Wednesday 11 May 2011

தேவர்(சாதி)

தேவர் என்பது தென் தமிழ்நாட்டில் வாழும் ஒரு சாதியினரையும் குறிக்கும். கள்ளர், அகமுடையார் , மறவர் ஆகிய மூன்று சாதியினரும் தேவர் எனும் சாதியின் கீழ் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். மூன்று சாதியினராக இவர்கள் மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்றும் குறிப்பிடுவதுண்டு.
தேவர் (முக்குலத்தோர்)
தேவர் சமூகத்தினர் போர்க்குணம் படைத்த வீரம்செரிந்தவர்களாக வரலாற்றுகாலம் தொட்டு இன்றுவரை விளங்கி வருகின்றனர்.தேவர் என்போர் கள்ளர்,மறவர் மற்றும் அகமுடையார் இம்மூவரும் உள்ளடக்கிய ஒரு சமூக கூட்டமைப்பு.இம்மூவரும் இணைந்தவொரு வீரவர்க்கமானது முக்குலத்தோர் யென்று வழங்கப்பட்டு வருகிறது.
ஆங்கில காலணித்துவ காலங்களில் அவர்களுக்கு கீழே அடிமைப்படுவதை எதிர்த்து ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தனர்.ஆங்கிலேய ஆதிக்கத்தின் போது தமிழகத்திலிருந்து சட்டிஸ்கர் பகுதிக்கு இடம் பெயர்ந்த தேவரின மக்கள் ஒரு சிறிய சமூகமாய் இன்றளவிலும் வசித்து வருகின்றனர்.
தேவர் (முக்குலத்தோர்) சமூகத்தினர் பெரும்பான்மையானோர் தென் தமிழகத்து மாவட்டங்களை பூர்வீகமாகக் கொண்டுள்ளனர்.மேலும்,தஞ்சை,திருவாரூர்,நாகப்பட்டினம்,புதுக்கோட்டை,திருச்சி யென தமிழகத்தின் பெரும்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.குறிப்பாக தென் தமிழகத்திலும்,மத்திய தமிழகத்திலும் தேவரின மக்கள் அதிகம் காணப்படுகின்றனர்.
முக்குலத்தோர் :
தமிழை வளர்க்க மிகவும் செம்மையான பணிகளை செய்துள்ளனர்.

"கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்" என்ற பாடலை செவி வழி கேட்டறிந்து இருக்கலாம்,

No comments:

Post a Comment