கும் முன்னரே சில நசுக்கப்பட்டன. சில ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியால் கலைக்கப்பட்டன. இருப்பினும் மருது சகோதரர்கள் தங்களின் நோக்கத்திலிருந்து சிறிதும் மனம் தளரவில்லை. ஆங்கிலேயரை எதிர்த்து அவர்களுக்குள்ள நாட்டுப் பற்றை வெளிப்படுத்தினர். ஆங்கிலேய மேலாண்மை எதிர்ப்புப் போர் அவர்களின் துணிவு, அரசியல் செயல்திறம் ஆகியவற்றிற்குச் சான்று பகர்வனவாகத் திகழ்கின்றன.
கர்னல் ஜேம்ஸ் வேல்ஸ் தமது நினைவுகளில் ஓரிடத்தில் மருது சகோதரர்களின் வீழ்ச்சியைப் பற்றி தம் சொந்தக் கருத்தைக் கூறுகிறார். சில மாதங்களுக்கு முன் இதே வழியாகச் சென்று சிறுவயலில் வெ ள்ளை மருதுவின் அரண்மனையில் விருந்தாளியாக இருந்துவிட்டு அதே பிரதேசத்தில் அவரது எதிரியாக மீண்டும் வருவேன் என்பதை நான் சிறிதளவுகூட அறியாததேயாகும். பாஞ்சாலங்குறிச்சி வேறு வழியின்றி ஆயுதம் ஏந்தியுள்ளனர். ஆனால் எனக்குத் தெரிந்த அளவில் மருதுவிற்கு தீர்த்து வைக்க முடியாதபடி எந்தக் குறையுமில்லை. அவர் செய்யும் இந்த கலவரம் தேவையில்லாததாகும். மருதுவை மதிக்கும் அளவிற்கு ஊமத்துரையை நான் மதிக்க முடியாது என இதிலிருந்து நாம் அறிவது மருதுவிற்கு ஐரோப்பிய நண்பர்கள் இருந்தனர் என்பது உண்மைதான்.
ஆனால் அதன் காரணமாகவே அவர்கள் ஆங்கிலேயரின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டனர் எனக் கருத இயலாது.தமது பாளையத்தில் மட்டுமின்றித் தமிழகத்திலிருந்தே இன்னும் ஆழமாகக் குறிப்பிட வேண்டுமனால் இந்தியாவிலிருந்தே ஆங்கில மேலாண்மையை முற்றிலும் அகற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில்தான் அவர்களில் ஒவ்வொரு செயற்பாடும் இருந்தது. மருதுவின் திருச்சி அறிக்கை உன்னிப்பாக கவனித்தால் அதன் உண்மை தெ ள்ளத்தெளிவாக நமக்குப் புரியும். திப்புசுல்தான் மறைவுக்குப் பிறகு சின்னப் பாண்டியரி;ன் விடுதலை வேட்கை கொழுந்துவிட்டு எறிந்தது. ஆங்கில மேலாண்மையை அடியோடு அகற்ற வேண்டுவதன் இன்றியமையாமையை அவ்வறிக்கையில் தெளிவாகச் சுட்டியிருந்தனர். எனவே ஜேம்ஸ் வேல்ஷ் குறிப்பிடுவதைப் போல் மருது சகோதரர்களுக்கு எவ்விதக் குறையும் இருந்ததில்லை என்பது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் வேண்டுமாயின் ஒரு வேளை பொருந்தலாம். ஆனால் பொது வாழ்க்கையில் - குறிப்பாக அரசியல் வாழ்க்கையில் பொருந்தாது.
ஆங்கிலேயரின் தயவில் மருது சகேதாரர்களின் ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்வதற்கு அவர்களுக்கு எத்தனையோ வாய்ப்புகள் இருந்தன. ஆயினும் அவர்கள் எந்தச் சூழலிலும் தம் சொந்த நலனுக்காக ஆங்கிலேயரை நாடவில்லை. விடுதலை வேட்கையின் பொருட்டே ஆங்கிலேயரை எதிர்த்தனர். எனவே தான் மருது சகோதரர்கள் ஆங்கிலேயரைத் தங்கள் சொந்த எதிரியாகக் கருதாமல் இந்த நாட்டின் எதிரியாகக் கருதினர். அன்னாளில் இத்தகைய அரசயில் நோக்கும் இலட்சியமும் பாளையத் தலைவர்களில் சிலரிடையே மட்டுமே இருந்தன. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களில் முன்னிற்பவர்கள் மருது சகோதரர்கள் என்பது வரலாறு காட்டும் உண்மை.
