Friday 28 September 2012

நம்பிக்கையைத் தூண்டும் வழிகள்.

1. நம்பிக்கையைத் தூண்டும் வழிகள். 

அடிமனதில் வெற்றிபெற துடிக்கும் எண்ணங்களை வரிசைப்படுத்து..
சிறப்பான வழிகளை தேர்வு செய்..
எப்படி செய்வதென எழுது..
வழக்கமான பணி நேரம் போக இதற்கென நேரத்தை ஒதுக்கு..
தினமும் எப்படி செய்வதென எழுது..
தயார் நிலைக்கு வந்ததும் சரியான சூழலை எதிர் நோக்கு..
தினமும் அதற்காக செயற்படப்போவதை கற்பனை செய், செயலாக்கு..
வெற்றி பெற்றவர் அணுகுமுறையை கையாள்..
தினமும் வெற்றி பெற்றவர்களை பார், படி..
மாதம் தவறாமல் வெற்றி இலக்கை நோக்கி உற்சாகப் பயிற்சியில் ஈடுபடு. .

2. உனக்குள்ளேயே இன்னொரு மனிதனாக உருவெடுத்து தூண்டுதலை வழங்கி வெற்றி பெறு..

3. வெற்றிக்கும் சாதனைக்கும் அடிக்கல்லாய் அமைவது தன்னம்பிக்கையே.

4. கடந்த கால வெற்றிகளையும் தோல்விகளையும் ஆராய்ந்து அதில் சிறந்ததை தெரிவு செய்..

5. உறங்கப் போகுமுன் உள்ளம் உறுதியாகும்படி மனதில் பேசிப்பழகு...

6. உறுதியுள்ள மனிதரோடு அடிக்கடி பேசிப்பழகு..

7. பகை எண்ணங்களை விட்டொழிந்து தைரியமாக செயற்படு..

8. தோல்வியடைந்தாலும் முழுமையான ஆற்றலை இணைத்து செயற்படு..

9. சிறந்த வழியை கண்டெடுத்து உடனடியாக செயற்படு..

10. எப்போதோ சுடுவதற்கு இப்போது ஏன் பயிற்சி என்று கேட்காதே, கேப்டன் சுடச் சொல்லும் போது சுட்டால் குறி தவறிவிடும் நீ பகைவனின் குண்டுக்கு பலியாவாய்.

11. ஒவ்வொரு நாளையும் நிமிடங்களையும், தன் வசமாக்கும் சாகசக்காரராக மாறி ஓர் ஒழுங்கு முறைக்கு கொண்டுவந்து செயற்படுபவனே வெற்றியாளன்.

12. திட்டமிடுவதும் அதன்படி நடப்பதுமே வெற்றி தரும்.

13. வெற்றிபெற எண்ணுபவன் சோர்வதுமில்லை, தடுமாறுவதும் இல்லை..

14. நடக்கும் என்ற எண்ணத்தோடு செயற்பட்டு, எந்தத் தடைக்கும் 
அஞ்சாமல் முன்னேறு...

15. உனக்கே நீ ஆணை பிறப்பித்து செயற்பட்டு வெற்றிபெறு, மற்றவரின் ஆணைக்காக பார்த்திருக்காதே...

16. மாறி வரும் விஞ்ஞான உலகத்திற்கு ஏற்றவகையில் தங்களை மாற்றிக்கொள்ள முடியாத காரணத்தாலேயே பலர் தோல்வி அடைகிறார்கள்...

17. எதையும் பின்தள்ளிப் போடாதே கண்டிப்பாய் இன்றே முடித்துவிட வேண்டுமென எண்ணிச் செயற்படு...

18. எவ்வளவுதான் சிந்தனை இருந்தாலும் அதைச் செழுமையாக்கி ஒரே சமயத்தில் வலுவான விதமாக செலுத்த அழுத்தமான நிர்வாகத்திறன் வேண்டும்.

19. எல்லாப்பக்கமும் திரும்பாமல் ஒரே குறியாக ஒன்றைத் தேர்ந்தெடுத்து முழுக்கவனத்தையும் செலுத்தினால் மாபெரும் வெற்றி கிடைக்கும்.

20. வெவ்வேறு திட்டங்களை தூக்கியெறிந்துவிட்டு ஒரே இலக்கை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதில் வரும் சிக்கல்களை ஆராய வேண்டும். அதை வரிசைப்படுத்தி ஒவ்வொன்றாக தீர்க்க முயல வேண்டும்.

