Tuesday 21 June 2011

மருது பாண்டியர்களின் வீரவரலாறு 17

கௌரி வல்லபத் தேவரின் முடி சூட்டுவிழா
அன்னாளில் மருதுபாண்டியருக்கு மிகவும் எதிரியாகக் கருதப்பட்டவரான கௌரி வல்லபருக்கு நடைபெற்ற முடிசூட்டும் விழாவை கர்னல் ஜேம்ஸ் வேல்ஸ்-இன் நாட்குறிப்பில் இருந்து புதிய சேர்வைகாரரை நியமனம் செய்வதற்கு செப்டம்பர் 12ம் நாள் சிறந்த நாள் என்று இங்குள்ள பிராமணர்களும் மற்றவர்களும் முடிவு செய்தனர். உடையத்தேவர் என்ற கௌரித்தேவர் அலங்காரம் செய்து கொண்டு சம்பிரதாயங்களுடன் சோழபுரம் கோயிலுக்கு வந்தார். அவருக்குப் பாதுகாப்பாக 6வது ரெஜினமெண்டில் 2வது பட்டானியனும் உடன் வந்தது. மற்றபடி மதச் சம்பிரதாயங்களை நடத்திக் கொள்ள அவருக்கு நண்பகல் வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. கர்னல் அக்னியூவும் அவரது அலுவலர்களும் சம்பிரதாய உடைகளை அணிந்து கொண்டு குதிரைப்படை சூடி கர்னல் இன்னஸ் சின் முகாமிற்கு வந்தனர். கர்னல் இன்னஸ் இந்த அணிவகுப்பில் சேர்ந்துகொண்டு கோயிலை நோக்கி நடந்தனர். கோவிலின் முன்பாக இந்த உடைத்தேவரின் கூடாரத்திற்கு முன் எங்களை வரவேற்பதற்காக ஒரு பந்தல் போடப்பட்டிருந்தது. கர்னல் அக்னியூ விலையுயர்ந்த மிக நேர்த்தியான ஆடையை அவருக்கு வழங்கினார். பிறகு குதிரை அணிவகுப்பு வந்தது. பின் ஹௌதா, யானை, மிலிடரி வாத்தியக்குழு ஆகியவை வந்ததும், அந்தப் பெரிய மனிதர்கள் வந்தனர். அப்போது மிலிடரி வாத்தியங்கள், நாட்டு வாத்தியங்கள், போர் கொம்புகள் டாம் டாம் ஆகியவை இணைந்து ஆர்ப்பாட்டமான இசையை எழுப்பினர். பந்தல் முன் வந்ததும் கர்னல் அக்னியூ வலதுபுறமும் கர்னல் இன்னஸ் இடது புறமுமாக ராஜாவை அழைத்து வந்து அங்கிருந்த ஒரு கம்பளத்தின் நடுவே ராஜாவையும், ராஜாவின் சகோதரரை (மூத்த சகோதரர் ஒய்யத்தேவர்) அவரது இடப்புறமாக அமர வைத்தனர். எங்களது நாற்காலிகளை ஒரு அரைவட்ட வடிவில் போட்டுவிட்டு அவர்களுக்கு எதிரே அமர்ந்தோம்.
சிறிது மௌனத்திற்குப் பின் ஒருவர் எழுந்து அரசாங்கத்தின் பிரகடனத்தைப் படித்தார் உடையத்தேவர் என்ற கௌரி வல்லபதேவர், சிவகங்கையின் முதல் இஸ்திமிரார் (ஜமீன்தாராவர்) என்பதுவே அபபிரகடனமாகும். இந்தப் பத்திரத்தை கர்னல் இன்னஸ்-ஸிடம் கொடுக்கப்பட்டதும் அவர் அதைபடித்து தகுந்த முறையில் பாராட்டிப் பேசிவிட்டு புதிய ஜமீன்தார் தனது நன்றியை சிறப்பாகவும் உணர்ச்சி மிகுதியுடனும் கூறினார். மரியாதை நிமித்தமாக பதினோறு பீரங்கிகள் முழங்கின. அந்த இரண்டு கர்னல்களும், இளவரசை யானையின் ஷௌதாவில் ஏற்றி அமர்த்தினர். (ஷௌதா என்பது யானையில் மேல் பொருத்தப்பட்ட இருக்கை இதில் மன்னரோ, சிறப்பு வாய்ந்த குடிமகனோ அமருவர்.) ராஜாங்கத்தைப் பொருத்தமட்டில் அது மன்னர்கட்கு உரித்தானதாகும். நன்றி உணர்வால் இளவரசர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருந்தார். அந்தக் காட்சியானது மிகவும் கவர்ச்சிகரமாக அமைந்திருந்தது என அதை எந்த நாளில் ஏற்பட்ட நிகழ்ச்சியை தத்துவமாக நமக்கு அவர் கைப்பட எழுதியதில் இருந்து உணர முடிகிறது.
கர்னல் அக்னியூவால் ஆடம்பரமாக உடையத்தேவர் என்ற கௌரி வல்லப தேவரை புதிய ராஜாவாக அறிவித்தார். இதுவரை சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த விடுதலை படைகளிடம் இருந்த ஒற்றுமை உணர்வை சாதியின் பெயராலும், பிரித்தாளும் சூழ்ச்சியாலும் குலைந்தது. புதிய ராஜாவும் சிகவங்கைச் சீமைக்குள்ளே புரட்சி செய்த மருதுபாண்டியர்களின் பலத்தைப் பெருமளவிற்குக் குறைத்தார்.
17-8-1801
இல் வெ ள்ளையர்களின் படை பிரான் மலையைப் பிடிக்கப் பல வகைளில் போராடியது. மருது பாண்டியர்களின் வீரர்கள் வேல், வில், வாள், துப்பாக்கிக் குண்டுகள், சிறிய ரக ராக்கெட்டுகள் பயன்படுத்தினார்கள். இருப்பின் இறுதியில் வழக்கம் போல் பாங்கியரின் கோரப் பசிக்கு பிரான்மலையும் வீழ்ந்தது. இன்றளவுகூட மருதுபாண்டியர் பயன்படுத்திய ஒரு பீரங்கி அங்குள்ளது. மருதுபாண்டியர் அவர்களின் ஆயுதச் சாலையை அங்குதான் மிகவும் சிறப்பாக செய்தார்களாம். பிரான்மலை போக உடனே அவர்களின் முழு பலமும் போய்விட்டதாக ஒரு உணர்வு.

No comments:

Post a Comment