ஆங்கிலேயருக்கு எதிரான மருது சகோதரர்களின் கிளர்ச்சி அரசயில் சார்புடையோர் மட்டும் நடத்திய கிளர்ச்சியன்று, அது மக்கள் கிளர்ச்சியுமாகும். ஆங்கிலேயரின் ஆட்சியலும் ஆற்காட்டு நவாப்பின் நடவடிக்கையிலும் மக்கள் வெறுப்படைந்தனர் தடுக்கின்றர் என்பதை அறிந்து மருது சகோதரர்கள் அவர்களை ஒன்று திரட்டி ஆங்கிலேயரை எதிர்க்கும் மாபெரும் மக்கள் ஆற்றலை உருவாக்கினர். அவர்கள் நடத்திய கிளர்ச்சியில் அனைத்துச் சாதியினரும், அனைத்துத் தொழில்புரிவோரும் கலந்து கொண்டனர். அந்தணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், இஸ்லாமியர் ஆகிய அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றும் ஐரோப்பிய மேலாண்மையினின்றும் மீட்க வேண்டும் என்றும சின்ன மருது தம் திருச்சி அறிக்கையில் அறிவித்திருந்தார். அதற்கேற்ப மறவர், நாடார், தோட்டியர், கள்ளர், மீனவர் எனப் பல சாதியினர் இக்கிளர்ச்சியில் பங்கேற்றனர். மன்னர்களும், குறுநிலத் தலைவர்களும் ஆட்சிபுரிந்த அக்காலத்தில் இத்தகைய வலுவான மக்கள் முன்னணியை மக்கள் ஆற்றலைத் திரட்டிய மருது சகோதரர்களின் மக்களாட்சி பண்பு சிறப்புக்குரியதாகும்.கிளர்ச்சியுடன் நடந்த போதிலும் அம்முயற்சி தோல்வியடைந்தது.
அதற்குப் பல காரணங்களைக் கூறலாம். 1) புதுக்கோட்டை அரசர் விஜயரகுநாதராயத் தொண்டைமானும் தஞ்சாவூர் மன்னரும் ஆங்கிலேயரை அதிகப்படியாக ஆதரித்துப் படையுதவியுள்பட அனைத்து உதவிகளையும் செய்தது. 2) விடுதலைப் போராட்ட வீரர்களிடம் திட்டமிட்ட போர்ப் பயிற்சி இல்லாதது புதிய ரக ஆயுதங்களை கையாளுதுவில் உள்ள தொய்வு. 3) எதிரியின் ஆற்றலை முறியடிக்கத் தகுந்த திட்டத்தைக் கூட்டணியில் வகுக்காதது. 4) அனைத்து கூட்டிணைவுகளும் அந்தந்த இடத்தில் ஒரே காலத்தில் கிளர்ச்சியைச் செய்யாதது. இக்காரணங்களால் ஆங்கிலேயர் கிளர்ச்சிகளை ஒவ்வோரிடமாக நசுக்கினர். இதனால் சிவகங்கைப் பாளையத்திலும் கிளர்ச்சி தோல்வியுற்றது.மருது பாண்டியர்கள் மீது ஆங்கிலேயர்கள் படையெடுத்ததற்குப் பொருத்தமான காரணங்கள் எவையுமில்லை. ஆயினும் அவர்கள் சொல்லும் இரு காரணங்களுக்காகப் போர் தொடுத்தனர். 1) கட்டபொம்மு மறைந்த பிறகு குமாரசாமி எனற ஊமைத்துரைக்கு சிவகங்கைப் பாளையத்தில் அடைக்கலம் கொடுத்தது. 2) சிவகங்கையின் உண்மையான குடிவழியை நிலைநிறுத்த விரும்பியது.