21. மனதை ஒரு நிலைப்படுத்த இப்போதே பழகுங்கள் வெற்றி தானாகத் தேடி வரும்.

22. ஒவ்வொரு நாளும் பல தடவை வெற்றி பெறுவேன் என்ற சிந்தனையை பல தடவைகள் சொல்ல வேண்டும்.

23. பிறர் நம்மை என்னவாக எண்ண வேண்டுமென நினைக்கிறோமோ அதை நாம் முதலில் எண்ண வேண்டும்.

24. வெற்றி என்பது தானாக வராது மற்றவருக்கு உதவுவதாலும் வரும்.

25. வெற்றி என்பது கொடுப்பது, பின் அடைவது இது விளையாட்டல்ல நிஜம்.

26. வெற்றிபெற வைப்பவன் பின் தானும் வெற்றி பெறுவான்.

27. வாழ்க்கையில் வெற்றிபெற விரும்புகிறாயா முதலில் பாராட்டக் கற்றுக்கொள்.

28. பாராட்டுகிற பழக்கமுள்ளவன் ஒருபோதும் தோல்வியடையமாட்டான் அவனை மற்றவர்கள் தோளில் சுமந்து சென்று வெற்றி மேடையில் அமர வைப்பர்.

29. எண்ணங்களோடு உங்களை இணைத்துக் கொள்ளாதீர்கள். உணர்வுகளுக்கான நேரம் வரும், நேரம் போகும். எதிர்மறை எண்ணங்களோடு உங்களை இணைத்தால் அதற்கு அடிமையாவது நிச்சயம்.

30. உங்களைச் சுற்றிப்பாருங்கள். உலகம் முழுவதையும் புரிந்து கொள்ள வேண்டியதைப் புகட்டும் பல்கலைக்கழகம் சுற்றியிருப்பதை உணர்வீர்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஆழமான விசயம் ஒன்றைப் புரிய வைக்கிறது.

31. பறவைகள் கூடு கட்டும்போது ஒரு சொட்டு நீர் கூட உள்ளே புகாத வகையில் கூட்டைக் கட்டும். இந்தப் பொறியியல் அற்புதத்தை எங்கிருந்து அவை பெற்றன. அவை தமது தாய்ப்பறவையின் கருவில் இருந்தே கற்றுவிட்டன. பிறக்கப் போகும் குஞ்சுகள் மீதுள்ள அன்பு, குஞ்சுகளுக்கு கூடுகட்டும் கலையையே கற்றுக் கொடுக்கிறது. 

32. தங்கள் மனைவியைவிட தங்கள் அபிப்பிராயத்தை பலர் அதிகமாக காதலிக்கிறார்கள். இதனாலேயே பலர் தங்கள் மனைவியை மதிக்காது அவமதிக்கிறார்கள். ஆகவே உங்கள் கருத்துக்களை கண் மூடித்தனமாக மதிக்காதீர்கள், உலகத்தில் எந்தக் கருத்தும் மாறக்கூடியதே.

33. பாரம்பரியத்தை சிறிது ஒதுக்கி வைத்துவிட்டு, உறவுப் பிணைப்புக்களை கவனிப்பதில் கவனம் செலுத்துங்கள்.

34. காதலி ஏமாற்றிவிட்டாள் என்று கருத வேண்டாம், காதலி மீது நீங்கள் இதுவரை வைத்திருந்த அபிப்பிராயம்தான் உங்களை ஏமாற்றிவிட்டது என்பதே உண்மை.

35. நீங்கள் இந்த உலகத்தில் பிறந்ததற்கான காரணம் முழுமையாக நடைபெற வேண்டுமானால் குறைந்தபட்சம் மற்றவருக்கு உதவுவதை நிறுத்தாதீர்கள். ஒருவேளை உங்களால் மற்றவருக்கு உதவ முடியாமல் போனால் அவர்களை வேதனைப்படுத்தாதாவது இருக்கப்பாருங்கள்.

36. அறிவு புத்தகங்களில் இருந்து படிக்கும் ஒன்றல்ல, ஒருவர் பழகும் முறையில் இருந்து அவரிடமுள்ள அறிவின் ஆழத்தைப் படிக்கலாம்.

37. ஒருவர் தொழிலில் முன்னேற வேண்டுமானால் 35 சதவீதமான அறிவு போதமானது. 65 சதவீதம் மற்றவர்களோடு எப்படி பழக வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

38. நீங்கள் செய்த தவறு என்னவென்று .. கூறியபடி மற்றவருடன் பேச ஆரம்பிக்க வேண்டாம். புகழ்ச்சியுடன் இடையிலேயே விமர்சனங்களை வையுங்கள்.

