Tuesday 21 June 2011

மருது பாண்டியர்களின் வீரவரலாறு 13

மருதுபாண்டியருக்கும் கூட்டுப் படைகளுக்கும் நடைபெற்ற போர்கள்
1788ஆம் ஆண்டில் புதுக்கோட்டைக்கும், சிவகங்கைச் சீமைக்கும் இடையே எல்லைத் தகராறு.
1792
ஆம் ஆண்டிலும் 'மறுபடியும்புதுக்கோட்டை எல்லையைக் காரணம் காட்டி சிவகங்கைச் சீமையுடன் போர் நடைபெற்று, வெ ள்ளையர்களின் அதிகாரத்தினால் இருவருக்கு சமாதான ஒப்பந்தத்தின் மூலமாக உயிர்பலி இல்லாமல் நடந்ததாம்.
1780
ஆம் ஆண்டு துவக்கத்தில் கர்னல் ஸ்டூவர்ட்டின் தலைமையில் ஆங்கிலேயர்களின் படை சிவகங்கை நோக்கிப் படையெடுத்து அப்படைகளில் ஆற்காட்டுப் படை புதுக்கோட்டைப் படை மதுரைப் படை மற்றும் இராமநாதபுரச் சீமையின் படைகள் சுற்றி சூழ்ந்திருந்த எல்லாச் சக்திகளுமே சிவகங்கைச் சீமைக்கு எதிராக கூடி மே மாதம் கொல்லங்குடியைக் கைப்பற்றியது.
1789
ஆம் ஆண்டு மே மாதத்திற்கு மேல் காளையார் கோயிலும் கர்னல் ஸ்டூவர்டின் வசமானது.
அன்னாளில் ஆற்காட்டு நவாப்புக்கும், ஆங்கிலேயர்களுக்கும் பல கடிதத் தொடர்புகள் இருந்தன. அக்கடிதங்களின் வாயிலாக பல செய்திகளை நமக்கு இப்பொழுது தெரிந்தாலும் சில நல்ல விசயங்களை மாத்திரம் பார்ப்பது நன்றாக இருக்கும் . பலரை அவர்களின் வார்த்தைகளால் எல்லையில்லாமல் புகழ்ந்தும் இகழ்ந்தும் உள்ளனர். நல்லதை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
அந்நாளில் ஆற்காட்டு நவாப் முகமது அலி நிறைய ஆடம்பரத்தை விரும்பயிவராக இருந்துள்ளார். அதன் பொருட்டு கடனாளியாகி, கடனைத் திருப்பிக் கொடுக்காமல் இருந்தார். கடைசியாக 1792ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி ஆற்காட்டு நவாப் தமிழகம் முழுவதையும் ஆங்கிலேயருக்கு முழு அதிகாரத்தோடு விட்டு கொடுத்துள்ளார். இந்த நேரத்தில் ஆங்கில ஆட்சியை தென் இந்தியப் பகுதியில் தடுத்து நிறுத்திய திப்புசுல்தான் 4-5-1799ஆம் நாள் ஆங்கிலேயர்களால் கொல்லப்படுகிறார். மருது பாண்டியருக்கு இந்நிகழ்ச்சி மிகவும் துன்பத்தை உண்டாக்குகிறது. அவர்களால்தான் வீரமுடனும், விவேகத்துடனும் மருது சகோதரர்கள் ஆட்சி செய்தனர். அன்னாளில் அவர்கள் கொடுத்து உதவிய ராணுவத் தளவாடங்கள் இன்றளவும் வரலாற்று ஆசிரியர்களால் பேசப்படுகிறது. அப்பொழுது ராக்கெட் வீசும் பயிற்சியை திப்பு சுல்தானிடம் இருந்து பெற்றதாகக் கூறுகின்றனர்.
தென்னாட்டின் கலெக்டராக இருந்த லூஷிங்டன் பல பாளையக்காரர்களை அடக்கினார். அடங்கிப் போனவர்களிடமிருந்து ஏராளமான பொருளை வசூல் செய்து தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டார். அதன் தென் பகுதியின் தலைமையிடமாக இராமநாதபுரம் பகுதி விளங்கியது. இந்த நிலையில் சிவகங்கைச் சீமை முறைப்படிக் கட்ட வேண்டிய கப்பத்தையும் சுணக்கமில்லாமல் ஆங்கிலேயருக்கு கட்டிக் கொண்டு வருகிறது. அப்படி இருந்தும் புதுக்கோட்டைத் தொண்டைமானின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அடிக்கடி தொல்லைப்படுத்தும் ஆங்கிலேயரை இனியும் சிவகங்கைச் சீமையின் நலன்களை மனதில் கொண்டு ஆங்கிலேயர்களின் அடவாடித்தனத்தை விட்டு வைக்கக் கூடாது என மருது பாண்டியர்கள் எண்ணத் தொடங்கினார்கள்.

No comments:

Post a Comment