மருது சகோதரர்கள் ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்தது தவறு என்றால் அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு உரிமையுடையவர் ஆற்காட்டு நவாபுமேயன்றி ஆங்கிலேயர் அல்லர். கி.பி. 1792இல் ஆற்காட்டு நவாபுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆங்கிலேயர் பாளையக்காரரிடம் மேலாண்மை செலுத்தும் உரிமையைப் பெற்றிருந்தனர். ஆனால் இந்த ஒப்பந்தம் ஆற்காட்டு நவாபுக்கும் ஆங்கிலேயரின் மேலாண்மையை நிலைநிறுத்தும் பொருட்டும் அவர்களுக்குள் செய்து கொண்ட தன்னல ஒப்பந்தமேயாகும். பாளையக்காரர்களின் நலன்களை முன்னிறுத்து செய்துகொண்ட ஒப்பந்தமன்று. எனவே அது எவ்வகையிலும் எந்தப் பாளையக்காரரையும் கட்டுப்படுத்தும் தகுதி பெற்றதன்று. இந்த ஒப்பந்தத்தில் ஆற்காட்டாருக்கே பின்பு உடன்பாடு இல்லாமல் போய்விட்டது. ஆயினும் ஆற்காட்டு நவாபுடன் ஆங்கிலேயர் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முன்னிறுத்திப் பாளையக்காரர்களை அடக்க முயன்றனர். மருது சகோதரர்களிடமும் இவ்வடக்கு முறையைத்தான் ஆங்கிலேயர்கள் கையாண்டனர்.
ஊமைத்துரைக்கு அடைக்கலம் அளித்ததோ சிவகங்கைப் பாளையத்ததுக்குரிய நேர்குடி வழியினரை மன்னராக அமர்த்ததோ மருது சகோதரர்கள் செய்த குற்றமாயின் அவை தொடர்பாக முறையான விசாரணையை ஆற்காட்டு நவாபுவின் ஒப்புதலில் நடைபெற்றிருக்க வேண்டும. காரணம் முத்துவடுகநாதர் 26-6-1772இல் இறந்த பிறகு வேலுநாச்சியார் எட்டு ஆண்டுகள் கழித்து சிவகங்கையை மீட்ட பொழுது மருதுபாண்டியர்கள் அரும்பாடுபட்டு 40,000 பக்கோடே பணத்தைக் கொடுத்து மீட்ட பொழுது இந்த கேள்விகளை எல்லாம் ஆற்காட்டாரும், ஆங்கிலேயரும் ஏன் கௌரி வல்லபரும் கேட்டிருக்க வேண்டும். அப்பொழுது எல்லாம் குடிவழியைக் கேட்காமல் இப்பொழுது கேட்பது மிகவும் வேதனையான நிகழ்வு. மருது சகோதரர்களை கைது செய்த நிலையில் கூட அவர்களை எத்தகைய விசாரணைக்கும் உட்படுத்தவில்லை. விசாரணை நடத்தினால் சட்டப்படி குற்றம் சுமத்த இயலாது என்பதே இதற்குக் காரணம். ஆற்காட்டு நவாபும் புதுக்கோட்டை தொண்டைமானும் மருது சகோதரர்களை அடக்க வேண்டும் என்று ஆங்கிலேயரை வற்புறுத்தியதும், திருநெல்வேலி ஆட்சித் தலைவர் லூசிங்டன் மருது சகோதரர்களின் செல்வாக்கைக் குறைக்க வேண்டும் என்று திட்டமிட்டதுமாகிய இரு அடிப்படைக் காரணங்களினாலேயே ஆங்கிலக் கம்பெனியார் போர் தொடுத்தனர்.
ஆற்காட்டு நவாபு சிவகங்கையின் வலிமையைக் குறைப்பதற்கு பலமுறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு அம்முயற்சியில் தோல்வியடைந்தார். இதனால் காழ்ப்புணர்வு மேலிட்டு 1786லும் 1788லும் கம்பெனியாருக்கு இரு கடிதங்களை எழுதினர். சிவகங்கையின் மீது படையெடுக்க வேண்டுவதன் முக்கியத்தை அதில் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறே புதுக்கோட்டைத் தொண்டைமானும் எல்லைத் தகராறு என்பதைக் காரணம் காட்டி 1788லும் 1792லும் இருமுறை சிவகங்கைப் பாளையத்தின் மீது படையெடுத்தார். மருது சகோதரர்களுக்கு சிவகங்கைச் சீமையில் உள்ள மக்கள் செல்வாக்கினால் அவரின் முயற்சி தோல்வியுற்றது. இதனால் அவர் மீது வெறுப்பை வளர்த்திருந்தார். எனவே மருது சகோதரர்கள் மீது ஆங்கிலேயர் படையெடுத்தது. சிலரது தூண்டுதலினாலும் விருப்பு வெறுப்புகளை நிறைவு செய்யும் பொருட்டே ஆகும். இவையன்றி வேறு ஒரு பொருத்தமான நோக்கம் எதுவுமில்லை. மருது சகோதரர்களின் அரசியல் வளர்ச்சியையும், எழுச்சியையும் கண்டு ஆங்கிலேயர் அச்சமும் பொறாமையும் கொண்டனர். அவர்கள் மருது சகோதரர்களின் குடும்பத்தினருக்கு அளித்த தண்டனையில் அவற்றைத் தணித்துக் கொண்டனர். சின்ன மருதுவின் 15 வயதே நிரமபிய அவரின் மகன் துரைசாமி என்பவர் நீங்கலாக ஆண்கள் அனைவரையும் எந்த இடத்தில் பிடிபடுகிறார்களோ அதே இடத்தில் தூக்கிலிட்டனர். தாய் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய மாவீரர்களின் குடும்பத்தில் ஆண்கள் யாருமே மிஞ்சக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் செயல்பட்ட ஆங்கிலேயரின் அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத கறையுடையதாகும். காரணங்களை ஆராயாமல், கிளர்ச்சி செய்தவர்களையே விசாரணை இன்றி தூக்கிலிட்டது நாகரிகமற்ற செயலாகும்.