39. துறை முகத்தில் இருக்கும் கப்பல் பாதுகாப்பாகவே இருக்கும், அதற்காக கப்பல்கள் எல்லாம் துறைமுகத்திலேயே இருக்க வேண்டுமானால் கப்பல்களே வேண்டியதில்லையே.

40. முதன் முதலில் சிகரட்டை பிண நாற்றமெனக் கூறி ஒதுக்கிய மனிதன் பின்னர் புகைத்தலே ஆண்மைக்கு அழகு என்பது போன்ற பிரச்சாரங்கள் வந்ததும், பிணத்தையும் மறந்து, நாற்றத்தையும் மறந்து அதற்காகவே பணத்தையும் இழந்தான். இப்படித்தான் பிரச்சாரமும், மூளைச் சலைவையும் சமூகத்தை சீரழிக்கக் காரணமாகியிருக்கின்றன.சிகரெட்டை பிடிக்கும்போது தட்டும் சாம்பல், புகையிலையை எரிப்பதால் வருவது அல்ல! உங்களை எரிக்கும்போது கிடைக்கப் போகும், அந்த கடைசி சாம்பல்... அதை, நீங்களே தட்டிப் பார்க்கிறீர்கள் என்பதை உணருங்கள்!     

41. நீ கேட்க முடியாத ஒரு குரலை நான் கேட்கிறேன், அது சொல்கிறது நீ பின்தங்கிவிடக் கூடாது என்று, அதுபோல நீ காண முடியாத ஒன்றை நான் காண்கிறேன் அது என்னை பொருத்தமான இடத்திற்கு அழைத்துச் செல்கிறது. காணவும் முடியாது, கேட்கவும் முடியாத உன்னை நான் எப்படி பின்பற்றுவது ? 

42. தான் செய்ய வேண்டிய வேலையுடன் பிறக்காத மனிதன் எவனும் உலகில் இல்லை. அதை அறிய முன்னரே பிள்ளைகளை பலவந்தப்படுத்தி இன்றய உலகின் மோசமான கல்விக்குள் கட்டாயப்படுத்தித் திணிக்காதீர்கள்.

43. யாரோ ஒருவர் பணம் சம்பாதித்துவிட்டார் என்பதற்காக அவருடைய தொழிலையே நீங்களும் தேர்வு செய்யாதீர்கள்.

44. வாய்ப்பை உபயோகிக்கத் தெரியாத மனிதனுக்கு அதைக் கொடுப்பதால் என்ன பயன் இருக்கப்போகிறது. வாய்ப்பு வந்தும் பலர் செக்குமாடுகளாக இருப்பதற்குக் காரணம், அவர்களுக்கு வாய்ப்பு வருவதும் தெரியாது, போவதும் தெரியாது.

45. வாய்ப்புக் குறைவு என்று கூறுவது பலவீனமான சஞ்சல மனம். உண்மையில் வாய்ப்புக்கள் நிறைந்துள்ளன என்பதே யதார்த்தம்.

46. ஊருக்கு உபதேசம் செய்து தம்மை உத்தமர் போல காட்டுவோர், இரகசியமாக ஒழுக்கம் குன்றி நடப்பது அம்பலமாகும் போது அவர்களே செல்லாக்காசுகளாகிறார்கள்.

47. தன்னை வளர்க்க, உருவாக்க, தயார்படுத்த பொருத்தமான காலம் இளமைப்பருவமாகும்.

48. இந்த உலகம் ஆர்வமுள்ளவர்களுக்கு பரிசாக அளிக்கப்பட்டுள்ள நன்கொடையாகும் அதை அறிந்து உலகை நல்லவிதமாக பயன்படுத்த வேண்டும்.

49. சில நேரங்களில் சில சங்கடங்களை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்

50. பூரணத்துவத்தை மெதுவாகவே அடைய வேண்டும், அதற்குக் காலம் என்ற கை உதவ வேண்டும்.

Read more: http://www.livingextra.com/2012/06/blog-post_14.html#ixzz27lorAurf

1 comment:

  1. Are you in need of finance? we give out guarantee cash at 3% interest rate. Contact us on any kind of finance now: financialserviceoffer876@gmail.com whatsapp Number +918929509036 Dr James Eric Finance Pvt Ltd

    ReplyDelete