மருது சகோதரர்கள் விடுதலைப் போரில் தோல்வி அடைந்தனர். உண்மைதான் அவர்கள் அப்போரில் வெற்றி பெற்றிருந்தால் நாளடைவில் எல்லோரையும் போல் அவர்களின் பெயர் இப்பொழுது உள்ள சந்ததியினருக்கு தெரியாமல் அல்லவா போய் இருக்கும். போரில் தோல்வி அடைந்தாலும் அவர்களின் வீரம் செறிந்த இலட்சியமும், குறிக்கோளும் தோல்வியடையவில்லை. அவர்கள் தூக்கிலிடப்பட்டதன் பின்னர் 146 ஆண்டுகள் கழித்தே விடுதலை இலட்சியம் நிறைவேறியது. நாடு ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்றது. இத்தனை ஆண்டுகள் கழித்து அடைந்த விடுதலையை அக்காலத்திலேயே எண்ணினர். எழுச்சியுடன் செயல்பட்டனர். அவர்களின் இன்னுயிர் ஈந்தனர். நாட்டுமக்கள் இவ்வாறு எண்ணிப் பார்க்கும் அளவிற்கு அவர்களின் வாழ்க்கை அமைந்ததுதான் அவர்களுக்குரிய வரலாற்றுச் சிறப்பு.
மருது சகோதரர்களைப் பற்றி வரலாற்று உரியவைகள் திட்டமிட்டு அனைத்தையும் அழித்தாலும் அவர்கள் அறிவித்த திருச்சி அறிக்கை ஒன்று மட்டும் அவர்களின் இலட்சியத்தை விளக்கப் போதுமானதாக அமைந்துள்ளது. ஆங்கிலேயர்கள் சில நிகழ்வுகளை பாதுகாத்து வைத்ததினால் ஓர் அளவாயினும் மருது சகோதரர்களின் வீரத்தை எந்தவித சுய விளம்பரம் இன்றி உண்மையை உரைப்பனவாக உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பெரும் எதிரிகளாய் விளங்கிய ஐதர் அலி அவர் மகன் திப்புசுல்தான் ஆகியோர்கூட இத்தயை அறிக்கையை வெளியிடவில்லை. உண்மையில் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த எந்தப் பாளையக்காரரும்(கட்டபொம்மு உள்பட) ஏன்? எந்த இந்திய மன்னரும் இத்தகைய அறிக்கையை துணிச்சலுடன் வெளியிடவில்லை.
இதன் மூலம் தனக்கும், தனது குடிகளுக்கும் பல இன்னல்கள் வரும் என்றும் சின்னப் பாண்டியர் செய்தார் என்றால் என்ன சொல்ல. குறிப்பிடத்தக்க இந்திய வரலாறு ஆவணங்களுள் ஒன்றாக இவ்வறிக்கையைக் கொள்வது பொருத்தமுடையதாகும். ஆங்கில மேலாண்மைக்கு எதிராக இந்திய மண்ணில் எழுந்த எழுத்து வடிவிலான முதல் அறிக்கை இதுவே என்பது வரலாற்றில் நிலை நிறுத்தப்பெறும். இத்தகைய புகழ்மிக்க ஆவணத்தை நிலைநிறுத்தி தங்கள் இன்னுயிரையும் குடும்பத்தினரின் இன்னுயிரையும் பலி பீடத்தில் ஏற்றிக் கொண்ட மருது சகோதரர்களின் தியாகம் வரலாற்றில் என்றும் நின்று நீங்கா இடம் பெறும்.
'
வாழ்க மருதுபாண்டியர்களின் புகழ்
'
ஓங்குக அவர்களின் புகழ்
முற்றும்